RSS

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்...?
என் ட்ரெண்டையெல்லாம் மாற்றி வச்சான்......

Remixxxxxxxxxxxxx..........

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
என் தூக்கத்தை தொலைய வெச்சான்
நீ எங்காச்சும் தொலஞ்சு போடா மச்சான்
என்னை நிம்மதியா இருக்க விடுடா மச்சான்
நட்பு பேசி ஆப்பு வெச்சான்
என் கண்ணில் நீர பொங்க வெச்சான்

தோழன் என்ற பெயரில் ஒரு சகுனியடி
அவன் தூரதில் வருகையில் வயிறு கலங்குதடி
என் வாழ்க்கையில் இப்படி ஒரு சனியடி
எப்படித்தான் வந்து சேர்ந்தானோ தெரியலடி

அவன் நட்பை நானும் பெற்றேன்
அதனாலே யாவும் இழந்தேன்
கீழே கீழே சென்றேன்
படு பாதாளத்தில் விழுந்தேன்

புது பாதை ஒன்றில் கூட்டி சென்றான்
ஆனால் பாதி வழியில் விட்டுச் சென்றான்

சனியனை பனியனில் போட்டவன் போலானேன்
அவன் வந்ததாலே நிம்மதி இழந்தேன்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
என் தூக்கத்தை தொலைய வெச்சான்
நீ எங்காச்சும் தொலஞ்சு போடா மச்சான்
என்னை நிம்மதியா இருக்க விடுடா மச்சான்
நட்பு பேசி ஆப்பு வெச்சான்
என் கண்ணில் நீர பொங்க வெச்சான்

(ஆக்கமும் ஊக்கமும் : ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் அவர்கள்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)


நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் என்ற பகுதியினூடக நான் என் பல்கலைக் கழக வாழ்க்கையில நடத்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்வது வழக்கம் அந்த வகையில் இன்னைக்கும் ஒரு சம்பவத்த பார்க்கலாம்…….. நிகழ்ச்சிய ஆரம்பிக்க முன்னர் ஒரு சிறிய அறிமுகம்
(அச்சச்சோ ரேடியோல பேசுற மாதிரியே வருதே….. சாரி)

சிங்களத்தில அடு (adu) என்றொரு சொல் இருக்கு அத தமிழ்ல்ல சொன்னா குறைவு, கொஞ்சம் அப்படின்னு பொருள்படும்.
அதே நேரம் இத இன்னுமொரு இடத்தில வித்தியாசமா பாவிப்பாங்க அதாவது ஒரு கடையில சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அது போதாம விட்டா ”அடு பத்” கொடுங்கன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சோறு மேலதிகமாக கொடுப்பாங்க…….
இதான் அறிமுகம் இனி மேட்டருக்கு போகலாம்..


பத் அடுவென் ஃபுல் ரைஸ்
Hero "X" missing

நான் இருந்த ரூம்ல மொத்தம் 4 பேர் சில நேரம் 5 பேராகவும் மாறும். இதுல ஒவ்வொருத்தருக்கும் பல பல சுவாரஸ்யமான கதைகளிருக்கு. இன்றைய கதைக்கு  கதாநாயகன் “X" இருக்காரே இவரைச் சுற்றி பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கு. எங்கள் பலகலைக் கழகத்தின் பல சர்ச்சைகளின் நாயகன் இவர்.

ஒரு நாள் நாங்க நண்பர்கள் எல்லாரும் வழமையா சாப்பிடும் ஹொட்டல்கு இரவு சாப்பாடிற்கு போனோம். அந்த ஹொட்டல்ல ப்ரைட் ரைஸ் ரெண்டு விதமாக் கிடைக்கும். ஒன்று நோர்மல் ஃப்ரைட் ரைஸ் அடுத்தது ஃபுல் ஃபிரைட் ரைஸ்.. (அந்த ஹொட்டல்ல இந்த ஃபுல், நோர்மல் சிஸ்டத்தை அறிமுகம் செய்த பெருமை எங்களையே சேரும்) ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னா ஃபுல்னு சொன்னா ரைஸ் அதிகமா இருக்கும். ரெண்டுபேர் சாப்பிடலாம் ஒப்பீட்டளவில் விலையும் குறைவு. வழமையாக நாங்க 4 பேர் போனால். 2 ஃபுல்ரைஸ் போட்டு 4 ப்லேட்ல சமனா(?) பிரிச்சு சாப்பிடுவோம்…(சாப்பிட 10நிமிசம் போகுமெண்டால் அதை சமனா பிரிக்க 30 நிமிசம் போகும்.)

அண்டைக்கு சாப்பிட போனமா போய் நாலு பேரும் போய் உட்கார்ந்தாச்சு. நான் போய் ரைஸ் மாஸ்டர்கிட்ட ”2 ஃபுல் ரைஸ் ப்லேட் 4க்கு தாங்க..... ரைஸ் கொஞ்சம் கூட போடுங்க” (இத சிங்களத்தில எப்படி சொல்லனுமோ அப்படி) சொல்லிட்டு வந்துட்டன். அங்க அவர் ரைஸ் போடுறார்.. நாங்க உற்கார்ந்து எங்கட வழமையான கதைகள் கலாய்ப்புகள்ள ஈடுபட்டுட்டு இருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ "X" திடீர்ன எழும்பி மச்சான் இண்டைக்கு எனக்கு சரியான பசி அவன்கிட்ட போய் ரைஸ்ஸ கூட போட்டு கேக்கனும் இரு நான் சொல்லிட்டு வாறன் எண்டு எழுந்து போனான்.

இங்க என்ன விசயம்னா நம்ம ஹீரோ "X” க்கு  வளவா சிங்களம் பேசத் தெரியாது….. சரி நம்ம ஹீரோ என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு அவரையே பார்த்துட்டு இருந்தோம்…

ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
(
அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
பயபுள்ள இப்படி சொல்லிச்சு…. எங்களுக்கு சிரிப்பு ஸ்டார்ட்..

ரைஸ் மாஸ்டர் : ஃபுல் ரைஸ் த நோர்மல் ரைஸ்த?
(
ஃபுல் ரைஸ்ஸா நோர்மல் ரைஸ்ஸா?)

ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட ரைஸ் அடுவென் தாண்ட….
(
அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)

ரைஸ் மாஸ்டர் : பத் அடுவென் தாலா ரைஸ் கன்னவானம் நோர்மல் ரைஸ் கண்டக்கோ
(சோறு குறைவா போட்டு ரைஸ் எடுக்குறதெண்டால் நோர்மல் ரைஸ் எடுங்களன் )

ஹீரோ "X": நே ஐய்யே ஃபுல் ரைஸ் தமை. பத் அடுவென் தாலா தெண்ட
(இல்ல அண்ணா ஃபுல் ரைஸ்தான் சோறு கொஞ்சமா போட்டு தாங்க)

எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல….  ரைஸ் போடுறவன் ரைஸ் போடுறத அப்படியே நிறுத்திட்டான்…. இன்னும் கொஞ்சம் விட்டா அப்படியே ரைஸ் போடுற சட்டிய இவன் தலையிலையே கவுட்டுவிட்டுருவான்….
நான் அப்படியே சிரிச்சிக்கிட்டே..” டேய் மாப்பூ இங்க வாடா”ன்னு நம்ம ஹீரோ "X" ஐ கூப்பிட்டன்.

வந்தான்.

நான் :டேய் இப்போ உன் பிரச்சினை என்னடா?

ஹீரோ "X": இல்லடா பசிக்குது சோற கூட போட்டு ரைஸ் போடுடான்னு சொன்னா அவன் நோர்மல் எடுக்க சொல்றாண்டா…

நான் : (சிரிச்சிக்கிட்டே..) அத நீ எப்படி சொன்ன?

ஹீரோ "X": ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
(
ஃபுல் ரைஸ் ரெண்டு ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)

நான் : டேய் சோறு அதிகமா வேணும்னு இங்க சொல்லிட்டு அங்க குறைவாப் போடுங்கன்னு சொல்லிருக்கியேடா… லூசா நீ…?

ஹீரோ "X": இல்லியேடா அடுதானே போட சொன்னன்……?

நான் : டேய் ராசா அடுவென் தாண்ட எண்டா கொஞ்சமா போடுங்கன்னுதான் அர்த்தம்

ஹீரோ "X": அப்போ நாம சாப்பிடும் போது சோறு போதாம விட்டா அடு பத் தெண்ட அப்படித்தானேடா கேக்குறது.. அப்படின்னா சோறு இன்னும் தாங்கன்னுதானேடா அர்த்தம்..அதத்தான் அவன்கிட்டையும் சொன்னன்.

நான் : (சபா இப்பவே கண்ணக் கட்டுதே..) டேய் அது… “பத் அடுய் தவ தென்ன” (சோறு போதாது இன்னும் தாங்க) எண்டதுட சோர்ட் ஃபோம்டா.
அதையும் இதையும் குழப்பிக்கிட்டு… போடாங்ங்ங்ங்….

ஹீரோ "X": அடப்பாவீ.... டேய் இது எனக்குத் தெரியாதேடா......
டேய் போடா போய் திரும்ப சரியா சொல்லிட்டு வாடா.. அவன் வேற.... சோற குறைச்சு போட்ருவான்... போடா போய் சொல்லுடா... ப்ளீஸ்...

(எங்களுக்கு ஒரே சிரிப்பு) 


அவனுக்கு விளக்கம் குடுத்திட்டு திரும்ப போய் ரைஸ் ஓடர் பண்ணிட்டு வந்தன். அன்றைய நாள் வயிறு வலிக்க சிரித்ததிலே கழிந்தது.. அதுக்கு பிறகு நம்ம ஹீரோ "X" சாப்பாடு ஓடர் பண்றதே இல்ல.

அன்னைக்கு மட்டுமில அன்னாத்தைய இப்போ பார்த்தாலும் சொல்லி சொல்லி சிரிக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்னு.



………இன்னும் சொல்வேன்………………..




Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், செய்தார்களா...?




இந்த ஃபேஸ்புக் விசித்திரமான பல விசையங்களைக் கொண்டிருக்கிறது
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது
ஆனால் இந்த ஃபேஸ்புக் ஒன்றும் ஆச்சரியமானதல்ல
பேஸ்புக் பாவிக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல
பேஸ்புக்கிலே சர்வ சாதாரணமாக வந்துபோகும் ஜீவன்களில் நானும் ஒருவன்..

பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோக்கு நக்கலடித்தேன்,
ஃபோட்டோக்களை எடிட் பண்ணினேன்
மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்,
ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம்
மறுக்கப் போகிறேன் என்று
இல்லை இலவே இல்லை

பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோவை நக்கலடித்தேன் ஏன் அவர்கள் ஃபோட்டோ கூடாதென்றா? இல்லை நக்கலடிக்கும் விதமாக அவர்கள் ஃபோட்டோ போட்டார்கள் என்பதற்காக

ஃபோட்டோக்களை எடிட் [பண்ணினேன் ஏன்
அவன் ஃபோட்டோக்களை சீரழிக்க வேண்டும் என்றா?
இல்லை என் ஃபோட்டோவை எடிட் பண்ணியதற்கு பழிவாங்குவதற்காக

மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன் ஏன் அவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகவா?
இல்லை
சும்மா கிளு கிளுப்பு கல கலப்பிற்காக

உனக்கெதற்கு கிளு கிளுப்பு யாருக்குமே கிடைக்காத கிளு கிளுப்பு
என்று கேட்பீர்கள்.
ஆமாம் தேவைப்பட்டது என் தனிமையைப் போக்க எனக்குத் தேவைப்பட்டது. எனது சுய நலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது

தரப்படுத்தலில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக நலிந்து போன மேற்கிந்தியத் தீவுகள் அணியை தங்கள் நாட்டுக்கு கூப்பிட்டு அடிமேல் அடி அடித்தார்களே இந்திய கிரிக்கட் அணி அவர்களைப் போல…

என்னைத் தப்பு சொல்கிறீர்களே…. எனது பேஸ்புக் பிண்ணனியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்…நான் பார்த்து வந்த அவமானங்கள் எத்தனை, வில்லங்கம் பிடித்தவர்கள் எத்தனை, பொறாமை பிடித்தவர்கள் எத்தனை என்பதனைக் கணக்குப் பார்த்திட இயலும்

நான் Barn Buddy இல் விவசாயம் செய்ததில்லை ஆனால் பலருக்கு Barn Buddy இல் விவசாயம் செய்ய உதவியிருக்கிறேன்
நான் City Ville  விளையாடியத்தில்லை ஆனால் பலர் City Ville  யில் புள்ளிகள் பெற உதவியிருக்கிறேன்..
நான் சிரித்து மகிழ்ச்சியாக இருந்ததில்லை.. ஆனால் பலர் சிரித்து மகிழ காரணமாயிருந்திருக்கிறேன்

கேளுங்கள் என் கதையை என்னைத் தப்பாக நினைப்பதற்கு முன் கேளுங்கள்

இலங்கையிலே அழகிய சம்மாந்துறையிலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்..
இலங்கையின் தலையெழுத்திற்கு நானென்ன விதிவிலக்கா?
கொழும்பு என்னை அழைத்தது
உயர்ந்தவனாக்கியது தனிமையுமாக்கியது.

தனிமையில் தனியாக உழன்றேன்..
எங்கு செல்வது என்று தவித்தேன்..
நற்புகள் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் அலைந்தேன்
இப்படி தனிமையில் அலைந்த நான் கடைசியில்
என் தனிமையைப் போக்க ஃபேஸ்புக் வந்தேன்

என் பெயரோ அஹமட் சுஹைல்.
எவ்வளவு அழகான பெயர்.
ஆனால் கையில்காசுமில்லை காதலிக்க ஆளுமில்லை

நான் மட்டும் நினைத்திருந்தால் ஃபேஸ் புக்கில் ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கி பலர் வாழ்க்கையைக் கெடுத்திருக்கலாம்
மாடர்ன் ஃபிகரை சட்டிங்கில் மடக்கி ப்ராக்கெட் போட்டிருக்கலாம்.
மற்றவர்களின் அக்கெளண்டை ஹெக் பண்ணீ ப்லாக் மெயில் பண்ணியிருக்கலாம்..
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஃபேஸ் புக் சமூகம்

ஸ்டேடஸ் போட்டால் கலாய்த்தார்கள் ஓடினேன்

ஃபோட்டோ போட்டால் எடிட் பண்ணீ அசிங்கப் படுத்தினார்கள் ஓடினேன்

வேண்டுமென்றே என் ஃபோஸ்ட்டுக்கு லைக் போடாமல் கொமெண்ட் போடாமல் தவிர்த்தார்கள் ஓடினேன்.

சற்றிங்கில் Hi சொன்னால் bye சொன்னார்கள் ஓடினேன்

ஃபேக் அக்கெளண்ட் வைத்து ஏமாற்றினார்கள் ஓடினேன்

குறூப்பாக சேர்ந்து காமெடி பண்ணினார்கள் ஓடினேன்

எனது சொந்த கற்பனையில் வந்த போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்றார்கள் ஓடினேன்.

பொய்யான வதந்திகளை என் மேல் கட்டிவிட்டார்கள் ஓடினேன்

ஓடினேன் ஓடினேன்….. ரொம்பத் தூரம் ஓடினேன்…
Laptop பை விட தூரம் ஓடியதால் Lap top எட்டவில்லை  அதனால் திரும்பி Laptop அருகிலே வந்துவிட்டேன்

பாவம் என் வாழ்க்கை உசைன் போல்டை விடவும் வேகமாக ஓடவேண்டியதாக மாறிவிட்டது.
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க வேண்டும் இன்று  என்னைக் குற்றம் சொல்வோர்..

செய்தார்களா..? சப்போர்ட் பண்ணினார்களா எனக்கு...?

போட்ட ஸ்டேடஸ்களையெல்லாம் கலாய்த்தது யார் குற்றம்?
கலாய்த்த அவர்கள் குற்றமா? இல்லை அவர்கள் கலாய்க்கும் வண்ணம் போஸ்ட் போட்ட என் குற்றமா…?

என் ஃபோட்டோக்களை எடிட் பண்ணியது யார் குற்றம்?
எடிட் பண்ண உதவிய ஃபோட்டொ சொப்பின் குற்றமா? இல்லை மற்றவர்கள் பொறாமைப் பட்டு எடிட் பண்ணி அசிங்கப் படுத்த தூண்டும் வண்ணம் ரொம்ப அழகாய்ப் பிறந்த என் குற்றமா?

ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியது யார் குற்றம்?
ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியவர்களின் குற்றமா…? இல்லை ஃபேக் அக்கெளண்ட் உருவாக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக்கின் குற்றமா?

என் போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்று சொன்னது யார் குற்றம்?
கிட்னியை யூஸ் பண்ணீ யோசித்த என் குற்றமா? இல்லை அதை அப்பட்டமா கொப்பி அடித்த அவர்கள் குற்றமா?

இப்படியானவர்களைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து
சைலண்டாக இருந்த நான் வையலண்டாக மாறினேன்..

இப்படியானவர்கள் ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கும் வரை என்னைப் போன்ற அமைதியான ”அஹமட் சுஹைல்” கள் ஆக்ரோசமான சுனாமிகளாகத்தான் மாறிக் கொண்டிருப்பார்கள்...




** எண்ணம்,எழுத்து  அஹமட் சுஹைல் **

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS