RSS

--- மலரும் நினைவுகள் ----

அல்லி அர்ஜுணா படத்திலிருந்து  jaanaki, Srinivas பாடிய

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்...
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே.....

பாடல் ஒலிக்கிறது என் மனதிலும் பாடசாலை சம்பவமொன்று நினைவு வருகிறது.

இந்தப் பாடலை O/l படிக்கும் போது பாடசாலையில் ஒரு நாள் எதேச்சையாக பாடிக்கொண்டு போனேன்.  என் பின்னால் வந்த மாணவி ஒருத்தி சீ... போடா என்று
வெட்கப்படுக்கொண்டே ஓடினாள் யாரென்று திரும்பிப் பார்த்தால் என் நண்பி பாஹிமா... ஏன் அப்படி வெட்கப்பட்டாள் அவள்? என்று யோசித்த போதுதான் புரிந்தது.
 நான் பாடிய பாடல் வரிகள்தான் காரணம் என்று

எந்தன் நெஞ்சில்ல் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்... என்ற வரிகள் அவளுக்கு

எந்தன் நெஞ்சில் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமா

என்று கேட்டிருக்கிறது...... ஹ்ம்ம்ம்ம்ம்

அதுக்கப்புறம் விடுவமா நாங்க... பாஹிமாவை எங்க பார்த்தாலும் எந்தன் நெஞ்சில்ல் பாஹிமா
உன் எண்ணம் பாஹிமாதான்..... அவளும் முறைச்சிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிடுவாள்...... ஹ்ம்ம் அது ஒரு காலம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுதந்திர தின வாழ்த்துக்கள்



பல்கலைக் கழக நாட்களில் பல சிங்கள நண்பர்களோடு முரண்பட்டுக்கொண்டதும், வாக்குவாதப்பட்டதும் இலங்கை-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் நாட்களில்தான்.

என்னதான் இலங்கை எம் தாய்நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு உயிரைக் கொடுத்து நாம் ஆதரவு வழங்கினாலும் சில சிங்கள நண்பர்களுக்கு என்னவோ நாம் பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள் என்கிற நினைப்புதான்.

ஹொஸ்டலில், கெண்டீனில் உள்ள டீவிகளில் இலங்கை-பாக்கிஸ்தான் போட்டிகளைப் பார்க்கும்போது இலங்கை அணி வீரர்கள் பாக்கிஸ்தான் விக்கட்டினை வீழ்த்திவிட்டாலோ அல்லது எமது துடுப்பாட்ட வீரர்கள் 4 , 6 என விளாசிவிட்டாலோ அவர்கள் எம்மை நக்கலடிப்பதும் கேலி செய்வதும் வழக்கம்.
இலங்கை அணி வென்றுவிட்டால் அவர்கள் எங்களை வென்றுவிட்டதாக எப்படி அடி? ”என்று நக்கலாகக் கேட்பதும். இலங்கை பாக்கிஸ்தானிடம் தோற்றுவிட்டால் இப்போ உங்களுக்கு சந்தோசம் என்ன? பாருங்கடா அடுத்த மெச்ல அடிப்போம் என்று சவால் விடுவதும் பல சிங்கள நண்பர்களது வாடிக்கை.

அருகில் இருந்து நம்மை அவதானித்த பின்னரும் இலங்கை அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் எமது மகிழ்ச்சியைப் பார்த்த பின்னரும் சிலர் இப்படிக் கேட்பது வேதனை. அதனால் இலங்கை-பாக். போட்டிகள் நடைபெறும்போது சிங்கள நண்பர்களோடு சேர்ந்து பார்ப்பதையே தவிர்த்துவந்தேன்.

இப்படித்தான் ஒரு முறை இலங்கை அணி வெல்லவேண்டும் என மிகவும் எதிர்பார்த்த ஒரு போட்டியில் இலங்கை அணி தோற்றுவிட்ட கவலையோடு நான் பல்கலைக் கழகம் செல்கையில் என்னோடு நன்றாகப் பழகிய சிங்கள நண்பனொருவன் இப்போது உங்களுக்கு உள்ளுக்குள்ள நல்ல சந்தோசமா இருக்குமே.. ஏண்டா இப்படி துரோகிகளா இருக்கீங்க?” என்று என்னிடம் கேட்க நான் அவனோடு வாக்குவாதப்பட்டு பல்கலைக் கழகப் பிரியாவிடையின் போதும் அவனோடு பேசவே இல்லை.

இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் போது எனக்குள் இந்த பழைய ஞாபகங்கள் வந்து சென்றன.

இலங்கையில் பிறந்து வளர்ந்து தாய் நாட்டு பற்றோடு இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு தமது நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டிய துர்ப்பாக்கியம். எமது நாட்டுப் பற்றை நிரூபிக்கவேண்டியது சிங்களவர்களுக்கு அல்ல நாட்டிற்கே.

எவன் என்ன சொன்னாலும் எத்தனை பலசேனாக்கள் ஊளையிட்டாலும் நாம் என்றும் இலங்கையரே. எம் நாட்டின் மீதான பற்று பாசம் ஒரு போதும் குறைந்துவிடாது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வந்தாள் - சென்றாள் - மீண்டும் இறந்துவந்தாள்



அவள் ஒரு அழகிய தேவதை…… பார்ப்பவரை கவர்ந்திழுக்க தேவையான அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகி அவள். பாடசாலை விடுமுறை என்பதால் தன் சொந்த ஊரான சாய்ந்தமருதில் இருந்து எங்கள் ஊரிலுள்ள அவளது உறவினர்களான எங்கள் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களோடு எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தாள்…. அளவாகப் பேசினாள் ஆனால் அழகாகப் பேசினாள்எங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள்; சென்றுவிட்டாள்

சரியாக 2 வாரங்கள்தான் போயிருக்கும் அவள் மீண்டும் வந்தாள்இல்லை இல்லை கொண்டுவரப்பட்டாள்.. அவளது குடும்பத்தைச் சேர்ந்த 5 ஜனாசாக்களோடு ஆறாவதாய் அவளும் உழவு இயந்திரப் பெட்டியில் கொண்டுவரப்பட்டாள்….
.
அந்த அழகிய முகம் முழுவதும் சேறு….. அழகாய் அளவாய்ப் பேசிய வாய் நிறைய கடல் மணல், அற்புத அபிநயங்கள் காட்டிய கைகளிலும் உடலிலும் காயங்கள். ஆக மொத்தத்தில் பெளர்ணமி நிலவு அன்று அமாவாசையாய்க் காட்சி தந்தது. சுனாமியின் கோரப் பிடியில் அந்த தேவதையும் சிக்கிக்கொண்டாள். சிதைந்து போனாள்….

அன்று அழுதன என் கண்கள்பலர் மத்தியில் வெட்கமின்றி அழுதன என் கண்கள்..

அவள் பிரிந்து இன்றுடன் 9 வருடம் ஆனபோதும் இன்னும் நினைவில் இருக்கிறது அவள் முகம்.

எங்கோ இருந்து வந்து ஒரு நாள் பழகிய யாரோ ஒரு உறவுக்காக எனக்கே அந்த வலி அந்த கவலையென்றால்….

இந்தச் சுனாமியால் பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரனை, சகோதரியை, உறவுகளை இழந்த உள்ளங்கள் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கும்?
உணர முடிகிறது உணரமட்டும்தான் முடிகிறது.

இந்த சுனாமியில் உயிர்நீத்த அத்தனை உயிர்களையும் இறைவன் பொருந்திக்கொள்ளவேண்டும்….

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS