இந்திய நண்பர் ஒருவரின் பதிவில் படித்ததும் பிடித்துவிட்ட இதை நம் நண்பர்களுக்காக சுட்டு, கொஞ்சம் டிக்கரிங், பெயின்டிங் பண்ணி எனது பதிவில் இடுகின்றேன்.
படித்துவிட்டு நீங்களும் சிரிக்கலாம், காவல்காரன் பாக்கவும் போகலாம்.
சுறா படம் பார்க்கப்போன சூடாமணி
உதய புரத்து சூடாமணி மெயின் ரோட்டில் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறான். இதக் கேள்விப்பட்டு அங்க போனான் சூடாமணியின் உயிர் நண்பன் ரமணா.
"நானடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்க மாட்டே!"
சூடாமணியின் அம்மா: வா ரமணா.! தெய்வம் மாதிரி வந்தே! இங்கே பாரு, என் பேச்சைக் கேட்காம அந்தப் படத்துக்குப் போயி இந்த நிலைமைக்கு ஆயிட்டான் பாரு!
ரமணா.: ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா! இவனை அரோகரா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்.
இடம்: அரோகரா ஆஸ்பத்திரி
ரமணா.: சார்..சார், எமர்ஜென்ஸி வார்டு எந்தப் பக்கம் இருக்கு?
வோர்ட்போய்: என்னாச்சு?
ரமணா.: என் ஃபிரண்டு சூடாமணி ’சுறா’ படம் பார்த்திட்டான் சார்
வோர்ட்போய்: ஐயையோ, அதுக்குன்னு புதுசா வார்டு திறந்திருக்காங்க பாரு! அங்கே கொண்டு போங்க!
இடம்: அரோகரா ஆஸ்பத்திரியின் ’சுறா’ வார்டு
ரமணா: டாக்டர், இவன் சுறா படத்துக்குப் போயிட்டான். எப்படியாவது காப்பாத்துங்க! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.
டாக்டர்: யோவ், நாலஞ்சு நாளா இங்கே வர்றதெல்லாம் அந்தக் கேசு தானய்யா! பன்றிக்காய்ச்சலுக்குக் கூட இங்கே இவ்வளவு கூட்டம் வரலே! முதல்லே நீங்க வெளியே இருங்க!
(ரமணா வெளியேறுகிறார்)
டாக்டர்: நர்ஸ்! இந்தக் கேஸைப் பார்த்தா ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தைப் பார்த்தே பைத்தியம் பிடிச்சவன் மாதிரியிருக்கே!
நர்ஸ்: என்ன பண்ணலாம் டாக்டர்?
டாக்டர்: நமக்கு மட்டும் தானே தெரியும்? நாமபாட்டுக்கு இது சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் பண்ணுவோம். அந்த ரமணா கிட்டே போயி சொல்லிடுங்க!
(நர்ஸ் வெளியே சென்று ரமணாவிடம் சொல்லுகிறார்)
நர்ஸ்: உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்திட்டிருக்கு! காப்பாத்திடலாம். எதுக்கும் நீங்க கேஷ்-கவுண்டரிலே போயி ஒரு ஐநூத்தி ஓரு ரூபாய் அட்வான்ஸ் கட்டிருங்க! அப்பத்தான் அட்மிட் பண்ணிப்போம்.
(ரமணா கேஷ்-கவுன்டருக்குப் போய், ஐநூற்றி ஒன்று ரூபாய் அட்வான்ஸ் கட்டி, சூடாமணியின் பெயரில் ரசீது வாங்குகிறார். பிறகு, மருந்துக்கடைக்குச் சென்று முப்பத்தி மூன்று ரூபாய் பதினெட்டு பைசாவுக்கு மருந்து வாங்கி, அதற்கான பில்லிலும் சூடாமணியின் பெயர்போட்டுப் பெற்றுக்கொள்ளுகிறார்)
ரமணா: டாக்டர், சூடாமணிக்கு எப்படியிருக்கு?
டாக்டர்: ஒரு ஊசி போட்டோம்! அந்த நேரம் பார்த்து எங்க டாக்டர் ஒருத்தரோட ரிங் டோனிலே வில்லு பாட்டு வந்திச்சா! திரும்ப பைத்தியம் முத்திருச்சு! ஹைதராபாத்துலேருந்து டாக்டர் கடகடாலு ரெட்டின்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் தலைமறைவா ஓடிவந்து சென்னையிலே தங்கியிருக்காரு! ஆந்திராவுலே பொப்புலு கப்புலுன்னு தெலுங்குப்படம் ரிலீஸ் ஆனபோது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தவரு! ஆனா, விசிட்டிங் ஃபீஸ் நூத்தி ஓரு ரூபாயும் சிகரெட் பக்கட்டும் கொடுக்கணும்.
ரமணா: பணத்தைப் பத்திக்கவலைப்படாதீங்க சார்! நூத்தி ஒண்ணு என்ன, கூட ஒரு ரூபாய் சேர்த்து நூத்தி ரெண்டாவே கொடுக்கறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க சார்!
(டாக்டர் கடகடாலு ரெட்டி சைக்கிள் ரிக்ஷாவில் வந்து இறங்கி, சூடாமணியைப் பரிசோதிக்கிறார்)
ரமணா: டாக்டர், சூடாமணிக்கு என்ன ஆச்சு?
க.க.ரெட்டி: ரொம்ப சீரியசாத் தான் இருக்காரு! முழிச்சிருக்கும்போது பஞ்ச் டயலாக் பேசறாரு! தூக்க ஊசி போட்டா விஜய் பாட்டுப்பாடறாரு! இன்னும் ரெண்டு மணிநேரம் கழிச்சு அஜித் பாட்டுப் பாடினாருன்னா பொழைக்கிற வாய்ப்பிருக்கு!
இடம்: அரோகரா ஆஸ்பத்திரி-சுறா வார்டு
டாக்டர்: முதல்லே இவரைக் கீழ்ப்பாக்கத்துக்கு எடுத்திட்டுப் போகச் சொல்லலாம்.
இடம்: சுறா வார்டு வராண்டா
ரமணா: சூடாமணி அம்மா! இப்போ டாக்டர் வருவாரு! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலேன்னு சொல்லுவாரு பாருங்க!
(டாக்டர் வருகிறார்)
டாக்டர்: ஐயாம் சாரி மிஸ்டர் ரமணா! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலே
சூடாமணி அம்மா: ரமணா, அப்படியே சொல்லுறாரு! நீங்க ரெண்டு பேரும் கூட்டா?
ரமணா: சும்மாயிருங்கம்மா நீங்க சொல்லுங்க டாக்டர்
டாக்டர்: மொத்தம் அறுநூத்தி எட்டு ரூபாய் செலவாயிருக்கு! மீதி நூத்தி ஏழு ரூபாயைக் கட்டிட்டு பேஷியன்டை நீங்க கீழ்ப்பாக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போகலாம்.
ரமணா: இன்னும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா நாங்க சூடாமணியைக் கூட்டிக்கிட்டுப் போறோம்.
டாக்டர்: வாட்? என்ன சொல்றீங்க??
ரமணா: செலவைப் பத்திக்கவலைப்படாதீங்கன்னு டாக்டர் கிட்டேயும், டைரக்டர் கிட்டேயும் சொல்லக் கூடாது! ரெண்டு பேரும் செலவை இழுத்து விட்டு கடைசியிலே எல்லாருக்கும் ஆப்பு வச்சிடறீங்க!
புரியலே டாக்டர்? ஏற்கனவே வில்லு படம் பார்த்ததிலேருந்தே பைத்தியம் பிடிச்சதா கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியே சர்டிபிகேட் கொடுத்த ஆளுக்கு சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கீங்க! அதுக்கான ஆதாரம் எங்கிட்டே இருக்கு! அரோகரா ஆஸ்பத்திரியோட எம்.டி, இங்கே, இப்போ வந்தாகணும்.
டாக்டர்: அவரு இப்போ வரமுடியாது ரமணா! மார்னிங் ஷோ ’சுறா’ பார்க்க ஃபேமிலியோட போயிருக்காரு.
ரமணா: என்னது? பேமிலியோட போயிருக்காரா? அப்படீன்னா அவரு பேய்முழியோட தான் திரும்பி வருவாரு!
டாக்டர்: ரமணா, இதோ என் சம்பளப்பணம் அப்படியே தந்திடறேன்! ரமணா படத்துலே விஜயகாந்த் பண்ணுற மாதிரி பண்ணிடாதே! இந்தா பதினையாயிரம் ரூபாய் இருக்கு! வச்சுக்கோ, சூடாமணியைக் கூட்டிக்கிட்டு முதல்லே இடத்தைக் காலிபண்ணு!
ரமணா: சூடாமணி அம்மா! இந்தாங்க இதுலே பதினைஞ்சு ரூபாய் இருக்கு! மீதி பதினாலாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி அஞ்சு ரூபாயை என்னோட சர்வீஸ் சார்ஜா எடுத்துக்கிட்டேன். சூடாமணியைக் கூட்டிக்கிட்டு அப்படியே 23Cயைப் பிடிச்சு நீங்க வீடுபோய்ச் சேருங்க!
சூடாமணி அம்மா: மவராசா! நீ நல்லாயிருக்கணும்! சூடாமணி! சூடாமணி! வாடா வூட்டுக்குப்போகலாம்.
ரமணா: டாக்டர்! நம்ம நாட்டுலேயே நாலெழுத்துப் படிச்சவங்க ரெண்டே பேரு தான். ஒருத்தன் SSLC; இன்னொருத்தன் MBBS. இப்படிப் பணத்துக்காக படத்தோட பெயரை மாத்தி மாத்தி வைத்தியம் பார்க்கறீங்களே?
டாக்டர்: தெரியாமப் பண்ணிட்டோம் ரமணா! மன்னிச்சிருங்க!
ரமணா: மன்னிப்பு, தமிழிலே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை! உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தாங்க டிக்கெட்! எல்லா டாக்டருங்களும் போய் ’சுறா’ படம் பாருங்க!
டாக்டர்: ஐயோ (மயக்கம் போட்டு விழுகிறார்)
4 comments:
நல்லாயிருக்கிறத விஜய் ரசிகர் இதை பாக்கலியா.. பாவம்...
நன்றி சகோதரா....
உண்மையில் இது இந்திய நண்பர் சேட்டைக் காரணின் பதிவு.... படித்ததில் ரொம்ப பிடித்துவிட்டதால்
சில மாற்றங்களுடன் பதிவிட்டேன் அவளவுதான் என் பங்கு...
வருகைக்கு நன்றி
படிச்சதுக்கே பைத்தியம் பிடிச்சிடும் போலருக்கே!
@NIZAMUDEEN
படிச்சதுக்கே இப்படின்னா படம் பாத்தவங்க நல்லா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா...?
ஹி ஹி
கருத்துரையிடுக