எங்க ”வத்தள Buffaloes” அணிக்கும் ”கஜுவத்த எக்சத்” அணிக்கும் இடையிலான ஒரு T20 போட்டியொன்று வத்தள Buffaloes மைதானத்துல நடந்துது; அப்போ நாங்க ”வத்தள Buffaloes” ஃபீல்டிங் செய்துட்டு இருந்தப்போ வழமை போல எருமை மாடுகள்(Buffaloes) கூட்டமொன்று மைத்தானுத்துக்கு நடுவால மைதானத்த க்ரொஸ் பண்ணி போய்க்கொண்டிருந்துது. அதுகள் எல்லாம் போய் முடியும் வரைக்கும் நாங்க எல்லாரும் ஒன்னா கூடி கதைச்சிட்டு இருந்தோம்.
முதல்ல போற எருமை இன்னாருடையது அடுத்தது அன்னாருடைய எருமைனு எருமைகளைக் காட்டி எருமைகளைப் பற்றி கதைச்சிட்டு இருந்தோம்.
இத தள்ளி நின்னு பார்த்துட்டிருந்த ”கஜுவத்த எக்சத்” டீம்நாங்க ஏதோ Game Plan போடுறதாகவும் அவங்கள அவுட்டாக்க ப்ளான் பண்றதாவும் தப்பா நினைச்சிட்டாங்க.
எருமைகள் எல்லாம் போய் முடிஞ்சதும் நாங்க எங்க ஃபீல்டிங்கை தொடங்கினோம்...
எங்க ஃபீல்டிங் முடிஞ்சதும் ”கஜுவத்த எக்சத்” டீம் ஃபீல் பண்ணிட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல ”கஜுவத்த எக்சத்” டீம் காரங்க நீங்க ஃபீல் பண்ணும் போது 2 நிமிசம் டைம் எடுத்து கூடிப் பேசினீங்கதானே... Game Plan போட்டீங்கதானே அது மாதிரி நாங்களும் 2 நிமிசம் டைம் எடுப்போம்னு சொல்லி எடுத்துக்கிட்டாங்க....அப்படி ஆரம்பமானதுதான் Strategic Time out
எருமைகள் மைதானத்துக்குள்ள வரும்போது அவற்றை விரட்ட ஒரு வகையான பயங்கர சத்தம் வாற ஊதியொன்னால ஊதி ஊதித்தான் எருமைகளை விரட்டுவம்.... அதை அப்படியே கொப்பி பண்ணி ஐ.பி.எல் ID TONE ஆக வெச்சிக்கிட்டாங்க.
ஆக ”வத்தள Buffaloes” நாங்க எருமை மாடுகள் போறதுக்காக ஒதுங்கி நின்னத. Strategic Time out ஆகவும்; எருமை மாடுகளை விரட்றதுக்காக ஊதின Sound அ ஐ.பி.எல் ID TONE ஆகவும் வெச்சிக்கிட்டாங்க.
இதுதாங்க Strategic Time out மற்றும் ஐ.பி.எல் ID TONE உருவான வரலாறு.
நன்றி : Fans Talk
0 comments:
கருத்துரையிடுக