RSS

தீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம்

.

நேற்று என் நண்பி ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விடயம் என்னை மிகவும் பாதித்தது.... லண்டனில் உள்ள என் நண்பி தன் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தைதான் என்னிடம் கூறினார்....

அது இதுதான்...

இலங்கையின் சாய்ந்தமருதைச் சேர்ந்த  ஃபைசுல் இஹ்ஸான் நேற்று முன் தினம் (12/11/2010) லண்டனில் அகால மறணமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.



இவரது ஃபேஸ்புக் கணக்கு....(Click பண்ணவும்)
Add as Friend என வருகிறது.. இவரை நண்பனாக்க நான் தயார்.. ஆனால் அதை உறுதிப்படுத்த அவர் இப்போ இல்லையே...

.இவர் எனக்கு முன்னர் அறியப்பட்டவரோ நண்பரோ அல்ல... ஆனாலும் எந்நாட்டைச் சேர்ந்தவர், எனது ஊருக்கு அருகிலுள்ள ஊரைச்சேர்ந்தவர்




தொழில் நிமித்தம் லண்டனில் இருந்த இவர். ஈஸ்ட் லண்டனில் வசித்துவந்தார். நேற்று முன்தினம் 12/11/2010 இலங்கை நேரப்படி நள்ளிரவு 2.30 மணியளவில் இவரது வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் இவர் மரணமானார்.  தீவிபத்துக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லையாம்.

இவரது  துயரால் இன்னலுறும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மேலைத்தேய கலாச்சாரம் Vs கீழைத்தேய கலாச்சாரம்.

மேலைத்தேய கலாச்சாரம் Vs கீழைத்தேய கலாச்சாரம்.

மேலைத்தேய மக்களினதும் கீழைத்தேய மக்களினதும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படங்கள்  நகைச்சுவையாக இருந்தாலும் பல உண்மைகளும் சுவாரஸ்யங்களும் இவற்றுள் புதைந்துகிடக்கின்றன.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல தகவல்களைத் தாங்கியுள்ள இந்தப் படங்களை நீங்களும் பார்த்து யதார்த்தங்களை அறிந்துகொள்ளுங்கள்.

* நீல நிறத்தால் கட்டமிடப்பட்டது மேலைத்தேய மக்களின் கலாச்சாரம்
  * சிவப்பு நிறத்தால் கட்டமிடப்பட்டது கீழைத்தேய மக்களின்  கலாச்சாரம்


வாழும் விதம்(Way of Life)

தொடர்புகள்(Contacts)


க்யூவில் காத்திருக்கையில்(Queue when Waiting)

ஞாயிற்றுக் கிழமை வீதியில்(Sundays on the Road)


பார்ட்டியில்(Party


                                   உணவு விடுதியில்(In the restaurant)




                                  பிரச்சினைகளை கைய்யாளும் விதம்(Handling of Problems)


                                 மூவேளை உணவு(Handling of Problems)



                                     போக்குவரத்து(Transportation)

வயது முதிர்ந்த காலத்தில்(Elderly in day to day life)


உயர் அதிகாரி(The Boss)



காலநிலைக்கேற்ற மனோநிலை(Moods and Weather)

குழந்தை(The child)

கருத்துகள்(Opinion)

நேர முகாமைத்துவம்(Punctuality)

குறிப்பு :
இதை மின்னஞ்சல்கள் மூலம் பலர் அறிந்திருக்கலாம் அறியாதவர்களுக்காகவே இதைப் பகிர்ந்துகொண்டேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலங்கை அணியின் வரலாற்றுச் சாதனை

நேற்று என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று.. காரணம் இலங்கை அணியின் வரலாற்றுத் தொடர் வெற்றி..

அவுஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கெதிராக பெறப்பட்ட வரலாற்றுத் தொடர் வெற்றி.
இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் 26 வருட பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்றுக் கொண்ட முதலாவது தொடர் வெற்றி.

அவுஸ்திரேலிய அணியுடனான 20-20 போட்டியை வென்றபின்னர் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இதுவரையில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இலங்கை அணியினர் 2-0 என்ற கணக்கில் தம் வசப்படுத்தி வரலாறு படைத்துள்ளனர்.

குமார் சங்கக்கார தலைமையிலான இளம் இரத்தம் பாய்ச்சப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி சகல துறைகளிலும் கலக்குகிறது. மட்டுமல்ல இலங்கை அணியில் சகல துறை இளம் வீரர்கள் நிரம்பி வழிகின்றனர்.

முதலாவது போட்டி மலிங்க + மெத்தியூசின் அசத்தலான 9ம் விக்கட் உலக சாதனை  இணைப்பாட்டத்தின் மூலம் பெறப்பட்டது. அதில் அதிஸ்டமும் கலந்திருந்தது என்று சொன்னாலும் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக மிகச் சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலமாக வெற்றி கிடைத்தது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில்:
உபுல தரங்க(86*) டில்சான்(47), சங்கக்கார(45) ஆகியோர் கலக்க

பந்துவீச்சில்:
மலிங்க(1), நுவன் குலசேகர, திசர பெரேராமுரளீதரன் மற்றும் ரண்டிவ் ஆகியோர் இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியினரின் களத்தடுப்பும் உயர் தரத்தில் இருக்கிறது.

அணியின் இவ்வாறான வெற்றிகள் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு சிறந்த உந்துதலாகவும், உளவியல் ரீதியாக பெரிய பலமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை

இளம் வீரர்கள் முதல் சிரேஸ்ட்ட வீரர்கள்வரை அனைவரும் சகல துறைகளிலும் பிரகாசிக்கின்றனர். அனைவரிடமும் அணி வெல்ல வேண்டும் என்ற தாகம் தெரிகின்றது…அதற்கான போராட்ட குணமும் இருக்கிறது.

இத்தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியையும் வென்று அவுஸ்திரேலிய அணியினருக்கு White Wash கொடுத்து இன்னுமொரு வரலாற்றைப் படைக்க எம் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சிறப்பான ,கட்டுக்கோப்பான, ஒற்றுமையான இவ்வணி இன்னும் சாதிக்கும், வரலாறு படைக்கும்.
அவற்றைக் கண்டு மகிழ காத்திருப்போம்...


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS