RSS

ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள்?

அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்திட்டிருந்த காலமது.
பொதுவாக ரஸ்யாவின் அரசவிடையங்கள் யாவும் மிகவும் ரகசியமாகப் பேணப்படும். ஆனால் அமெரிக்காவின் விடையங்கள் பகிரங்கமானது அல்ல எனினும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் (அப்போது சோவியத் ரஸ்யா) யார் முதலாவதாக விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்புவது என்ற கடும் போட்டி நிலவியது.

இதில் முந்திக்கொண்ட ரஸ்யர்கள் முதன் முதலாக  1957 ஒக்டோபர் 4 ல் லைக்கா என்ற பெட்டை நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்டனர்.

இங்கே ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள் என்று ஆராய்ந்தால் பரீட்சார்த்த முயற்சி என்பதையும் தாண்டி ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று இருக்கிறது.

சோவியத் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் நிலவி வந்த விண்வெளி ஆராச்சியில் முந்திக்கொண்ட சோவியத் ரஸ்யா அமெரிக்காவுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பியது.

எங்கள் பெட்டை நாய்கள்கூட வெண்வெளிக்கு செல்கின்றன. ஆனால் அமெரிக்கர்களால் இன்னும் விண்வெளியை அடையமுடியவில்லை  

என்பதுதான் அந்தச் செய்தி. இதற்காகவே வேண்டுமென்றே சோவியத் ரஸ்யா நாய் ஒன்றை அதுவும் பெட்டை நாயொன்றை முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பியது

இதன் பின்னர் கடுமையான ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எஃப்.கென்னடி தங்கள் விஞ்சானிகள் அமைச்சர்கள் உயர்மட்ட அதிகாரிகளை அழைத்து அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவர் ரஸ்யாவின் இந்த செயற்பாட்டினால் தாம் அவமானப்பட்டதாகவும். தாமும் உடனடியாக விண்வெளி ஓடமொன்றை விண்ணுக்கு  அனுப்பவேண்டுமென்று ஆக்ரோசமாகப் பேசினார்.


இன்னொரு தகவல்

சந்திரனுக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சிக் குறிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்ள அங்கே சாதாரண போல் பொயிண்ட் பேனாவினைப் பயன்படுத்த முடியாது. போல் பொயிண்ட் பேனாவானது புவியீர்ப்பின் அடிப்படையில் இயங்குவது.. ஆனால் சந்திரனில் புவியீர்ப்பு விசை மிகக் குறைவு எனவே இந்தப் பேனாக்களைப் பயன்படுத்த முடியாது.

இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பதென்று ஆராய ஒரு கூட்டத்தினை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஏற்பாடு செய்தனர். இதில் பல நிபுணர்கள் கலந்து தங்கள் தீர்வுகளைத் தெரிவித்தனர், இவற்றுள் ஒரு மெக்கனிக்கல் எஞ்சினியர் ஒருவரின் தீர்வே ஒப்பீட்டளவில் செலவு குறைந்ததும் சாத்தியமானதாகவும் இருந்தது.

அவரது தீர்வு மோட்டர் மூலம் இயங்கக்கூடிய பேனாவை உருவாக்குவது என்றதாக அமைந்திருந்தது. அதற்கு செலவு அதிகம் என்றாலும் ஒப்பீட்டளவில் ஏனையவற்றைவிட செலவு குறைவாகவே இருந்தது. எனவே அதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்; இது தமது மாபெரும் கண்டுபிடிப்பென்றும் இதன் மூலம் சந்திரனில் குறிப்பெடுப்பதற்கு இருந்த சிக்கலை தாம் தீர்த்துவிட்டதாகவும் சர்வதேச அரங்கில் மார்தட்டிக் கொண்டனர்.

இதற்கு பதிலலளித்த சோவியத் ரஸ்ய ஆராய்ச்சியாளர்கள்..
மாபெரும் பத்திரிகையாளர் மாநாட்டை ஏற்பாடு செய்து..

இந்தப் பிரச்சனைக்கு நாம் எப்போதோ தீர்வு கண்டுவிட்டோம், பேனாக்களை சந்திரனில் பயன்படுத்த முடியாது என்பது உண்மையே ஆனால் அங்கு சாதாரண பென்சில்களைப் பயன்படுத்துவதில் எந்த சிக்கலுமில்லை. நாங்கள் பென்சில்களையே பயன்படுத்துகிறோம்
இதற்குப் போய் பல லட்சங்களை செலவிட்ட அமெரிக்கர்களின் முட்டாள்தனத்தை என்னென்பது…?

என்று நக்கலாக ஒரு அறிக்கைவிட்டனர்.

இதன் போது உடைந்த அமெரிக்கர்களின் மூக்கு எப்போது மீண்டும் ஒட்டிகொண்டது என்பது எனக்குத் தெரியவே தெரியாது.Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 comments:

அஞ்சா சிங்கம் சொன்னது…

அந்த நாயின் பெயர் லைக்கா ................

Ahamed Suhail சொன்னது…

@அஞ்சா சிங்கம்

நாயின் பெயர் லைக்காதான்...

அதுல ஏதும் பிரச்சினையா.....??


வருகைக்கு நன்றி.
மீண்டும் வருக

Bavan சொன்னது…

சுவாரஸ்யமான விடயங்கள்..:)
பகிர்வுக்கு நன்றி தல..;)

Ahamed Suhail சொன்னது…

@Bavan

நன்றி பாஸ்....

எனக்கும் இன்ரெஸ்ட்டா இருந்துதா அதான் கப்புன்னு போட்டுட்டன்.

வந்ததுக்கு நன்றி பாஸ்
அடிக்கடி வாங்க பாஸ்

Ahamed Suhail சொன்னது…

@Bavan

நன்றி பாஸ்....

எனக்கும் இன்ரெஸ்ட்டா இருந்துதா அதான் கப்புன்னு போட்டுட்டன்.

வந்ததுக்கு நன்றி பாஸ்
அடிக்கடி வாங்க பாஸ்

Jhona சொன்னது…

தொடரடும் உங்கள் பயணம்


இரும்புகோட்டை
Jhona

Ahamed Suhail சொன்னது…

@Jhona
நன்றி சகோதரா
உங்கள் வருகைக்கு

தர்ஷன் சொன்னது…

சுவாரசியமான தகவல்கள் நண்பரே
அந்த பென்சில் கதையின் பாதிப்பில்தான் த்ரீ இடியட்ஸ் காட்சி அமைந்திருக்கும் நன்றி

Ahamed Suhail சொன்னது…

@தர்ஷன்

நன்றி சகோதரா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

தொடர்ந்தும் இணைந்திருப்போம்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

தகவலுக்கு நன்றி

Ahamed Suhail சொன்னது…

@யோ
வொய்ஸ் (யோகா)


வருகைக்கு நன்றி சகோதரா..

மீண்டும் வருக

velu சொன்னது…

தகவலுக்கு நன்றி

Ahamed Suhail சொன்னது…

@velu

வருகைக்கு நன்றி சகோதரா.

மீண்டும் வருக.