RSS

இரு தசாப்தங்களைத் தாண்டியும் இளமை மாறாத சனத் ஜயசூரிய

சனத் ஜயசூரிய       




முழுப் பெயர் : சனத் டெரான் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya)
பிறப்பு : 1969 ஜூன் 30, மாத்தறை

வயது : 40

உயரம் : 1.68 மீ (5 அடி 6 அங்குலம்)

துடுப்பாட்ட முறை : இடது கை துடுப்பாட்டம்

பந்துவீச்சு முறை : இடது கை மரபு சார்  

                                          சுழல்பந்து

ஒருநாள் போட்டி மேலங்கி இலக்கம் : 07

டெஸ்ட் அறிமுகம் :
நியூசிலாந்து v இலங்கை, ஹமில்டன், ஃபெப்ரவரி 22-26, 1991

இறுதி டெஸ்ட் :
இலங்கை v இங்கிலாந்து, கண்டி, டிசெம்பர் 1-5, 2007

ஒருநாள் போட்டி அறிமுகம் :
அவுஸ்திரேலியா v இலங்கை, மெல்பேர்ன்,  டிசெம்பர் 26, 1989

T20 போட்டி அறிமுகம் :
இங்கிலாந்து v இலங்கை, செளதாம்டன், ஜூன் 15, 2006

பிரதான அணிகள் :
                                           இலங்கை தேசிய அணி, ஆசிய XI, புழூம்ஃபீல்ட் கழகம்,
                                            கொழும்பு கிரிக்கட் கழகம், மும்பை இந்தியன்ஸ்,
                                             ருஹுனு, சமசெட் கழகம்


தனிப்பட்ட வாழ்க்கை.

1969ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் நாள் Dunstan மற்றும் Breeda Jayasuriya ஆகியோருக்கு மகனாக மாத்தறையில் பிறந்தார்.

மாத்தறை செவத்தியஸ் கல்லூரியில் கல்விபயின்றார்.


இவரது மனைவி சந்ரா. இவர் சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியராவார்.


 சனத் - சந்ரா தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சனத் ஜயசூரிய சிறந்த மனித நேயமிக்கவர், எப்பொழுதும் எளிமையை விரும்புபவர், ஆண்மிகத்தில் நாட்டமிக்கவர்.

ஐ.நா சபையினால் நல்லெண்ணத் தூவதராக நியமிக்கப்பட்ட முதலாவது கிரிக்கட் வீரர் என்ற பெருமை சனத் ஜயசூரியவையே சாரும்.

இவர் ஐ.நாவின் எயிட்ஸ் தடுப்புத்திட்டத்திற்கான நல்லெண்ணத் தூதுவராகவே நியமிக்கப்பட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



கிரிக்கட் வாழ்க்கை

சனத் டெரான் ஜயசூரிய(Sanath Teran Jayasuriya) இவர் இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் சிறந்த சகலதுறை ஆட்டக் காரருமாவார்.



1989ஆம் ஆண்டு ஆரம்பமான இவரது கிரிக்கட் பயணம் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஒரு நாள் சர்வதேசப் போடிகளில் 13,000 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதோடு 300ற்கும் மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவரேயாவார்.

உலக கிரிக்கட் வரலாற்றில் எவருமே மறக்கமுடியாத தலை சிறந்த வீரர். எவ்வாறான பந்துகளையும் முகங்கொடுத்து அதிரடியாக ஆடக்கூடிய சிறந்த துடுப்பாட்ட வீரர்.


துணைக்கண்டத்தில் காணப்படுகின்ற மெதுவான, குறைவான மேலெலுகைகொண்ட(less bouncy ) ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடியவர். மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பந்துகளை சுதந்திரமாக விளாசும் ஆற்றல் படைத்தவர்.

இவர் மிகத்திறமை வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். துடுப்பாட்டவீரரின் இடது கால் திசைக்கு பந்தினை வேகமாக வீசுதல், பந்துவீச்சில் சடுதியான மாறுபட்டைக் காட்டுதல். திடீரென வேகமாக பந்துவீசுதல் என்பன இவரின் சிறப்பியல்புகளாகும்.


இவர் சிறந்த பந்துவீச்சு சராசரியையும், economy rate ஐயும் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆகஸ்டில் இடம் பெற்ற போட்டியில் பெற்றுக் கொண்ட விக்கட்டின் மூலம் 400 சர்வதேச விக்கட்டுகளைக் கைப்பற்றியோர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.


1999ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்கவிடமிருந்து தலைமைப் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

இவரின் தலைமைத்துவப் பாணி நெப்போலியனின் பாணியை ஒத்தது என அர்ஜுனா ரணதுங்கவினால் புகழப்பெற்றவர்.

அணிவீரர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய, அணிவீரர்களிடம் ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த தலைவராகக் காணப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் இலங்கை அணி பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டது.


2003ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரினைத் தொடர்ந்து அவரின் தலைமைத்துவம் தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின. இதன் காரணமாக தொடர்ந்து தலைமைவகிக்க மனமில்லாத நிலையில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தலைமைத்துவத்தினை இராஜினாமாச் செய்தார்.

1996ம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது சனத் ஜயசூரிய தனது ஆரம்ப துடுப்பாட்ட இணையான ரொமேஸ் களுவிதாரனவுடன் இணைந்து வழங்கிய அதிரடி ஆட்டமே இலங்கை அணி ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாமல் வெற்றி பெறக்காரணமாகும் என்றால் அது மிகை ஆகாது.




முதல் 15ஓவர்களில் அமுல்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட களத்தடுப்பின் போது பந்துவீச்சாளார்களை துவம்சம் செய்து ஓட்டங்களை விரைவாகக் குவிக்கும் நுட்பத்தை கிரிக்கட் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சனத் ஜயசூரியவே ஆகும்.

பந்துவீச்சாளர்களின் அனைத்துவிதமான திட்டங்களையும் தகர்த்தெறிந்து மைதானத்தின் அனைத்து பாகங்களிற்கும் பந்தினை விளாசி ஓட்டங்களை குவிக்கும் இந்த நுட்பம் அன்று நவீனமானதாகவும், போட்டிகளை வெற்றிகொள்ளும் சிறந்த திட்டமாகவும் காணப்பட்டது.

சனத் - ரொமேஸ் ஜோடி அறிமுகப்படுத்திய இத்திட்டம்தான் தற்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கைக்கொள்ளும் விசேட தந்திரோபாயமாகக் காணப்படுகின்றது.

தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணியின் க்லென் மெக்ரா தனக்கு சிம்ம சொப்பனாமாக விழங்கிய 11 துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவையும் குறிப்பிட்டிருக்கின்றார்.


அவர் ஜயசூரியவைப் பற்றி குறிப்பிடுகையில் “ஒரு வீரருக்கு கிடைக்கும் மிகப் பெரும் புகழாரம் அவர் போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர் என்று எல்லோராலும் சொல்லப்படுவதாகும். அந்த வகையில் சனத் ஜயசூரிய போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர். அதுமட்டுமல்ல 1996ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் போது அவரின் அதிரடியான துடுப்பாட்டமானது ஒரு இனிங்சை எப்படித்துவக்குவது என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டியது. ”




Cut shot , pull shot என்பவற்றோடு பொயின்ட் திசைக்கு மேலால் பந்தை அனுப்புதல்(lofted cut over point ) என்பன சனத் ஜயசூரியவின் தனி முத்திரை பதித்த துடுப்பாட்ட முறைகளாகும். இத்துடுப்பாட்ட முறைகளால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டிருந்தார்.

6ம், 7ம் இலக்க வீரராக களமிறங்கிய அவர் 1995-96 கிரிக்கட் பருவ காலத்தின் போது இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போதுதான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உயர்வு பெற்றார்.

1996ம் ஆண்டைய உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியின் மிக முக்கியமான வீரராக இவர் திகழ்ந்தார். உலகக் கிண்ண போட்டித் தொடர் முழுவதும் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டமையினால் ”தொடரின் நாயகன்”(Man of the Tournament) விருது இவருக்குக் கிடைத்தது.


இவரின் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக கறுப்புச் சிங்கம், இரும்பு மனிதன், மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார்.

அதிகமான சதங்களைக் குவித்தவர்களின் வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இவர் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அதிக தடவை பெற்றவர் என்ற சாதனையை டெண்டுல்கரோடு தானும் கொண்டுள்ளார்.

இவரின் தனிப்பட்ட திறமையின் மூலம் பல போட்டிகளை வெற்றியீட்டிக் கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.

இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள போட்டிகளில் 80% போட்டிகளில் சனத் ஜயசூரிய 50 அல்லது அதற்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். அதாவது சனத் ஜயசூரிய 50 அல்லது அதற்குமேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போட்டிகளில் 80% ஆனவற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது


1997ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.

சிறந்த சகலதுறை ஆட்டக் காரரான இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருக்கின்றார்.

இவர் ஒரு சிறந்த களத்தடுப்பாளரும் கூட.

                                           துடுப்பாட்டம்


                      

                                                       




                                                  பந்துவீச்சு


                                         டெஸ்ட் வாழ்க்கை


டெஸ்ட் அறிமுகம் : நியூசிலாந்து v இலங்கை, ஹமில்டன், ஃபெப்ரவரி 22-26,
                                           1991
இறுதி டெஸ்ட் : இலங்கை v இங்கிலாந்து, கண்டி, டிசெம்பர் 1-5, 2007

1999ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கிய இவர் 2003ம் ஆண்டுவரை 38 டெஸ்ட் போட்டிகளிற்கு தலைமைதாங்கியுள்ளார்.

இவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஹஸான் திலகரத்ன தலைவரானார்.

1997ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இடம் பெற்ற டெஸ்ட் போட்டியில் 340 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இலங்கை அணிசார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டார்.


இதே போட்டியில் ரொஸான் மஹனாமவுடன் இணைந்து 2வது விக்கட்டுக்காக பெற்றுக் கொண்ட 576 என்ற ஓட்டங்களே ஒரு ஜோடி பெற்றுக் கொண்ட அதியுயர் இணைப்பாட்டம் என்ற உலகசாதனையாகக் காணப்பட்டது.

பின்னர் இவ்விரு சாதனைகளும் மஹெல ஜயவர்த்தன- குமார் சங்கக்கார ஜோடியினால் 2006ம் வருடம் ஜூலை மாதம் தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம் பெற்ற போட்டியின் போது முறியடிக்கப்பட்டது.

இதன்படி மஹெல ஜயவர்த்தன பெற்றுக்கொண்ட 374 ஓட்டங்களின் மூலம் இலங்கை அணிசார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சனத் ஜயசூரியவிடமிருந்து தனதாக்கிக் கொண்டார்.

அதேபோன்று மஹெல ஜயவர்த்தன- குமார் சங்கக்கார ஜோடியினால் பெறப்பட்ட 624 என்ற இணைப்பாட்டமே எந்தவொரு விக்கட்டுக்காகவும் ஒரு ஜோடி பெற்றுக்கொண்ட அதியுயர் இணைப்பாட்ட உலக சாதனையாகும்.




2005ம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி பங்களாதேஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 1வது இலங்கை வீரர் என்ற பெருமையையும், சர்வதேசரீதியில் 33வது வீரர் என்ற பெருமையையும் ஈட்டிக்கொண்டார்.

2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து பல உள் அழுத்தங்கள் காரணமாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனாலும் தனது முடிவை மாற்றிக்கொண்டு 2006 மே மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம் பெற்ற டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் இணைந்துகொண்டார்.


2007ம் வருடம் இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போட்டியில் அவர் 78 ஓட்டங்களைப் பெற்றதோடு ஜேம்ஸ் அண்டர்ஸனின் ஒரு ஓவரின் 6 பந்துகளுக்கும் 6 நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொணடமை விசேட அம்சமாகும்.

சனத் ஜயசூரிய டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட சதங்கள்

       போட்டி    ஓட்டங்கள் எதிரணி                     மைதானம்                               ஆண்டு

 01      17              112                அவுஸ்திரேலியா    அடிலெய்ட் ஓவல்                   1996

 02      23              113                 பாகிஸ்தான்              எஸ்.எஸ்.சி மைதானம்        1997

 03      26              340                 இந்தியா                    ஆர்.பிரேமதாஸ மைதானம் 1997

 04       27             199                 இந்தியா                        எஸ்.எஸ்.சி மைதானம்       1997

 05       38             213                 இங்கிலாந்து               கெனிங்டன் ஓவல்                1998

 06       50             188                பாகிஸ்தான்                அஸ்கிரிய மைதானம்         2000

 07       51             148                தென்னாபிரிக்கா         காலி மைதானம்                   2000

 08       60             111                இந்தியா                        காலி மைதானம்                   2001
  
 09       68             139              சிம்பாப்வே                  அஸ்கிரிய மைதானம்          2004

 10       74             145              பங்களாதேஸ்           பி.சரவணமுத்து மைதானம் 2002

 11       85             131              அவுஸ்திரேலியா         அஸ்கிரிய மைதானம்        2004

 12       87             157              சிம்பாப்வே                      ஹராரே மைதானம்            2004

 13       93             253              பாகிஸ்தான்                    இக்பால் மைதானம்            2004

 14       94             107               பாகிஸ்தான்                கராச்சி தேசிய மைதானம் 2004


• இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31 அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
(சுருக்கம் கருதி அவற்றை விரிவாக தரவில்லை)





ஒருநாள் சர்வதேச வாழ்க்கை




ஒருநாள் போட்டி அறிமுகம் : அவுஸ்திரேலியா v இலங்கை, மெல்பேர்ன்,
                                                               டிசெம்பர் 26, 1989

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தலைமைத்துவத்தினை அர்ஜுன ரணத்துங்கவிடமிருந்து பொறுப்பேற்று 1999 - 2003 இலங்கை அணியை வழிநடத்தினார். இவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து மார்வன் அடபத்து தலைவரானார்.

சனத் ஜயசூரிய இந்திய அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட 189 ஓட்டங்களே ஒரு நாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்றுக்கொண்ட 3வது உயர் ஓட்ட எண்ணிக்கையாகும்.

குறைந்த பந்துகளில் அதாவது 17 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற உலகசாதனை தொடர்ந்தும் சனத் ஜயசூரிய வசமே உள்ளது.


48 பந்துகளில் சதத்தினைப் பூர்த்தி செய்து குறைந்த பந்துகளில் சதம்பெற்றவர் என்ற உலகசாதனையைக் கொண்டிருந்தார். பின்னர் இச்சாதனையை சஹீட் அஃப்ரிடி முறியடித்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற உலகசாதனைக்குச் சொந்தக்காரரும் சனத் ஜயசூரியவே.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,000ஓட்டங்களைத் தாண்டியவர்கள் வரிசையில் 4வது வீரராகவும், 12,000-13,000 ஓட்டங்களைத் தாண்டியவர்கள் வரிசையில் 2வது வீரராகவும் காணப்படுகின்றார்.


28 சதங்களைப் பூர்த்திசெய்ததன் மூலம் அதிக சதங்களைப் பூர்த்திசெய்தோர் வரிசையில் 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஒரு ஓவரில் 30ஓட்டங்களை விளாசி ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை இருதடவைகள் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இச்சாதனையை ஒரு ஓவரில் 36 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஹேர்ஸல் கிப்ஸ் தன் வசமாக்கிக் கொண்டார்.

2006ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற நெட்வெஸ்ட் தொடரில் சனத் ஜயசூரிய 2 சதங்களைப் பூர்த்திசெய்தார். இதில் 99 பந்துகளிள் 152 ஓட்டங்களைப் பெற்றமை விசேட அம்சமாகும். இத்தொடரில் சனத் ஜயசூரிய, உபுல் தரங்கவுடன் இணைந்து 1வது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 286 ஓட்டங்களே உலகசாதனை இணைப்பாட்டமாக தொடர்ந்தும் உள்ளது. இத்தொடரில் இவர் தொடர்நாயகன் விருதினைப் பெற்றதோடு 5-0 என்றரீதியில் இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது.

இத்தொடரினைத் தொடர்ந்து ஹோலன்ட் அணியுடன் இடம்பெற்ற போட்டியொன்றில் இவர் 104 பந்துகளில் 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன் மூலமாக இலங்கை அணி இப்போட்டியில் 9 விக்கட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதுவே ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் அணியொன்று பெற்ற உயர் ஓட்ட எண்ணிக்கையாகும்.


இதுவரையில் இவர் 4 தடவை 150 ஓட்டங்களைத் தாண்டியிருக்கின்றார்.

2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இடம் பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இவர் 2 சதங்களையும் 2 அரைச் சதங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சாதனைகள் பலதை தன் வசம்கொண்ட சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு இடம் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.


ஐ.பி.எல் போட்டிகளில் சனத்தின் சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கையின் விளையாட்டு அமைச்சரின் தலையீட்டுடன் இவர் ஆசிய கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டார். இவரின் சிறப்பான சதத்தின் மூலமாக இலங்கை அணி கிண்ணத்தினை சுவீகரித்தது.

சனத் ஜயசூரிய இதுவரை 28 சதங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.

சனத் ஜயசூரிய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுக்கொண்ட சதங்கள்

        ஓட்டங்கள்   போட்டி   எதிரணி             மைதானம்                                      ஆண்டு

[1]      140                   71            நியூசிலாந்து      ஸ்ப்ரிங்பொக் பார்க்                      1994

[2]      134                  100           பாகிஸ்தான்      படாங் மைதானம்                          1996

[3]     120*                 111           இந்தியா             ஆர்.பிரேமதாச மைதானம்           1996

[4]     151*                129            இந்தியா             வங்ஹேடி மைதானம்                   1997

[5]     108                  136           பங்களாதேஸ்   எஸ்.எஸ்.சி மைதானம்                 1997

[6]     134*                143           பாகிஸ்தான்      கடாஃபி மைதானம்                         1997

[7]     102                  150           சிம்பாப்வே         எஸ்.எஸ்.சி மைதானம்                1998

[8]     105                  200         இந்தியா                  பங்கபந்து மைதானம்                  2000

[9]     189                  217          இந்தியா                 ஸாஜா கிரிக்கட் மைதானம்   2000

[10]   103                  226          நியூசிலாந்து          ஈடின் பார்க் மைதானம்           2001
               
[11]   107                  232          நியூசிலாந்து          ஸாஜா கிரிக்கட் மைதானம்   2001

[12]   112                  260          இங்கிலாந்து          ஹெடிங்லி மைதானம்              2002

[13]   102*                271          பாகிஸ்தான்             ஆர்.பிரேமதாச மைதானம்      2002

[14]   122                 284          அவுஸ்திரேலியா      சிட்னி கிரிக்கட் மைதானம் 2003

[15]   106                285           இங்கிலாந்து                 சிட்னி கிரிக்கட் மைதானம் 2003

[16]   120                288           நியூசிலாந்து                 குட் இயர் பார்க்                         2003

[17]   107*              319            பங்களாதேஸ்             ஆர்.பிரேமதாச மைதானம்     2004

[18]   130            320                இந்தியா                        ஆர்.பிரேமதாச மைதானம்     2004

[19]   114           347                 அவுஸ்திரேலியா       சிட்னி  கிரிக்கட் மைதானம்   2006

[20]   122           359                இங்கிலாந்து                 த ப்ரிட் ஓவல்                            2006

[21]    152          362               இங்கிலாந்து                  ஹெடிங்லி மைதானம்            2006

[22]    157         363                 நெதர்லாந்து                  வி.ஆர்.ஏ மைதானம்                2006

[23]    111         371                 நியூசிலாந்து                  மெக்லீன் பார்க்                          2006

[24]    109         381                 பங்களாதேஸ்                குயீன்ஸ் பார்க் ஓவல்          2007

[25]   115          384                மே.இ.தீவுகள்                ப்ரொவிடென்ஸ் மைதானம் 2007

[26]   130          414                பங்களாதேஸ்              தேசிய மைதானம்                      2008

[27]   125         416                  இந்தியா                        தேசிய மைதானம்                      2008

[28]    107        428                  இந்தியா                        ரங்கிரி தம்புள்ள மைதானம் 2009


• இவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 68 அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
(சுருக்கம் கருதி அவற்றை விரிவாக தரவில்லை)


T20 வாழ்க்கை.

T20 போட்டி அறிமுகம் : இங்கிலாந்து v இலங்கை, செளதாம்டன், ஜூன் 15, 2006


2007ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்துதான் சனத் ஜயசூரிய தனது வழக்கமான Kookaburra துடுப்பு மட்டையை மாற்றி Reebok இனால் அனுசரணை வழங்கப்பட்ட சாதாரண துடுப்பு மட்டையைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

இலங்கை ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்த இவர்,

2008ம் வருடம் ஏப்ரல் மாதம் மும்பை இன்டியன்ஸ் அணியில் இணைந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினார். மும்பை இன்டியன்ஸ் அணியினருக்கும் சென்னை சுபர் கிங்ஸ் அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியொன்றில் வெறும் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்று அசத்தியதன் மூலம் மீண்டும் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்தார்.




சாதனை மன்னன் சனத் ஜயசூரிய வசமுள்ள சாதனைகள்

• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (189) என்ற சாதனையை விவியன் ரிச்சட்டுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்..

• மிகவிரைவாகப் பெறப்பட்ட அரைச்சதம். (17 பந்துகளில் 50 ஓட்டங்கள்) என்ற உலக சாதனை.

• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள் (11) என்ற உலகசாதனையை சஹீட் அஃப்ரிடியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 4 ஓட்டங்கள் (24) என்ற உலக சாதனையை தன் வசம் கொண்டுள்ளார்.

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் (இதுவரை 13,377) குவித்தவர்கள் வரிசையில் 2ம் இடம் (1ம் இடம் சச்சின் டென்டுல்கர் 17,178).

• 4 தடவைகள் 150 ஓட்டங்களைத் தாண்டியதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக தடவை 150 ஓட்டங்களைத் தாண்டியவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கொண்டுள்ளார்.

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக இருதடவை 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே.

• விரைவாக 150 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற உலக சாதனை இவர் வசமே. (இங்கிலாந்து அணிக்கெதிராக 95 பந்துகளில் 150 ஓட்டங்கள்)

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்களைக் குவித்தவர்கள் (28) வரிசையில் 2ம் இடம்.

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவாக சதத்தினைப் பெற்றவர்கள் வரிசையில் 2ம் இடம்.(47 பந்துகளில்)

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை(270) பெற்றவர் என்ற உலக சாதனை.

• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் (இரு தடவைகள் 30 ஓட்டங்கள்) பெற்ற வீரர் வரிசையில் இரண்டாமிடம். (36 ஓட்டங்களுடன் ஹேர்ஸல் கிப்ஸ் 1ம் இடம்).

• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 47 தடவைகள் போட்டியின் நாயகன் (Man of the Match) விருதினைப் பெற்றதன் மூலம் அதிக தடவைகள் இவ்விருதினைப் பெற்ற வீரர் என்ற சாதனைப் பட்டியலில் 2ம் இடம். (சச்சின் டென்டுல்கர் 60 தடவைகள்).

• 400 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விழையாடிய முதலாவது வீரர்.

• 2007ம் ஆண்டு T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விழையாடியதன் மூலம் T20 விழையாடிய வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

• டெஸ்ட் போட்டியொன்றின் ஒரு ஓவரில் 6 நான்கு ஓட்டங்களைப் பெற்ற 3வது வீரர்.

• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் சதத்தினைப் பூர்த்தி செய்த வயதான வீரர் (39 ஆண்டுகள் 212 நாட்கள்). (முன்னதாக ஜெஃப்ரி பொய்கொட் 39 ஆண்டுகள் 51 நாட்கள்)






டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட தொடர் நாயகன் விருதுகள்

#    தொடர்                                       தொடருக்கான பங்களிப்பு                       

1    இந்தியா VS இலங்கை         571 (2போட்டிகள், 3 இனிங்ஸ்கள்); ப.வீ 3-84, 2 பிடி.
2   இலங்கை VS பாகிஸ்தான்  424 (2போட்டிகள் , 4 இனிங்ஸ்கள்); ப.வீச்சு 2-47 1-1



டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட ஆட்ட நாயகன் விருதுகள்

        தொடர்              காலப்பகுதி பங்களிப்பு முடிவு

1)   இந்தியா VS இலங்கை(1997)    1வது இனிங்ஸ் - 340(4x36, 6x2); 3 விக். 1 பிடி

                                                                     சமநிலை

2)  இந்தியா VS இலங்கை (2001)    1வது இனிங்ஸ் - 111(4x16, 6x1); 2 பிடி.

                                                                 2வது இனிங்ஸ் - 6* (4X1); 1 விக்கட்
                                                                  
                                                                     10 விக். வெற்றி

3) சிம்பாப்வே VS இலங்கை (2001/02)  1வது இனிங்ஸ் - 28(4x3); 5 விக்கட்

                                                                       2வது இனிங்ஸ் -36 (4X6); 4விக்,
                                
                                                                        315 ஓட்டங்களால் வெற்றி

4) இலங்கை VSபாகிஸ்தான்(2004/05) 1வது இனிங்ஸ் - 38(4x4); 1 விக், 1 ர அவுட்

                                                                       2வது இனிங்ஸ் - 253 (4X33, 6x4)
                                                      
                                                                        201 ஓட்டங்களால் வெற்றி






ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட தொடர் நாயகன் விருதுகள்
  
           தொடர்                                         காலம்                  பங்களிப்பு
1)    வில்ஸ் உலகக் கிண்ணம்       1995/96          221(6போட்டிகள்); 7-231, 5 பிடிகள்.

 2)      சிங்கர் கிண்ணம்                        1995/96           221(3 போட்டிகள்); 3-115, 2 பிடிகள்.
     
3)     பெப்சி சுதந்திரக் கிண்ணம்(இந்.) 1997          306(5 போட்டிகள்); 5-200

4)     இந்தியா VS இலங்கை                1997                210(3 போட்டிகள்); 5-184, 1 பிடி.)

5)    சிம்பாப்வே VS இலங்கை          1997/98             199(3 போட்டிகள்); 4-154, 1 பிடி.

6)   கொகா-கோலா ச.கிண்ணம்       2000/01             413(5 போட்டிகள்); 1-111, 4 பிடிகள்.

7)    கொகா-கோலா கிண்ணம்         2001                  305(7 போட்டிகள்); 3-188, 4 பிடிகள்.

8)   எல்.ஜி அபான்ஸ் முக்.தொடர் 2001/02           194(5 போட்டிகள்);8-167,1 பிடி.

9)     ஆசியக் கிண்ணம்                        2004                293(6 போட்டிகள்); 4-78, 1 பிடி.

10) நெட்வெஸ்ட் தொடர்                     2006                322(5 போட்டிகள்); 5-185

11)  லக்ஸ்யா தொடர்                           2007                  53(3 போட்டிகள்); 9-68



சாதனைகளின் சொந்தக்காரர், இலங்கை அணியின் ஆணிவேர் சனத் ஜயசூரியவின் வெற்றிகரமான கிரிக்கட் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எமது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சனத் ஜயசூரிய இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் காத்திருப்போம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS