சர்வதேச கிரிக்கட் கவுன்சிலான ஐ.சி.சி அண்மையில் தனது
Emirates Elite Panel of ICC Umpires முதல் நிலை நடுவர்கள் குழாமை வெளியிட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் இந்தக் குழாமில் இருந்து தம் தீர்ப்புகளின் மூலம் சர்ச்சைகளைக் கிளப்பி வந்த இருவர் நீக்கப்பட்டு அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டுவரும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழாமில் இலங்கை சார்பாக இதுவரை இருந்துவந்த அசோக்க டீ சில்வா நீக்கப்பட்டிருக்கின்றார். அதேபோன்று அவுஸ்திரேலிய நடுவரான டெரெல் ஹாப்பரும் நீக்கப்பட்டிருக்கின்றார்.
இவர்களிருவரின் இடத்திற்கும் அண்மைக் காலமாக நடுவர்களாக மிகச்சிறப்பாக செயற்பட்டுவரும் இலங்கையின் குமார் தர்மசேன மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமையே இவர்களின் இந்தத் தெரிவிற்கு காரணம்.
அசோக டீ சில்வா பிழையான தீர்ப்புகள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளுக்குள் சிக்கி வந்திருந்தாலும், கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளின் போது அவரது பெறுபேறு மிக மோசமாக இருந்தமையே அவர் விலக்கப்பட்டதற்கான காரணமாகும். இவரின் மோசமான தீர்ப்புகளின் காரணமாக இவர் உலகக் கிண்ணப் போட்டிகளின் முக்கிய போட்டிகளில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது (போட்டி அட்டவணைப்படி அவரே நடுவராக பெயரிடப்பட்டிருந்த போதும் அவற்றிலிருந்து அவர் விலக்கப்பட்டிருந்தார்.)
டெரெல் ஹாப்பரைப் பொறுத்தவரையிலும் அண்மைய உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இவரது பெறுபேறுகளும் மிக மோசமாகவே இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது கிரேம் ஸ்மித்தின் பிடியெடுப்பொன்று விக்கட் காப்பாளாரிடம் சென்றது. அது மீள்பரிசீலனைக்காக 3ம் நடுவரான டெரெல் ஹாப்பரிடம் சென்றபோது அதை அவர் துடுப்பு மட்டையில் பட்ட எந்த சத்தமும் வரவில்லை எனவே அது ஆட்டமிழப்பு அல்ல என்று தீர்மானித்தார். ஆனால் உண்மையில் அது ஒரு ஆட்டமிழப்பு. இது ஆட்டமிழப்பாக இருந்தும் ஏன் 3ம் நடுவரால் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை என்று பின்னர் விசாரித்தால் டெரெல் ஹாப்பர் தனது கணணியின் ஒலி அளவை (Volume) அதிரிகரித்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
இப்படி டெரெல் ஹாப்பரின் பெறுபேறுகள் திருப்தியில்லாததன் காரணமாக அவர் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்படிப்பட்ட குழப்பமான நிலை காரணமாகவே ஐ.சி.சியின் குழு டெரெல் ஹாப்பர் மற்றும் அசோக்க டீ சில்வா ஆகியோரை நீக்கிவிட்டு குமார் தர்மசேன மற்றும் ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ ஆகியோரைத் தெரிவு செய்திருக்கிறது.
இந்த தெரிவினை மேற்கொண்ட தெரிவுக் குழுவில் ஐ.சி.சியின் பொது முகாமையாளர் டேவிட் ரிச்சட்சன், ஐ.சி.யின் முதன்மை போட்டி மத்தியட்சகர் ரன்ஞன் மடுகல்ல, பயிற்றுவிப்பாளர் மற்றும் முதல்தர போட்டிகளின் நடுவரான டேவிட் லொய்ட் மற்றும் முன்னாள் நடுவர் வெங்கட்ராகவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
1996ம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியில் முக்கிய வீரராக இருந்தவர்.
இவர் நடுவரான போது இலங்கையின் வயது குறைந்த சர்வதேச நடுவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.
இந்த தெரிவு தொடர்பில் குமார் தர்மசேன கூறுகையில்,
“இது எனக்கு மகிழ்ச்சியானதும் பெருமையானதுமான ஒரு செய்தி. இந்தத் துறையில் புகழ்பூத்த மதிக்கத்த நடுவர்கள் குழாமோடு என்னையும் இணைத்திருப்பது பெருமைஅளிக்கிறது. நடுவராக எனது பயணத்தை ஆரம்பிக்கையில் நான் அடைய நினைத்த மிகப்பெரிய இலக்கு இது. இதை அடைந்துவிட்டேன். இனி இதைத் தக்கவைத்துக்கொள்ள அயராது உழைப்பேன்” என்று கூறினார்.
தனது தெரிவு பற்றி ரிச்சர்ட் கெட்டெல்ப்ரோ கூறுகையில்:
”இந்தத் தெரிவின் மூலம் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்காலத்தில் வரப்போகும் சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றேன் ”
என்றார்
ஐ.சி.சி இன் முதல் நிலை நடுவர்கள் குழாம் விபரம்.
Emirates Elite Panel of ICC Umpires (2011-12)
Billy Bowden
Aleem Dar
Steve Davis
Kumar Dharmasena
Billy Doctrove
Marais Erasmus
Ian Gould
Tony Hill
Richard Kettleborough
Asad Rauf
Simon Taufel
Rod Tucker
Billy Bowden
Aleem Dar
Steve Davis
Kumar Dharmasena
Billy Doctrove
Marais Erasmus
Ian Gould
Tony Hill
Richard Kettleborough
Asad Rauf
Simon Taufel
Rod Tucker
2 comments:
Wow,,, Congtrs Dharmasena... @Suahil nice job keep it up
@Mohamed Rizad M.B.
thnk u rizad bro thnk u
கருத்துரையிடுக