நம்ம ஊர்ல எம்.சீ காக்கானு ஒருத்தர் இருக்காரு. அவரு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆனா திடீரென பழகுறவங்களுக்கு அவர பாத்தா அப்படி ஒரு எண்ணமே வராது… சில நேரம் அவர் யோசிக்குறமாதிரி நல்ல மனநிலையில உள்ளவங்ககூட யோசிக்கமாட்டாங்க..
ஒரு நாள் எம்சீ காக்க செஞ்ச வேலையா நினைச்சா விழுந்து விழுந்து சிரிக்கலாம்…
இப்படித்தான் அன்னைக்கு நம்ம எம்சீ காக்கா… வீட்ல இருந்தாரு.. அந்த நேரம் பள்ளிவாயல்ல அசர் தொழுகைக்கான அதான் ஒலித்தது… நம்ம எம்சீ காக்கா என்ன பண்ணினார் உடனடியா வுழூ செய்துட்டு பள்ளிக்குப் போய்… இமாம் ஜமாத் ஆரம்பிக்க முதல்லையே தனியா அசர் தொழுது முடிச்சிட்டு வெளிய வந்தாரு…
இதப்பாத்துட்டு இருந்த நம்ம பள்ளி முஅத்தினார்… எம்சீ காக்காவ கூப்பிட்டார்.
முஅத்தினார் : என்ன எம்சீ… இன்னும் இமாம் ஜமாஅத் ஆரம்பிக்கல.. நீங்க என்ன
தனியா தொழுதுட்டு போறிங்க என்ன இது.. ஜமாஅத்தா தொழுதுட்டு
போகலாமே…
எம்சீ: இங்க வாங்க மோதினார்… இத வாசிங்க…
(அப்படின்னு சொல்லிட்டு பள்ளி சுவர்ல தொங்கிக் கொண்டிருந்த பலகையைக்
காட்டினார்..)
முஅத்தினார் : ஆமா அதுக்கு என்ன இப்போ..?
எம்சீ : அதுல என்ன எழுதி இருக்கு சத்தமா வாசிங்க..
முஅத்தின்: “ பிறர் உங்களை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுது
கொள்ளுங்கள்”
எம்சீ : ஆமா அதத்தான் நான் செய்தன்… இமாம் வந்து தொழுவிக்க முதல் நான்
தொழுதுட்டன்… சரிதானே… வர்ட்டா….
(அப்படி சொல்லிட்டு போயிட்டே இருந்தார்)
முஅத்தின் : @@@@@@@@@@@@@@
** அநேகமான பள்ளிவாயல்கள்ள சந்தூக்கின் படம் போட்டு அதன் கீழே இந்த வாசகத்தைப் போட்டிருப்பாங்க…” பிறர் உங்களை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுது கொள்ளுங்கள் ” மரணத்திற்கு முன் தொழுது கொள்ளுங்கள் அதாவது உங்கள் மரணத்தின் பின்னர் பிறர் உங்களுக்கு ஜனாசா தொழுகை தொழுவிக்க முதல் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள் என்பதை அது குறிக்கும்….. ஆனா நம்ம எம்சீ காக்காட அறிவு எப்படி வேலை செய்திருக்குனு பாருங்களன்….
3 comments:
என்னமா யோசிக்கிரனுங்க... ..
// ம.தி.சுதா கூறியது...
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com///
நன்றி நண்பா...தொடர்ந்தும் இணைண்டிருப்போம்..
//Mohamed Faaique கூறியது...
என்னமா யோசிக்கிரனுங்க... ..//
ஹ ஹா.. பாருங்களன் என்னமா யோசிக்கிறாங்க....
நன்றி பாஸ்...
கருத்துரையிடுக