RSS

பிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..?


பிட்டடிக்கிறது அவளவு ஈசியா போச்சா..?  அதுல எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..? 



ஒரு வருசமா தொடாத புத்தகத்த ஒரே நாள் ராத்திரல எடுத்து விடிய விடிய கண்ணு முழிச்சி வந்த கேள்வி எது வராத கேள்வி எதுவரப்போற கேள்வி எதுன்னு தெரிஞ்சிகிட்டு..  அத சின்னச் சின்னதா எழுதி அத உடம்பு பூரா அங்கங்க எடுத்து சொருகி... அந்த ஒடம்பு பூரா எங்கெங்க பிட்ட வெச்சிருக்கோம்னு அதுக்கு ஒரு மேப்ப போட்டு அந்த மேப்ப எடுத்துகிட்டு எக்ஸாம் ஹோளுக்கு போனா..

 
 


அங்க ஒரு முறட்டு வாத்தியார் வந்து நிப்பாருஅந்த வாத்தியார சமாளிச்சி அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கள சமாளிச்சி இத சமாளிச்சி அத சமாளிச்சு உட்கார்ந்தா அந்த நேரம் பாத்து எக்சாம் இன்ஸ்பெக்சன் குரூப் வரும்அவிங்க பிடிச்சாங்கன்னா லைஃப்ஃபே போயிடும்அவிங்கள சமாளிச்சு….

அப்புறமா கேள்விய வாசிச்சு விளங்கி அது.. எந்த செக்சன்ல வருது..? அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு... போட்டு வெச்ச பிட்-மேப்ல தேடி அது இருக்குற இடத்த கண்டு பிடிச்சி சுப்பர்வைசர் கண்ணுல மண்ணத் தூவிட்டு அந்த பிட்ட எடுத்து சின்னச் சின்னதா எழுதின பிட்ட.. ஜூம் பண்ணி வாசிச்சு. அத பேப்பர்ல எழுதுறதுக்குள்ள சீவன் போயிடும்.

அப்புறம் மத்தக் கேள்விகளையும் வாசிச்சி அதுகளுக்குரிய பிட்டுகளையும் தேடிப் பிடிச்சி அதையும் ஜூம் பண்ணி வாசிச்சி எழுதுறதுன்னா சும்மாவா..? அதுல எம்புட்டு ரிஸ்க் இருக்குன்னு தெரியுமா..?
 



கேள்விய வாசிச்சு விளங்கனும், அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு மேப்ப பாத்து தெரிஞ்சுக்கனும்அந்த பிட்ட சுப்பர்வைசருக்கு தெரியாம எடுத்து ஜூம் பண்ணி வாசிச்சு அத பேப்பர்ல எழுதி பிட்ட உடம்புல எங்க இருந்து எடுத்தமோ அங்க வெக்கிறதுன்னா சும்மாவா..? இதுல டைமிங் எவளவு முக்கியமின்னு தெரியுமா..?


 
 
 இப்படி டைமிங்லையும் ரைமிங்லையும் பிட்டடிச்சிட்டிருக்கும் போது...அதுகுள்ள ஒருத்தன் பின்னாடி முதுக சொறீவான்.  அவனுக்கு என்ன வேணும்னு அவனப்பாக்காமலே தெரிஞ்சிகிட்டு… அவனுக்கும் பிட்ட காமிச்சி நம்மளும் பாசாகி அவனையும் சேர்த்துப் பாசாக்கி…. நீங்கெல்லாம் படிச்சி வாங்கின பட்டத்த... நாங்கெல்லாம் பிட்டடிச்சி வாங்குறதுல எவளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா..?

வீட்ல படிச்சிட்டு எக்சாம் ஹோள்ள போய் வாந்தி எடுக்கிற உங்களுக்கெல்லாம் எங்க தெரியப்போகுது பிட்டடிக்கிறதோட மகிம...?


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 comments:

Rafas சொன்னது…

சபாஷ்..!

Mohamed Faaique சொன்னது…

ரொம்ப ஃபீல் பண்ணி உருகி இருக்கீங்க பாஸ்....

aiasuhail.blogspot.com சொன்னது…

@Rafas
நன்றி பாஸ்

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique
ரொம்ப நன்றி பாஸ்

பெயரில்லா சொன்னது…

Ethan!!!!

aiasuhail.blogspot.com சொன்னது…

@பெயரில்லா
ya sure. ethan + mine = this

Mohamed Rizad M.B. சொன்னது…

பிரயோசனமான பதிவு,,,,,, ஆனால்,, ரொம்ப லேட்டாகி போட்டுடீங்க பாஸ்...... இத 2002/2003 போட்டிருந்தா எவ்வளவு நல்ல இருந்திருக்கும்.....

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.
ஆமா பாஸ் ரொம்ப பேர் இத ரொம்ப மிஸ்பன்னிட்டம்னு சொல்றாங்க.. என்ன செய்ய..?

எதிர்கால சந்ததியாவது பயன் பெறட்டுமே...

Yoga.s.FR சொன்னது…

பொலம்புறவங்க எல்லாரும் படிச்சவங்க போல?ரொம்பவே பீல் பண்ணுறாங்க!

aiasuhail.blogspot.com சொன்னது…

@Yoga.s.FR
ஆமா சார் சேம் ஃபீல்ங் ஹியர்