RSS

அப்புக்குட்டி from அமெரிக்கா


நம்ம அப்புக்குட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஆ ஊ ந்னா எல்லாரும் அமெரிக்கா பத்திப் பேசுறாங்களேஅப்படி அமெரிக்காவுல என்னதான் இருக்குன்னு ஒரு முறையாவது போய்ப் பாத்துட்டு வந்துடனும்னு.

அதுக்கு என்ன பண்ணலாம்னு டீப்பா திங் பண்ணினப்போ அப்புக் குட்டி மனசுல ஒரு ஐடியா வந்துச்சு

இலங்கைக்கு உல்லாசப் பிரயாணியா வாற யாராவது ஒரு அமெரிக்கர பிடிச்சு அவர்  மூலமா அமெரிக்கா போறதுன்னு முடிவெடுத்த அப்புக்குட்டி அதுல வெற்றியும் பெற்றார்.
ஒரு மாதிரியா அப்புக்குட்டி அமெரிக்காவுக்கு வந்தாச்சு.


அமெரிக்கா வந்த அப்புக்குட்டி அமெரிக்காவ உல்லாசமா உற்சாகமா  கால் நடையாக  சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போ அப்புக்குட்டிக்கு ஒரு சிக்கல். கண்ல பட்டதையெல்லாம் வாங்கி வாங்கி குடிச்சதுல அவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய தேவை வர பொதுக்கழிப்பறையொன்றைத் தேடி அலைந்தார் அப்பு

அப்படியொன்றை எங்குமே காணமுடியல. நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறியதும் நம்ம அப்பு பாதையோரமாக ஒதுக்குப் புறமான இடத்தில் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்து ஓரமா ஒதுங்கினார்..

அப்போது அங்குவந்த அமெரிக்க பொலீஸ் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தி

பொலீஸ்:  இப்படிப் பொது இடங்களை அசுத்தப்படுத்துவது குற்றம் என உமக்குத் தெரியாதா?”

அப்புக்குட்டி : ஐய்யா நான் இலங்கைல இருந்து அமெரிக்காவ சுத்திப்பாக்க வந்திருக்கன். எனக்கு மிக அவசரமாக இருக்கிறது. ஒழுங்கான இடம் எதுவும் கிடைக்கவில்லை. ஆத்திரத்த அடக்கலாம் ஆனால் மூ………. முடியுமா? கொஞ்சம் கருணை பண்ணுங்கள் ஐய்யா..


பொலீஸ்: .. அப்படியா..? எனது பின்னால் வாரும். நான் உமக்கு அதற்குரிய இடமொன்றைக் காட்டுகின்றேன்.

அப்புக்குட்டியும் பொறுமையோடு அவர் பின்னால் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் ஓர் அழகான வளவுக்குள் நுழைந்தனர். அங்கு மிக நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட பசுமையான புற்றரையும் அழகான மலர்ச்செடிகளும் காணப்பட்டன.

பொலீஸ்: இங்கே உமது தேவையை நிரைவேற்றிக்கொள்ளலாம்

அப்புக்குட்டி : என்ன ஐய்யா சொல்றீங்க..? அங்க ரோட்டோரமா ஒதுங்கின என்னை இழுத்துட்டு வந்து.இந்த அழகான மலர்ச்செடிகளின் மீது போகச் சொல்றீங்களே? இது உங்களுக்கே ஓவரா இல்லியா..?


சரி இங்கே எனது தேவையை நான் நிறைவேற்றிக்கொள்ளலாமா..?

பொலீஸ் : ஆம் இங்கே நிறைவேற்றிக்கொள்ளும்.

அவசரமாக தனது தேவையை நிறைவேற்றிக்கொண்ட அப்புக் குட்டிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது
.
(”சபா…….. இப்பதான் ஃப்ரெஸ்ஸா இருக்குஅப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்ட அப்புக்குட்டி பொலீஸ்காரரைப் பார்த்து.)

அப்புக்குட்டி: எவ்வளவு பெரிய மனசு சார் உங்களுக்கு. அமெரிக்கர்களின் பெருந்தன்மை என்பது இதுதானா?  சிறுநீர் கழிக்க ஒதுங்குவதற்க்கு கூட அழகாக கத்தரிக்கப்பட்ட புற்றரையும்.மலர்ச்செடிகளும் நிறைந்த இடமா…?  அமெரிக்கா அமெரிக்காதான் சார்…….

பொலீஸ் : ஹி ஹி அப்படியெல்லாம் எதுவுமில்லை.இது உங்கள் இலங்கை தூதரக வளவு

( சொல்லிட்டு அமெரிக்க பொலீஸ் அதிகாரி தனது வழியில் சென்றுவிட்டார்.)

அப்புக்குட்டி : ?????????


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாரா?-அமெரிக்காவின் மற்றுமொரு நாடகம்


சர்வதேச நாடுகளால் தீவிரவாதி என்ற சாயம் பூசப்பட்ட பின் லேடன்
ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் இஸ்லாத்தினை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மேற்கத்தேயர்களுக்கெதிராகவும் போராடியவர் என்ற வகையில் எனக்கு அவர் ஒரு மாவீரனே. எனக்கு மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரானவர்களுக்கும் அவர் ஒரு மாவீரனே...

பின்லேடன் உயிருடன் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நேற்று அமெரிக்கர்களால் அவர் கொல்லப்படவே இல்லை.
அமெரிக்கர்கள் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றோம் என்று காட்டுவதற்காக எப்படிப்பட்ட ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்றினார்களோ அதேபோன்றதொரு நாடகத்தைத்தான் இப்பொழுதும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

ராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கைது செய்யப்படும் தருணம் முதல் தூக்கிலிட்டுக் கொல்லப் படும் வரையான அத்தனையயும் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர்களுக்கு, சதாம் ஹுசைனை விடவும் முக்கியமான அமெரிக்கா அதிகம் அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன் ஜனாசாவையாவது ஏன்  காட்டமுடியவில்லை?

அப்படியே பின்லேடன் அமெரிக்கர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று வைத்துக்கொண்டால் கூட சர்வதேச யுத்த விதிமுறைகளின் படி ஏன் அவரது உடல் அவரது உறவினர்களிடமோ அல்லது அவர் சார்ந்தவர்களிடமோ ஒப்படைக்கப்படவில்லைபின்லேடன் இறுதிக்கிரையைகள் இஸ்லாமிய முறையில் நடைபெற்றதாகக் கூறும் அமெரிக்கர்கள் ஏன் அதை ஆழ்கடலில் புதைக்க அல்லது கடலில் தூக்கி வீசவேண்டும்.  பின்லேடனின் ஜனாசவையாவது ஒளிப்பதிவில் காட்டியிருக்கலாமே..? புகைப்படத்தினை வெளியிட்டவர்கள் ஏன் ஒளிப்பதிவை வெளியிடவில்லை? ஒசாமா பின்லேடனின் ஜனாசாவை நல்லடக்கம் செய்த இடம் தெரிந்துவிட்டால் அது தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடுமாம். நகைப்பாயிருக்கிறது.

உண்மையில் அடுதான் காரணமா? இல்லை ஒசாமா பின்லேடன் என்று கூறி புதைத்த உடலை பிறகு தோண்டியெடுத்து அது ஒசாமா பின்லேடன் இல்லை என்று நிரூபித்துவிடுவார்கள் என்ற அச்சமா?


பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அவரது புகைப்படத்திலும் பாரிய சர்ச்சை நிலவுகிறது. அது எடிட் செய்யப்பட்ட ஒரு புகைப்படமாகவே இருக்கிறது.
ஒருவரது புகைப்படத்தை அவர் இன்னார்தான் என்பதை மறைப்பதற்காக பொதுவாக அவரது கண்களை கறுப்பு நிறத்தினால் மறைத்து வெளியிடுவார்கள். பொதுவாக  இணையங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் இதனை நாம் கண்டிருப்போம்.
முகம் தெளிவாகத் தெரிந்தால் கூட கண்கள் தெரியாவிட்டால் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.
உடல் கூட தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் கூட அவரது இரு கண்களும்  முற்றாக சேதமுற்ற அமைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் என்னுள் பலத்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.
அந்தப் புகைப்படம் இதோ



ஒசாமா பின்லேடனை நேருக்கு நேரே நின்று கண்களை இலக்கு வைத்து சுட்டதைப் போன்று இருக்கின்றது இந்த புகைப்படம். அப்படி நேருக்கு நேரே ஒசாமா பின்லேடன் சிக்கியிருந்தால் கைது செய்திருக்கலாமே? கண்களை மாத்திரம் சேதமாகிய ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இவர்களை என்னென்று சொல்வது…?

எது எப்படியோ பின்லேடன் என்பவர் ஒரு தனிமனிதர் ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் இயக்கமானது பல நாடுகளுக்கும் பரந்து ஊடுருவி இருக்கும் ஒரு பாரிய வலைப்பின்னல். அதை அவ்வளவு எளிதில் அழித்துவிட அமெரிக்கர்களால் முடியாது. அதே நேரம் அல்குவைதா இயக்கத்தில் ஒசாம பின்லேடனினால் பயிறுவிக்கப்பட்ட ஒசாமாவின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்ட 2ம் நிலைத் தலைவர்கள் பலர் உள்ளனர் அவர்களை என்ன செய்யப்போகிறது அமெரிக்கா…?

நான் இப்படிச் சொல்வதால் அமெரிக்காவினால் பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தமல்ல.
ஒரு வாதத்திற்காக கூறுகிறேன்.
ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஏற்கனவே மரணித்துவிட்டாரா என்பதே மர்மமாக உள்ள நிலையில் அமெரிக்கா தனக்கு அவசியம் தேவையான ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சந்திரனில் கால் பதித்தோம் என்று கூற நடத்திய நாடகத்தைப் போல..


இறுதியாக ஒன்று மட்டும் உண்மை. அமெரிக்காவும் மேற்குலகும் அல்குவைதா போராளிகளின் தாக்குதல்களை விரைவுபடுத்தியிருக்கிறார்கள்.

மேற்குலகும் அமெரிக்காவும் அல்குவைதாவின் தாக்குதல்களை மிக அண்மையில் எதிர்பார்க்கட்டும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்சத்திரப் பலன்


தேர்தலில்
நட்சத்திரங்களும்
சூரியனும்
போட்டியிட்டன

பெரும்பான்மை பலத்தால்
நட்சத்திரங்கல் வென்றன
சூரியனுக்கு
டெபாசிட்பறிபோனது

நட்சத்திர அரசாங்கம்
அமைந்தது

வெளிச்சத்தைப் பேசச்
சூரியனுக்குத்
தடை விதிக்கப்பட்டது.

இருள்
அரசாங்கக் கொள்கையாயிற்று

தூக்கம்
தேசியத் தொழிலாக
அறிவிக்கப்பட்டது.

தாலாட்டு
நாட்டுப் பாடலாயிற்று

தீபங்களின் நாக்குகள்
துண்டிக்கப்பட்டன

இரவுராணிகளின் வாசம்
ஊரெங்கும்
உலா வந்தது

சூரிய காந்தி
பயந்துபோய்
நட்சத்திர காந்திஎன்று
பெயர் மாற்றிக்கொண்டது

அரசாங்கத்தின் முதல் சாதனையாகப்
பாயும் தலையணையும்
இலவசமாக வழங்கப்பட்டன

கன்னக்கோல்களுக்குக்
கொண்டாட்டம்

தாமரைகள் மட்டும்
கூம்பிக் கிடந்தன
குனிந்து.

                                                              - கவிக்கோ.அப்துர் ரஹ்மான் -

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS