RSS

தம்புள்ளை-மஹியங்கனை-கிராண்ட்பாஸ் அடுத்து.........???

நோன்புக்கு கண்டி கொழும்புனு மாறி மாறி இஃப்தார் கொடுத்தானுங்க... இப்போ கிராண்ட் பாஸ்ல மொத்தமா எல்லாரும் சேர்ந்து பெருநாள் ட்ரீட் கொடுத்துட்டானுங்க......

ஒரு குழு வந்து பள்ளிய உடைக்கும்
இன்னொரு குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்
அங்கவெச்சு எல்லாருமா சேர்ந்து முடிவைத் திணிப்பானுங்க...


ஆக பெளத விவகார அமைச்சும் சரி, அரசும் சரி தங்கள் ஆசையை அடக்குமுறையை மத வெறியைக் காட்ட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தைப் பாத்திருக்கின்றது என்பது மட்டும் 100% புலனாகிறது.

 தம்புள்ளை பள்ளியில் ஆரம்பித்து... பொது பலசேனவின் மூலம் ஹலால் பிரச்சினை ஆரம்பித்து அதனை நீக்கியாச்சு,
அடுத்து மஹியங்கனைப் பள்ளி, அதனை அடுத்து மாடு அறுப்பது, இப்போது க்ராண்ட்பாஸ் பள்ளி...

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஆரம்பிப்பது யாரோ காடையர்களாக இருந்தாலும் கடைசியில் அந்தக் காடையர்களுக்குச் சார்பாகவே முடித்துவைப்பது அரசாக இருக்கிறது.
ஆகா அந்தக் காடையர்களுக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
அவர்கள் அரசின் பூரண அனுசரனண பெற்றவர்கள் என்பது சிறுபிள்ளையும் விளங்கிக்கொள்ளும் வெளிப்படை  உண்மை.

அரசின் சில உயர்மட்ட அமைச்சர்களின் அறிக்கைகளை படிக்கக் கிடைத்தது. படிக்கும் போது சிரிப்பும் கூடவே ஆத்திரமும் வருகிறது.

இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் அரசிற்கு எதிரான சக்திகளின் சதி நடவடிக்கையாம், அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளாம்..... #$%^&*(*&^%$

அரசுக்கு எதிரான சதிகாரர்கள்... என்றால் என்ன செய்யவேண்டும்..? அவர்களைக் கைதுசெய்து இந்து சதிகளுக்கு மூளை யார்? அவர்களின் நோக்கம் என்ன? அடுத்த இலக்கு என்ன என்று ஆராய்ந்து அவற்றைத் தடுத்து அரசிற்கு ஏற்படும் களங்கத்தைத் தீர்க்க முனைய வேண்டும். ஆனால் அதைச் செய்தார்களா இல்லை... தாக்குதலில் பங்குபற்றிய ஒருகாடையன் கூட கைது செய்யப்படவில்லை. கமராக்களில் தெளிவான காட்சிகள் இருந்தும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதுவும் நாட்டில் பயங்காரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ள நிலையில்.

அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தார்.... மனித உரிமைப் பிரச்சினையில் அரசு மாட்டிக்கொண்டிருக்கும் தருணம், பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கும் தருணம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சதி வேலையே இது என்று சொல்லியிருந்தார்.... எனக்கென்ன சந்தேகம் என்றால்.... இப்படி ஒரு காரணத்தை இலகுவாகக் கூறி தப்பித்துவிடலாம் என்ற தைரியத்தில் ஏன் இதை நீங்களே செய்திருக்கக் கூடாது...?
இதுவரை ஒருத்தனையாவது கைது செய்யாத நிலையில் அதுதான் உண்மை என எண்ணத் தோன்றுகின்றது...

அல்லாஹ்விற்கு பொய்யாக உருவம் அமைத்து அதனை எரித்தீர்கள்...
இன்று அவனது இல்லத்திலும் கைத்துவிட்டீர்கள்... அல்லாஹ்வின் கோவப் பார்வை உங்களை அழிப்பதை நாங்கள் கண்குளிரப் பார்க்கும் காலம் வெகு தூரத்திலில்லை..... அல்லாஹு  அக்பர்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்று 2013-ஜூலை- 31 பத்திரிகையில் வெளியாகி என்னைக் கவர்ந்த கேலிச் சித்திரம்..........



 
எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கம் நிர்மாணித்த மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றைக் கடுமையாக சாடியவர் தயாசிரி ஜயசேகர...
இப்போது அவர் அரசுக்குத் தாவியதும் அம்மூன்று இடங்களையும் ஜனாதிபதி அவருக்கு சுற்றிக் காட்டுகிறார் அதைப் பார்த்து தயாசிரி எப்படி தான் முதல் சொன்ன கருத்திலிருந்து  பல்டி அடிக்கிறார் என்பதே இச்சித்திரம். கடுமையாக அப்போ சாடிவிட்டு இப்போ Very Good, Realy Good, Good Good Very Good ஆம்.
 (நாய் வேசம் போட்டால் குரைக்கனும் கழுதை வேசம் போட்டால் கத்தணும்.)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தங்க மீன்கள்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று

மகள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்ற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.


அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிஸ்டசாலிகள்
மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
 ஆனால் அப்படி எல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை.


அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும்
 ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும்தான்.





Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS