RSS

தரங்கவின் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது


இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 3 மாதத்திற்கு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.

கடந்த உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் போது இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற அரையிறுதிப்போட்டிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலையில் இவரது உடலில் தடைசெய்யப்பட்ட Prednisone and Prednisolone உள்ளடங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

.சி.சியின் அறிக்கைப் படி உபுல்தரங்க தனது ஆட்டத்திறனை அதிகரிக்க அல்லாமல் தோள்பட்டைவலிக்கான மருத்துவ தேவைக்காக எடுத்துக்கொண்ட ஆயுள்வேத மருந்து மூலமே இது உட்கொள்ளப்பட்டமை உறுதியானதால் இதனை .சி.சியும் ஏற்றிருப்பதால் உபுல் தரங்கவிற்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்குற்றம் சிறியது, பாரதூரமற்றது என்பதாலும் இது வேண்டுமென்றோ திட்டமிட்டோ இடம்பெறவில்லை என்பதை .சி.சி ஏற்றுக்கொண்டிருப்பதாலும் இவருக்கு மே 9 ,2011 என்று பிற் தேதியிடப்பட்டு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 9ம் திகதியோடு இத்தண்டனை நிறைவுக்கு வருகிறது.


இது தொடர்பில் .சி.சி அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்
இந்தமாதிரியான  சம்பவங்கள் ஏனைய வீரர்களுக்கு
ஒரு விழிப்பூட்டும் சம்பவமாக எதிர்காலத்தில் மருந்துகளை உற்கொள்ளும் போது எச்சரிக்கையாக நடந்துகொள்ளத் தூண்டும்” என்றார்.

இது தொடர்பில் உபுல் தரங்க கூறுகையில்”என் சக வீரர்களுக்கு எனது சம்பவம் ஒரு படிப்பினையாகும். எதிர்காலத்தில் மருத்துவத் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ளும் போது எச்சரிக்கயாக இருக்க இச்சம்பவம் வழிவகுக்கும். எனவே எனக்கு நிகழ்ந்தது போல் அவர்களுக்கு இனி  நிகழாது” என்று தெரிவித்தார்.


எது எப்படியோ தரங்கவிற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று பல ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில் 3 மாத தடை என்பது அதுவும் பிற்திகதியிடப்பட்ட 3 மாதத் தடை என்பது தரங்கவிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் ஓரளவு திருப்தியான விடையாமாகவே இருக்கும்.

தற்போது சிறந்த ஃபோமில் இருக்கும் தரங்க அதே ஃபோமோடு மீண்டும் அணிக்குத் திரும்ப எனது வாழ்த்துக்கள்.


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

Mohamed Rizad M.B. சொன்னது…

Good News, best of luck Tharanga....:)

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.

ஆமா பாஸ் நல்ல பிளேயர். பெரிய ஆடம்பரம் இல்லாத சாதரண வீரர்..


மீண்டும அணிக்கு வந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துவோம்

ARV Loshan சொன்னது…

தரங்க அறிந்து செய்திராத தவறு என்பதை ஐ.சி.சீயும் ஏற்றுக் கொண்டுள்ளதனால் தான் இந்தக் குறைந்த தடை.
மீண்டும் வந்து கலக்கட்டும்

aiasuhail.blogspot.com சொன்னது…

@LOSHAN
நிச்சயமாக அண்ணா.

இப்போது இங்கிலாந்தில் ஆடிவரும் அதே அணியோடு தரங்க அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக டில்சானுடன் இணைய, மஹேல மத்தியவரிசைக்கு வந்தால் கண்டாம்பியை வெளியே அனுப்பிவிட்டால்.அனுபவம்+ இளமை கலந்த பலமான அணியொன்று எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கும்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.