2012ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான இலச்சினை (லோகோ) மற்றும் உலகக் கிண்ண போட்டி அட்டவணை, மைதானங்களின் விபரங்கள் என்பனவற்றின் வெளியீடு மற்றும் உலகச் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் உலகக் கிண்ணத்தின் அறிமுகம் என்பன நேற்று கொழும்பில் Ceylon Continental Hotel இல் ஐசிசி இன் தலைமை நிருவாகி ஹாரூன் லோகார்ட், இலங்கை கிரிக்கட் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் உபாலி தர்மதாச, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணித் தலைவி சசிகலா சிரிவர்தன ஆகியோரின் கலந்துகொள்ளலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஹாரூன் லோகார்ட்,சங்கக்கார, சசிகலா சிரிவர்தன மற்றும் உபாலி தர்மதாச ஆகியோரும் இரு உலகக் கிண்ணங்களும் |
மகளிருக்கான கிண்ணத்தோடு இலங்கை மகளிர் அணித் தலைவி உள்ள நிலையில் ஆடவருக்கான கிண்ணத்தோடு ஏன் இலங்கை அணித் தலைவர் டில்சான் இல்லை என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. பின்னர் புரிந்துகொண்டேன்.. இவ்வருடம் ஐசிசி இன் இரு விருதுகளை அதிலும் குறிப்பாக மக்கள் தெரிவு விருதைப் பெற்றவர் என்பதால் குமார் சங்கக்காரவுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கலாம். என்று புரிந்துகொண்டேன்
2012 செப்டெம்பர் 6ம் திகதி ஆரம்பமாகும் போட்டிகள் ஒக்டோபர் 7ம் திகதி இடம்பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகளுடன் நிறைவுக்கு வருகின்றது.
தொடர்ச்சியாக 20 நாட்களில் 42 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆண்களுக்கான 27 போட்டிகளும் பெண்களுக்கான 15 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 ICC T20 உலகக் கிண்ண இலச்சினை |
நேற்று வெளியிட்டு வைக்கப்பட்ட இவ் இலச்சினையில் உள்ள வளைந்த எழுத்துக்கள் இலங்கையின் பெரும்பான்மையானவர்களான சிங்களவர்களைக் குறிப்பதோடு, சிவப்பு வண்ணம் மற்றும் திரவக் கோடுகள் இலங்கையர்களின் கலை மற்றும் பண்பாடுகளைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இச்சின்னத்தில் உள்ள சுழல் பந்துவீச்சாளர், கிரிக்கட் பந்து எனபன கிரிக்கட்டையும் குறிக்கின்றன.
2012ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையின் முக்கிய 4 மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இதில் மகளிருக்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகல மைதானம், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஆண்கள் பெண்கள் இரு சாராருக்குமானா ICC T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒக்டோபர் 7ல் இடம்பெறும்.
இலங்கை அணியானது சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணியுடன் குழு C இல் இடம்பெற்றிருக்கிறது.
எதிர்வரும வருடம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணப்போட்டியானது ஐ.சி.சி T20 உலகக் கிண்ணப் போட்டிகளின் நான்காவது உலகக் கிண்ணப் போட்டியாக இலங்கையில் இடம்பெறவிருக்கின்றது. முந்தைய மூன்று உலகக் கிண்ணத்தொடர்களில் முதலாவது தொடர் தென்னாபிரிக்கா(2007) இலும் 2வது இங்கிலாந்தில்(2009) இலும் 3வது உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் (2010) இலும் இடம்பெற்றன.
