இரும்புக்கோட்டை நீதிமன்றத்தில் பயங்கர பதற்றம். காரணம் முக்கியமான வழக்கு ஒன்றை விசாரித்து மறண தண்டனை விதிக்கப்படப் போகின்றது.
சட்டத்தரணி: கனம் நீதிபதி அவர்களே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ரிஃபாஜ் ஒரு ஹோட்டல் ஊழியர், அவர் கடமை புரியும் ஹோட்டலில் தினமும் 5 கீரவடை, 10 தோசை, 5 வடை, 5 பராட்டா இதுதான் தினசரி வியாபாரம், இப்படிப்பட்ட பாரிய(?) ஹோட்டலின் உணவுகளை ஈ மொய்க்காமல் பாதுகாப்பதற்கான பொறுப்புதான் ரிஃபாஜுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவர் சம்பவதினத்தன்று அங்கிருந்த அனைத்து உணவுகளையும் திருடி உண்டுவிட்டார். மிச்சசொச்சங்களை லண்டனிலுள்ள தனது தம்பிக்கு பாய் பார்சல் சேவிசில் அனுப்பியிருக்கிறார். (படுபாவி எனக்கு 2 கீரவட தந்திருந்தான்னா அவனுக்கு ஆதரவா வாதாடியிருப்பன்.) இதற்குரிய ஆதாரம் இந்த பென் ரைவிலிருக்கிறது. எனவே இந்த திருடனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
நீதிபதி : இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீங்கள் என்ன சொல்லப்போகுறீர்கள்.
ரிஃபாஜ் : இல்லை ஐய்யா இது பொய்யான குற்றச்சாட்டு. நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னைத் தூக்கிலிட்டால் என் பேஸ்புக் நண்பர்கள் பாவம். அவர்கள் காமெடி பண்ண ஆளில்லாமல் அநாதையாகிவிடுவார்கள். எனவே என்னை மன்னித்துவிடுங்கள்.
சட்டத்தரணி : இல்லை நீதிபதி அவர்களே. இவர் அண்மைக் காலமாக பேஸ்புக் பக்கமே வருவதில்லை. அதனால் இவரை யாரும் இப்பொழுது பேஸ்புக்கில் காமெடிபன்ணுவதில்லை. எனவே மரண தண்டனையை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
நீதிபதி : ரிஃபாஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக பென்ரைவ் மூலமா நிரூபிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் போனவாரம் திருடி சாப்பிட்ட கீரவடையின் சில துண்டுகள் இன்னும் அவரது வாயில் ஒட்டிக் கொண்டிருப்பதால் இவந்தான் திருடன். இதனால் ச.போ.ச 119 சட்டத்தின்படி இவருக்கு மின்சார கதிரையில் உட்காரவைத்து மரணதண்டனை வழங்க இந் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மரணதண்டனைக்குரிய அனைத்து ஏட்பாடுகளும் முடிந்தாகிவிட்டது. ரிஃபாஜ் கதிரையில் அழுதுகொண்டே உட்கார்ந்திருக்கிறார். ஆழியை அழுத்தும் நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதே நேரம் ஒட்டகத்தில் 4 பேர் உள்ளே வந்து ரிஃபாஜைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள்.
பாலைவனத்தின் ஒரு இடத்தில் ரிஃபாஜும் கடத்தி வந்த 4 பேரும் நிற்கிறார்கள்.
ரிஃபாஜ் : யார் நீங்க? எதுக்காக என்னைக் கடத்திவந்தீங்க?
நால்வரும் தங்கள் முகமூடியை கழற்றுகிறார்கள். சிறாஜ், ரிசாட், ரிஸ்வி, பெளசான் இவர்கள்தான் அந்நால்வரும். ரிஃபாஜுக்கு ஒரே குழப்பம்.
ரிஃபாஜ் : ஏன் என்னைக் கடத்திட்டு வந்தீங்க?
றிசாட் : இங்கப்பாரு எங்க களவானிப் பயபுள்ள சங்கத்துல (க.ப.சங்கம்) அஸ்லம் என்டு ஒருத்தன் இருந்தான். அவந்தான் எங்க சங்கத்தலைவன். அவன் பயங்கர திருடன். பயங்கர வேட்டைக்காரன். கள்ளக் கோழி பிடிக்குறது, காட்டுக்குள்ள இறங்கி முயல் பிடிக்குறது, இளநீர்க்குலை, வாழைக் குலை, ஈச்சங் குலை எல்லாம் திருடுறதுல பலேகில்லாடி.இந்த ஃபோடோவையெல்லாம் பாரு.
ரிஃபாஜ் : அடப்பாவி என்னை மாதிரியே இருக்கானேய்யா?
சிராஜ் : இப்போ அவன் எங்க சங்கத்துல இல்ல. திடீரெண்டு உம்றா போனான், அப்புறம் ஹஜ் போனான். இப்போ எங்க சங்கத்தை விட்டே போயிட்டான். அது எங்க நாலு பேரையும் தவிர மத்த எவனுக்குமே தெரியாது. அதனால தலைவரில்லாம எங்க சங்கம் குவாட்டர் அடிச்ச கோவிந்தன் மாதிரி தள்ளாடுது. நீ அவன மாதிரி இருக்குறதாலதான் உன்னை தூக்கிட்டு வந்தோம்.
பெளசான் : நீ எங்க சங்கத்துக்கு தலைவனா இருக்கனும். அதாவது நடிக்கனும். அப்படி நடிச்சேன்னா உனக்கு நீ திருடினியே அதே மாதிரி ஒவ்வொருநாளும் கீரவடை, பராட்டா, தோசை ஏன் அஸ்லம் விரும்பிச்சாப்பிர்ர தையிர் வடையும் ஃபிரீயா தருவம். என்ன சொல்ற.
றிஃபாஜ் : அப்படிய்யா? இதெல்லாம் ஒவ்வொருநாளும் தருவீங்க எண்டா எனக்கு டபுல் ஓகே.
ரிசாட் : நீ அஸ்லம் மாதிரி நடிக்குறதுல ஒரு சிக்கல் இருக்கு. அஸ்லம் தன் நிழலைவிட வேகமா கோழிக்கு மேல பாய்ந்து அதக் கொல்லக்கூடியவன். அதுமட்டுமில்ல தென்னமரத்துல ஏறி இளநீர் குலைய பறிச்சிப்போட்டுவிட்டு அது கீழ விழமுன்னர் அஸ்லம் கீழ நிப்பான். இது உன்னால முடியுமா?
ரிஃபாஜ் : ஐய்யோ… இதெப்புடி…. என்னால முடியாது. ஆனா என்னால எதிர்ல இருக்குறவன் கை கழுவி வரமுன்னமே முழுக் கோழியா எலும்பக்கூட மிச்சம் வெக்காம முழுசா முழுங்க முடியும். அதோட மத்தவன் வெட்டின இளநீர அவன் குடிக்கமுதல்லே பறிச்சுக் குடிக்க முடியும். அதுக்கப்புறம் அவன் தாறஅடிய சத்தமே போடாம வாங்கமுடியும். அவளவுதான்
ரிஸ்வி: சரி பரவாயில்ல விடு. நாங்க ஒரு கோழியப் பிடிச்சு கொன்று உன் முன்னாடி போடுறம் நீ கப்புனு அதுக்குமேல பாய்ந்து அத நீதான் கொண்ட மாதிரி பில்ட் அப் குடு. உனக்கு முன்னாடியே மரத்துல ஏறி நான் நிப்பன். அதுக்கப்புறம் நீ ஏறி இளநி குலைய பறிக்குறமாதிரி பறிச்சிட்டு இறங்கு அதுக்கப்புறம் நான் ஒரு குலையப் பறிச்சி கீழ போடுறன். நம்ம சங்கத்து முட்டாளுக அத நம்பிடுவானுங்க. சரியா?
நால்வரும் சேர்ந்து க.ப.சங்கத்தப்பத்தி அஸலத்துக்கு சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம் எல்லோரும் க.ப.சங்கத்து தலைமையகத்துக்கு வந்துட்டாங்க. அங்க சங்கத்தாளுக எல்லாம் நிக்குறானுக. அஸ்லம் திரும்பி வாரத கண்டதும் எல்லோரும் குதூகலிக்குறாங்க.
க.ப.சங்கத் தலைவன் அஸ்லம் வாழ்க! கோழிக் கள்ளன் அ…….ம் வாழ்க, இளநீர் திருடும் இளிச்சவாயன் அ….ம் வாழ்க, எங்கள் சங்கத்து ஆழுக மீது விழும் ஒவ்வொரு அடியையும் தானே வாங்கும் தானைத் தலைவன் அஸ்லம் வாழ்க!
பலத்த வரவேற்பினைத் தொடர்ந்து தலைமை உரையாற்ற அஸ்லம்(ரிஃபாஜ்) அழைக்கப்பட்டார். தலைவர் உரை ஆரம்பம்.
”ஹ்ஹ்ம்ம்……….. அன்பார்ந்த க.ப.சங்க உபதலைவர் லொடுக்குப்பாண்டி அவர்களே, க.ப.சங்க வட்டச் செயலாளர் வண்டு முருகன் அவர்களே, சதுரச் செயலாளர் கைப்புள்ள அவர்களே, க.ப.சங்கத்தின் உறுப்பினர்களான களவானிப்பயபுள்ளைகளே! உங்கள் எல்லாருக்கும் வணக்கம். நம்ம க.ப.சங்கத்தின் கொள்கையின்படி ஒரு வேளை திண்ணாலும் அதை களவெடுத்துதான் நாங்கள் திண்ண வேண்டும். இது வரைக்கும் நாம எப்புடி இருந்தோமிங்குறது முக்கியமில்ல இனிமே எப்புடி இருக்கப் போறம் எங்குறதுதான் முக்கியம்,(எல்லோரும் ஒரே அமைதி) நான் இப்படி கஸ்ட்டப்பட்டு பன்ஞ் டயலொக் சொல்றனே…. எவனாவது ஒருத்தன் கை தட்டினீங்கலாடா ட்யூப் லைட்டுக்கு பொறந்தவனுகளே….(தலைவர் ஆவேசமானதைக் கண்ட ரிசாட் ஆறுதல் படுத்துகிறார். உரை தொடர்கிறது.) நாம இனிமே நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்காப் பண்ணனும். (கைதட்டல்) நம்ம சங்கத்து ஆளுக மேல எவனாவது கை வெச்சா அத நான் பாதுட்டு சும்மா இருக்கமாட்டன். அவன் மீது விழுற அடிய நானே வாங்குவன். (கைதட்டல்){”பயபுள்ளைகளுக்கு ஆசையப்பாரு?” தன் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்.} இந்த வேளையில நம்ம சங்கத்துக்கு பரம எதிரியான கட்டதொரைக்கு ஒன்னு சொல்ல ஆசப்படுறன். டேய் கட்டதொர முடிஞ்சா என் சங்கத்து ஆள டச் பண்ணிப்பாரு. அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி (கைதட்டல்) ஒரு கோழிதான் களவெடுத்தாலும் அத எல்லாரும் சேர்ந்து கோலாகலமாச் சாப்புடனும். ஆனா மிஞ்சின எலும்ப எனக்கு தந்துடனும். இத்துடன் எனது உரையை முடிச்சுக்குறன். வயித்தெரிச்சலோட கேட்டுட்டு இருந்த பயபுள்ளைங்க எல்லாருக்கும் நன்றி. ”
தலைவர் உரையைத் தொடர்ந்து க.ப.சங்க கொள்கையின்படி செயட்படுவதாக சபத்மெடுத்துவிட்டு எல்லோரும் கலைந்து செல்கிறார்கள்.
5 comments:
Cutee.....
god wrk pal!!!
சிறந்த முயற்ச்சி.. மேலும் தொடர்க.
Thnx radhini & Janani. thnx a lot.
இன்னும் எழுதுங்கள் ... நல்லாயிருக்கு...
//Mohamed Faaique கூறியது...
இன்னும் எழுதுங்கள் ... நல்லாயிருக்கு..//
நன்றி உங்கள் கருத்துக்கு.
உங்கள் ஆதரவு தொடர்ந்தும் வேண்டும்.
கருத்துரையிடுக