இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இறுதி நேர்முகப் பரீடசை இருக்கிறது, அதே நாளில் பல்கலைக் கழகத்தில் பரீட்சையும் இருக்கிறது என்று சொன்னேனில்லையா...????
(அதன் முடிவு என்ன..? என்ன நடந்தது என்று கேட்கவேமாடிங்களா...??? ம்ம்..... நல்ல நண்பர்கள். நீங்கள் கேட்காவிட்டாலும் நானே சொல்கிறேன்.)
பரீட்சையையும் வெற்றிகரமாக முடித்தேன், நேர்முகத்தேர்வினையும் வெற்றிகரமாக முடித்தேன். (அல்ஹம்துலில்லாஹ்)
பரீட்சையை முடித்துவிட்டு எப்படி நேர்முகத் தேர்விற்கு சென்றேன்.. எப்போது சென்றேன் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விடயங்கள். எப்ப போகனுமோ அப்ப கரெக்டா போய் சேர்ந்தேன். ( அல்லாஹ்வுக்கு எல்லா புகழும்)
உயர் அதிகாரிகளில் நல்லவர்களும், மனித நேயமிக்கவர்களும் இன்னுமிருக்கிறார்கள்.
எப்படியோ என் ஒரு வருட கனவு, முயற்சி, அர்ப்பணிப்பு எல்லாம் வீணாகிவிடவில்லை. என் அறிவிப்புத்துறை சார்ந்த பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை. தொடர்கின்றது....
அறிவிப்பாளர் என்ற இலக்கினை நோக்கிய பயணத்தில் இன்னும் போகவேண்டிய தூரமும், அடையவேண்டிய இலக்கும் ஏராழம்.
எனவே நம்பிக்கையோடும், இலட்சிய நோக்கோடும் தொடர்ந்தும் பயணிக்கப் போகின்றேன்.....
1 comments:
i'm soo happy....
all the bst.. u rock pal!!!
கருத்துரையிடுக