2012 இலங்கை ஐ.சி.சி T20 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்துவதன் மூலம் இலங்கையில் நடைபெறும் ஐ.சி.சியின் 5வது மிகப் பிரமாண்ட கிரிக்கட் நிகழ்வாக இது இருக்கும். முன்னதாக 1996 உலகக் கிண்ணப் போட்டிகள் அதனைத் தொடர்ந்து 2002ல் சம்பியன் கிண்ணப் போட்டிகள் அதனைத் தொடர்ந்து 2006ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் என்பவற்றோடு இறுதியாக 2011 உலகக் கிண்ணப் போட்டிகளையும் இலங்கை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஐ.சி.சி T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை (ஆண்களுக்கானது)
Tue Sep 18 19:30 local
1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota
Wed Sep 19 15:30 local
2nd Match, Group B - Australia v TBC
R Premadasa Stadium, Colombo
Wed Sep 19 19:30 local
3rd Match, Group A - India v TBC
R Premadasa Stadium, Colombo
Thu Sep 20 19:30 local
4th Match, Group C - South Africa v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota
Fri Sep 21 15:30 local
5th Match, Group D - Bangladesh v New Zealand
Pallekele International Cricket Stadium
Fri Sep 21 19:30 local
6th Match, Group A - England v TBC
R Premadasa Stadium, Colombo
Sat Sep 22 15:30 local
7th Match, Group C - Sri Lanka v South Africa
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota
Sat Sep 22 19:30 local
8th Match, Group B - Australia v West Indies
R Premadasa Stadium, Colombo
Sun Sep 23 15:30 local
9th Match, Group D - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium
Sun Sep 23 19:30 local
10th Match, Group A - England v India
R Premadasa Stadium, Colombo
Mon Sep 24 19:30 local
11th Match, Group B - West Indies v TBC
R Premadasa Stadium, Colombo
Tue Sep 25 :30 local
12th Match, Group D - Bangladesh v Pakistan
Pallekele International Cricket Stadium
Thu Sep 27 15:30 local
13th Match, Super Eights, Group 1 - TBC v TBC (C1 v D2)
Pallekele International Cricket Stadium
Thu Sep 27 | 19:30 local
14th Match, Super Eights, Group 1 - TBC v TBC (A1 v B2)
Pallekele International Cricket Stadium
Fri Sep 28 15:30 local
15th Match, Super Eights, Group 2 - TBC v TBC (D1 v C2)
R Premadasa Stadium, Colombo
Fri Sep 28 19:30 local
16th Match, Super Eights, Group 2 - TBC v TBC (B1 v A2)
R Premadasa Stadium, Colombo
Sat Sep 29 15:30 local
17th Match, Super Eights, Group 1 - TBC v TBC (C1 v B2)
Pallekele International Cricket Stadium
Sat Sep 29 19:30 local
18th Match, Super Eights, Group 1 - TBC v TBC (B1 v C2)
Pallekele International Cricket Stadium
Sun Sep 30 15:30 local
19th Match, Super Eights, Group 2 - TBC v TBC (D1 v A2)
R Premadasa Stadium, Colombo
Sun Sep 30 19:30 local
20th Match, Super Eights, Group 2 - TBC v TBC (B2 v D2)
R Premadasa Stadium, Colombo
Mon Oct 1 15:30 local
21st Match, Super Eights, Group 1 - TBC v TBC (A1 v C1)
Pallekele International Cricket Stadium
Mon Oct 1 19:30 local
22nd Match, Super Eights, Group 1 - TBC v TBC (B1 v D1)
Pallekele International Cricket Stadium
Tue Oct 2 15:30 local
23rd Match, Super Eights, Group 2 - TBC v TBC (A2 v C2)
R Premadasa Stadium, Colombo
Tue Oct 2 19:30 local
24th Match, Super Eights, Group 2 - TBC v TBC
R Premadasa Stadium, Colombo
Thu Oct 4 19:00 local
1st Semi-Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo
Fri Oct 5 19:00 local
2nd Semi-Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo
Sun Oct 7 19:00 local
Final - TBC v TBC
R Premadasa Stadium, Colombo
4 comments:
are dates correct?
@Mohamed Faaique
ம்ம்.. அப்படித்தான் நினைக்கிறன்.
க்ரிக் இன்ஃபோ தளம் தந்தது.
திருத்தம் இருந்தா சொல்லுங்க செக் பண்றன்.
"2010 ICC"
correct it..
@Mohamed Faaique
நன்றி சகோ....
கருத்துரையிடுக