RSS

கற்றுக்கொண்ட பாடங்களும் பெற்றுக்கொண்ட படிப்பினைகளும்


இலங்கை கிரிக்கட் வரலாற்றின் மிக மோசமான தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை வீரர்களினதும் ரசிகர்களினதும் மனதை உடைத்துவிட்ட மிக மோசமான தொடர் இது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாக 3 மாதங்களே உள்ள நிலையில் இந்தத் தொடர் தோல்வி இலங்கை வீரர்களின் உளநிலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.

பல எதிர்வினைகளை இந்தத் தொடர் தோற்றுவிற்றிருந்தாலும் அவற்றை எமக்குச் சாதகமாக்கிப் பார்த்தோமானால்

இந்தத் தொடர் இலங்கைத் தெரிவாளர்களை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் மூலம் எழுந்தமானமான அணித் தெரிவு இல்லாமல் மிக நுணுக்கமாக ஆராய்ந்து மிகச் சரியான அணியினை தெரிவு செய்ய வேண்டிய தேவையினை அது அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

இங்கிலாந்து தொடர் வெற்றி ஆசியக் கிண்ண, T20 உலகக் கிண்ண வெற்றிகள் என்று இந்த வருடத்தில் பெறப்பட்ட வெற்றிகளால் இலங்கை அணி வீரர்களுக்குள் ஏற்பட்டிருந்து over confident இனை பூசியமாக்கிவிட்டிருக்கிறது. எனவே இது அவர்களை தீவிரமான பயிற்சி மற்றும் அதீத ஈடுபாட்டோடு விளையாடுவதற்கு உந்தும். (இதனையும் சாதகமாகக் கொள்ளலாம்)

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்கள் முன்னதாக தாம் தீர்மானித்துவைத்திருக்கும் உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி திட்டத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்னும் நுட்பங்களுடன் கூடிய அதிக பயிற்சிகளினை வழங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

இலங்கை அணியினர் தமது பெட்டிங் பவர் பிளே ஓவர்களை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவையினை இத்தொடர் உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தொடர் முழுவதும் இலங்கையின் பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என அனைத்து துறைகளும் அ School boy cricket எனும் அளவுக்கு பாடசாலை மட்டத்துக்கு ஒப்பானதாகவே இருந்தது. சர்வதேச தரத்தில் இருக்கவில்லை. எனவே இதில் அதிக கவனம் செழுத்தவேண்டிய தேவையை அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்தொடர் உணர்த்தியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் மெத்யூஸ் தனது வழமையான ஃபோர்மில் இருப்பதையும் டில்சான்,மஹெல ஆகியோர் சராசரியான ஃபோர்மில் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கிடைத்த இரு போட்டிகளிலும் அரைச் சதங்களைப் பெற்றதன் மூலம் திரிமான்ன தனது இடத்தினை சிறப்பான முறையில் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இவர்கள் தவிர சங்கக்கார உட்பட யாருமே இந்தத் தொடரில் சிறப்பாகச் செயட்படவில்லை. எனவே தெரிவாளர்களுக்கு தெரிவுக்கான பரப்பு பாரிய அளவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

டில்சானுக்கு சோடியாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக யாரினைக் களமிறக்குவது என்ற பாரியதோர் சிக்கல் நிலை தற்போது உருவாகியுள்ளது. காரணம் குசால் பெரேரா, தரங்க ஆகிய இருவரும் Out of form இல் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.   முதல் ஓரிரு ஓவர்களுக்குள்ளே முதலாவது விக்கட் வீழ்த்தப்படுவதால் ஏனைய வீரர்களுக்கு அது பாரிய அழுத்தத்தினை கொடுப்பதோடு ஓட்ட வேகத்திலும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகிறது.

 எனவே என்னைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த மஹெல ஜயவர்த்தன  ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டில்சானுடன் களமிறங்க வேண்டும்.(இதுவே மஹெலவின் விருப்பமும் கூட) மத்திய வரிசையில் தரங்கவை களமிறக்குவதன் மூலம் வலுவான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியும் மத்திய வரிசையில் சங்கா, மெத்யூஸ், திரிமான்ன, தரங்க போன்ற வீரர்களும் இருப்பதன் காரணமாக துடுப்பாட்டம் வலுப்பெறும்.

உலகக் கிண்ண இறுதி அணியில் மெத்யூஸ், மஹெல, சங்கா, டில்சான், திரிமான்ன, ஹெரத், சமிந்த இரங்க, தம்மிக பிரசாத்,(மலிங்க - பூரண குணமடைந்தால்) ஆகியோர்கள் உறுதியாகியுள்ள நிலையில் ஏனைய 7 பேரினை தெரிவு செய்யவேண்டிய தேவைதான் காணப்படுகின்றது என்பது எனது கணிப்பு. மஹ்ரூஃப், டில்ஹார ஃபெர்னாண்டோ, டில்சான் முனவீர, ஜீவன் மெண்டிஸ் போன்றவர்களையும் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ள தெரிவாளர்கள் ஆர்வம் காட்டவேண்டும்.

சராசரியாக 140 km/h வேகத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களையும்
முரளி,ஹெரத், சசித்ர போன்று விக்கட்டுக்களைக் கைப்பற்றும் சுழல் பந்துவீச்சாளர்களையும்.  உருவாக்க வேண்டிய அவசிய தேவையினை இலங்கை கிரிக்கட் இந்தத் தொடர் மூலம் உணர்ந்திருக்கும்.

இலங்கை அணியில் மெத்யூஸ், மஹெல, திசர இவர்களைத் தவிர
ஏனைய வீரர்களுக்கு ஆறு ஓட்டங்களை விளாசும் ஆற்றல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது, டில்சான், சங்கா ஆகியோரின் துடுப்பிலிருந்தும் ஆறு ஓட்டங்கள் கிடைப்பது மிக அரிதான ஒன்றாகவே இருக்கின்றது. எனவே ஆறு ஓட்டங்களை அதிரடியாக விளாசும் ஆற்றலையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க இந்தத் தொடரில் எமக்குக் கிடைத்த ஒரேயொரு சந்தோசம் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெற்றுக்கொண்ட முதலாவது சதம். அதுவும் அதிரடியான சதம்.
 பல சதங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் கடைநிலை வீரர்கள் விக்கட்டுகளை பறிகொடுத்ததாலும் தனது தனிப்பட்ட சாதனையைவிட அணியினை முற்படுத்தியதனாலும் மெத்யூசின் பல சதங்கள் பெறும் வாய்ப்பு கை நழுவிப் போனது.
 90 என்ற இலக்கில் இருந்த கண்டம் மெத்யூசிற்கு இப்போது நீங்கியுள்ளது. இனி மெத்யூஸ் பல சதங்கள், சாதனைகளைச் சுவைப்பார் என நம்பலாம்.

முதலாவது சதத்திற்கும் இவ்வாண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற பெருமைக்கும் மற்றும் சகல துறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றமைக்குமாகச் சேர்த்து வாழ்த்துக்கள் Anjiiii…..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS