RSS

விசாகா கல்லூரி பழைய மாணவன் (நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் செமஸ்டர் - 05)

>>>> நாட்குறிப்பில் ஒரு பக்கம் >>>>>
---- விசாகா கல்லூரி பழைய மாணவன் ----

பல்கலைக் கழக நாட்களில் ஒரு நாள் விடுதி அறையில் நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஒவ்வொருவரும் தாம் படித்த பாடசாலைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அப்படியே ஒவ்வொருவரும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தாம் படித்த பிரபல பாடசாலைகள் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

அப்போது ஒவ்வொருவரும் தாம் படித்த ரோயல், டீ.எஸ் போன்ற பாடசாலைகள் பற்றி கதைத்தோம்.

அந்த நேரம் பார்த்து அமைதியாக இருந்த நண்பனொருவன்…..

”நான் 5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணின. எனக்கு பிரபல பாடசாலையான கொழும்பு விசாக்கா கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைச்சுது. ஆனா நான் போகல. அந்த ஸ்கூலால லெட்டர் வந்துது. நான் வீட்டாக்களோட போய் பார்த்தன். ஹொஸ்டல் வசதியெல்லாம் தாறண்டு சொன்னாங்க. ஆனா எங்க வீட்ட வெளியூருக்கு அனுப்பி படிப்பிக்க விரும்பல. அதால நான் போகல இல்லன்னா நானும் விசாக கொலீஜ்ல படிச்சிருப்பன்”
என்று சொல்லி முடித்தான்.

நாங்கள் நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ள முயன்றும் முடியவில்லை. எல்லோருமே கோரசாக சிரித்தோம்.

நாங்கள் சிரித்த காரணம் அவனுக்கு புரியவேயில்லை. மீண்டும்

“ என்ன பொய் சொல்றன் எண்டுதானே சிரிக்கிறீங்க. எனக்கு வந்த லெட்டர் இன்னமும் இருக்கு நான் ஒருநாளைக்கு கொண்டுவந்து காட்ரன் பாருங்க” என்றான்.

இப்பொழுது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்…..

அவனுக்கு கொஞ்சம் குழப்பம் ,கொஞ்சம் கோபம்; கேட்டான் “ ஏண்டா சிரிக்கீங்க”

கட்டலில் இருந்து கீழே விழுந்து சிரித்துக்கொண்டிருந்த நான்…

“டேய் பக்கி விசாகா கொலீஜ் எங்குறது இலங்கையில இருக்குற ஃபேமசான Girls School டா”
என்று சொல்லிக்கொண்டே எனது சிரிப்பைத் தொடர்ந்தேன்.

அவனது முகத்தில் அசடு வழிந்தது.

O/L, A/L பரீட்சைகளுக்கு மொடல் பேப்பர்கள் வெளியிடுவதில் ரோயல் கல்லூரி மற்றக் கல்லூரிகள் போல விசாக்காக் கல்லூரியும் பிரபலம் அதில் அந்த பெயரை தெரிந்துகொண்டு ஆர்வக் கோளாறில் சொல்லிவிட்டான் நம்ம பய. அதுக்காக தனிப் பெண்கள் பாடசாலையில படிச்சன் எண்டா சொல்றது..

அன்று முதல் நமது நண்பர் “ விசாகா கல்லூரி Old boy" , விசாகா கல்லூரி மாணவி” என்று பல பெயர்களால் அழைக்கப்படலானார்.



** முன்னைய செமஸ்டர்களுக்கு

1. நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும் (செமெஸ்டர் - 1)

2.நண்பேண்டா.. (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -2)

3.பத் அடுவென் ஃபுல் ரைஸ் (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -3)

4.வடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர் -4)




 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

ஊரு விட்டு வெளியூர் வந்து குடும்பத்தை பிரிந்திருக்கும் போதுதான் குடும்பத்தின் மீது பாசம் பொங்கும். குறிப்பாக தாய் மீது பாசம் பொங்கிப் பிரவாகிக்கும் தாய் நமக்காக செய்யும் தியாகங்கள் பட்ட கஸ்டங்கள் நினைவு வரும். தாயைப் பிரிந்து வெளியூரில் இருக்கும்போது தாயைப் பற்றி கவிதை எழுதச் சொன்னால் தாயின் பெருமையை கட்டுரையில் வடிக்கச் சொன்னால் பக்கம் பக்கமாக கவிதையும், புத்தகம் புத்தகமாக கட்டுரையும் வரும். தாயைக் கையில் தாங்கனும் போலிருக்கும், தாயை உக்கார வைத்து பணிவிடை பல புரியத் தோணும். அதுவே ஊருக்கு வந்து தாயருகில் இருக்கும்போது எல்லாம் தலைகீழாக மாறிவிடும். தாய் கேட்கும் சிறு உதவிகூட பல நேரங்களில் உதாசீணப்படுத்தப்படும்... இதுதான் இன்று பலரது நிலை.

தினமும் 3 வேளையும் தாய் வடித்துக்கொட்டும் உணவை அவருக்கு உணவு இருக்குமா இல்லையா என்றுகூட யோசியாது பானை பானையாய்த் தின்றுவிட்டு பிள்ளைகளும் கணவனும் சென்ற பின் மிஞ்சுவது தனது கால் வயிற்றுக்கும் போதாத நிலையில் தனக்கு போதுமாக்கிக் கொண்டு அல்லது பகல் சாப்பாட்டில் மிஞ்சிய கொஞ்ச உணவையும் காலைச் சாப்பாட்டில் மிஞ்சியதையும் (பகல் சமைத்த சோற்றோடு காலையில் சமைத்த இடியப்பம்/ரொட்டியையும்) கலந்து உண்டுவிட்டு முக மலர்வோடு இருப்பார்.. தனக்கு உணவு போதாமல் விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது உணவை பிள்ளைகளும் கணவரும் தாராளாமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சிதான் அவரது வெளிப்பாடாக இருக்கும்.

இப்படிப் பல பெருமைகளைத் தியாகங்களைக் கொண்டா தாய்மாரின் மீதான பிள்ளைகளின் பாசம் இன்று ஃபேஸ்புக் ஸ்டேடசோடு மட்டுமே நின்றுவிடுவது துரதிஸ்ட்டம்.

ஐயிரண்டு திங்கள் அல்லல் பட்டு அயராது பாதுகாத்து எம்மைப் பெற்ற தாயை இன்றைய தினத்திலாவது நினைவுகொள்வோம்,,

எனது  நட்பிலுள்ள தாய்மார்களுக்கும் நட்புகளின் தாய்மாருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..

 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்

நகரத்துப் பையன் Vs கிராமத்துப்புப் பையன்
&
நகரத்துப் பெற்றோர் Vs கிராமத்துப் பெற்றோர்.

 காலையில் எழுந்து தயாராகி ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் போட்டுக்கொண்டு,தோளில் துடுப்பு மட்டையைப் கொழுவிகொண்டு பெற்றோர் ஆசியோடு,அவர்களின் வழியனுப்புதலோடு கிரவ்ண்டுக்கு போறவன் - நகரத்துப் பையன்

எப்படா அப்பா வெளியில போவாரு..? எப்படா அம்மா அடுப்படியில பிசியாவானு காத்திருந்து சோர்ட்ஸுக்கு மேலால டவுசர போட்டு அல்லது ட்ரவுசருக்கு மேலால சாரன உடுத்தி மறைச்சுக்கிட்டு வீட்டின் பின்புறமா/வாசலில் எங்கேயோ ஒழித்துவைத்த துடுப்பு மட்டை, விக்கட்டுகளை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டு திருடனைப்போல் ஒழிந்து ஒழிந்து கிரவுண்டுக்குப் போனால் அவன் - கிராமத்துப் பையன்

கிரவுண்டில் மகன் விளையாடும் அழகைக் கண்டு பெருமைப்பட்டு கரகோசம் செய்து உட்சாகப்படுத்தி மகிழ்ந்தால் அது - நகரத்துப் பெற்றோர்...

கிரவுண்டில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனை தேடிவந்து கன்னத்தில் ரெண்டு விட்டு, காதைத் திருகி தர தரவென இழுத்துச் சென்றால் அது - கிராமத்துப் பெற்றோர்...

சில நூறு கிலோமீற்றர் நிலப்பரப்பு வித்தியாசத்தில் பெற்றோரின் மனங்களில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்......

குறிப்பு : எனது பெற்றோர் இவ்விடையத்தில் எனக்கு பூரண சுதந்திரம் தந்திருந்தமை நான் பெற்ற பாக்கியம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS