RSS

எனது உலக சாதனை

நான் கட்டாயம் இத சொல்லியே ஆகனும்....

வழமையாக மாலை வேளையில் நான் எங்கள் பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாடுவது வழக்கம். அவ்வாறு இன்று விழையாடும் போதுதான் நான் அந்த சாதனையை நிகழ்த்தினேன்.

அதற்கு முதல் என்னைப் பற்றி ஒரு பில்ட்-அப்பினை உங்களுக்கு தருவது மிக முக்கியம். வலதுகை துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளரான நான் துடுப்பாட்டத்தில் மஹெல ஜயவர்த்தன, மாவன் அத்தபத்து போன்று ஆடக்கூடியவன், அதாவது Touch Player என்று சொல்வார்களே அப்படித்தான். பந்துவீச்சில் இரண்டுவிதமான பந்துவீச்சு முறையைக் கையாள்கின்றேன். ஒன்று சமிந்த வாஸ் போன்று High arm action மற்றையது லசித் மலிங்க போன்று Side Arm action அந்த வகையில் இன்று நான் Side Arm action ஐத்தான் பயன்படுத்தினேன். காரணம் காற்று பந்து வீசும் திசைக்கு எதிர்த் திசையில் வீசியமையினால் காற்றை எதிர்த்து வேகமாகப் பந்து வீச இம்முறையைப் பயன்படுத்தினேன். சரி பில்ட்-அப் போதும் மேட்டருக்கு வரலாம்.





இன்று நான் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி லசித் மலிங்கவின் உலக சாதனையைச் சமப்படுத்தியிருக்கின்றேன்.

 ஒருவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசலாம். எனது 3வது ஓவரில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது.

முதலாவது பந்து அகலப் பந்து. இரண்டாவது பந்தில் அஸ்லம் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் சலாம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார், அதற்கடுத்த பந்தில் சியான் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போது ஹெட்ரிக்கினைப் பூர்த்தி செய்தேன். அடுத்த பந்துக்கு நெளசாட் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுகளைக் கைப்பற்றி மலிங்கவின் சாதனையைச் சமப்படுத்தினேன். அடுத்த பந்திலும் அழகான ஆட்டமிழப்பொன்றுக்குரிய வாய்ப்பிருந்தது. நேராக நடு விக்கட்டுக்கு நான் வீசிய பந்தை ஃபர்ஹான் விக்கட்டினை மறைத்து ஆடினான் மிகவும் அழகான LBW ஆட்டமிழப்பது. இருந்தும் எங்கள் விழையாட்டில் LBW ஆட்டமிழப்பை கொடுப்பதில்லை என்பதால் அவ்வாட்டமிழப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இறுதிப் பந்தில் ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. இதன் படி அந்த ஓவரில் 1 ஓட்டம் மட்டுமே கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினேன்.

இன்றைய நாளில் மொத்தமாக நான் வீசிய 3 ஓவர்களில் 15 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினேன்.

எப்புடி…..? நாங்க யாரு…?

இப்படிப்பட்ட சாதனையை தரம் 7ல் படிக்கும் போதும் நிகழ்த்தியிருந்தேன். ஆனாலும் அக்கால கட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாததால் அவை சரியான முறையில் வெளி உலகுக்கு எத்திவைக்கப் படவில்லை. ஆனால் இம்முறை அதை நானாகவே வெளி உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.


இச்சாதனையின் மூலமாக இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களுக்கு ஒரு செய்தியை சொல்லிவைக்க ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் போது கொழும்பையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ளவர்களையும் மட்டுமே தேர்வு செய்கின்றீர்கள். ஆனால் கொழுப்பிலிருந்து வெகு தொலைவிலுள்ள பிரதேசங்களிலும் என் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 2011 உலகக் கிண்ணத்தை வெல்லும் எண்ணமிருந்தால் என்னையும் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.


(இந்த சாதனையைப் பற்றி ஃபேஸ் புக்கிலும், வலைப் பதிவிலும் போட ஆலோசனை கூறிய நம்ம நண்பர் வஹாபிற்கு நன்றிகள்.)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ம.தி.சுதா சொன்னது…

தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்... முடிந்தால் யாழ்ப்பாணமம் வாங்களேன் ஒரு மச் விளையாடுவோம்...

Ahamed Suhail சொன்னது…

வந்துட்டாப் போச்சு...
கடின பந்தா?? இல்லை மென்பந்தா?

சொல்லி அனுப்புங்கள்... வந்து சேர்கிறேன்..


உங்கள் வருகைக்கு நன்றி சகோதரா...