RSS

பரமுக்கு நடந்தது என்ன…..?

நம்ம நண்பர் பரமுக்கு நடந்தது என்ன…..?

இந்த வாரம் முழுவது நம்ம ரூம் மெட் பரமுக்கு ஏகப்பட்ட குடைச்சல்கள்..


"அதென்ன பரம்; அப்படி ஒரு பெயரா..?" எண்டெல்லாம் கேக்கப்படாது. ஏன்னா பெயர ஓபனா சொல்லிட்டு ஓப்பன் பிளேஸ்ல அடிவாங்க என்னால ஏலாது… அதுக்காக பாவிக்கிற பெயர்தான் இது ஆனாலும் இதிலும் ஒரு காரணம் இருக்கு…..அது கெம்பஸ் ரகசியம்.

சரி மேட்டருக்கு வரலாம்…

நம்ம நண்பர் பரம்ட ஃபோட்டோவ வெச்சு யாரோ ஒருத்தன் அவர்ட பெயர்லயே வேற ஒரு ஃபேஸ்புக் அக்கெளண்ட் உருவாக்கி அவருக்கே Request அனுப்பியிருக்கான். அத பாத்தவுடனேயே.. ஏய் இது அதுல்ல என்று குழம்பிப்போன நம்ம பரம் யாரு இத செஞ்சிருப்பான் எண்டு செம கடுப்புல இருக்காரு.

அந்த அக்கெளண்டுல அவர்ர ஃபோட்டோவ காமெடியா போட்டு அவரப்பத்தி அவரே கேவலமா சொல்றமாதிரி போட்டிருக்குறது மட்டுமில்லாம அவர்ட நண்பர்கள் எல்லாருக்கும் Request போகுது. இதுதான் நம்ம பரமுக்கு செம கடுப்பு.


அதுல ஒரு கொடும என்னன்னா…? முதல் இணைஞ்சு கொண்ட ரெண்டு ஃப்ரென்ஸ்ல நானும் நம்ம சுண்டெலி ஹஸ்ஸானும் இருக்குறதால எங்க ரெண்டுபேர் மேலையும் அண்ணாத்தைக்கு பயங்கர சந்தேகம். எப்ப பேஸ்புக் வந்தாலும் பின்னால ரகசியமா வந்து எட்டிப்பாக்குறாரு.
அப்பகூட ஒரு துப்பும்கிடைக்கல்ல நம்ம அண்ணாத்தைக்கு.
(ஹி ஹி நாங்க யாரு... புறாவுக்கே பெல்லடிச்சவைங்க எங்ககிட்டேவா…?)
யார சந்தேகப்படுறது என்று தெரியாம பரிதாபமா குந்தின்னிருக்காரு.

                           
இந்த விசயத்துல தனக்கு நீதி கிடைக்கனும், குற்றவாளி தண்டிக்கப்படனும் எங்குறதுல பரம் உறுதியா இருக்காரு…

தனக்கு நீதி பெற்றுத்தரனும்னு கேட்டு ஜனாதிபதிகிட்ட மனு குடுக்கப் போயிருக்காரு. அதுலையும் ஒரு சிக்கல். அதுல என்ன சிக்கல்னா இவர் ஜனாதிபதிய சந்திக்க போறதுக்கு முண்ணாடியே இவர் தேர்தல் காலங்கள்ள ஜனாதிபதிக்கு எதிரா அனுப்பின எஸ்.எம்.எஸ்கள யாரோ ஒரு நலன் விரும்பி ஜனாதிபதிக்கே Forward பண்ணியுட்டான். இது எப்படியோ பரம் காதுல விழுந்துட்டு… ஆஹா இப்போ போயி ஜனாதிபதிய சந்திச்சா ஸ்ரைட்டா நாலாம் மாடிதான் எண்டு புரிஞ்சுகொண்ட பரம் அந்த மனுவ மெனுவா மாத்தி முழுங்கிட்டாரு…..

அதுக்கப்புறம் இந்த விசயத்துல உதவுமாறு ரகசிய பொலீசாரிடம் முறையிட போயிருக்காரு. அங்கபோனா வோண்டட் லிஸ்ட்டுல தண்ட ஃபோட்டோ இருக்குறதப்பாத்து ஆள் பின் கதவு வழியா எகிறிக் குதிச்சு எஸ்கேப்.

இது இப்படி இருக்க… புதுசா ஒரு பிரச்சின. என்னடா அப்படின்னு பாத்தா இந்தமுறை அவர்ட ஒரிஜினல் அக்கெளண்டையே ஒருத்தன் ஹெக் பண்ணி ரொம்ப கேவலமா ஸ்டேடஸ் போட்டிருக்கான். ஆஹா நம்மளையே வெச்சு காமெடி பண்றாய்ங்களே..எண்டு கவலப்பட்ட பரம் தலையில துண்டப்போடுட்டு கூரையப் பாத்துட்டிருந்தாரு..

வெறுத்துப் போன பரம் இனியும் தான் பொறுத்திருக்க முடியாதுன்னு முடிவெடுத்து… ஸ்கொட்லாந்யார்ட் பொலீசாரை உதவிக்கு கூப்பிட்டிருக்காரு. அதுக்கு நிறைய காசு வேணுமே எண்டு சைடுல ஒரு பிஸ்னஸ் செய்வம் எண்டு சொல்லி தண்ட நண்பர் ஒருத்தர் மூலமா டொங்கல் பிஸ்னஸ் ஆரம்பிச்சாரு…. ஆனா அதுலையும் ஒரு சிக்கல்..
என்னடா அப்படின்னா பார்த்தா அண்ணாத்தைக்கு பிஸ்னஸ் டெக்னிக் தெரியல. வாங்கின விலைக்கே விக்கவேண்டிய நிலம.
சரி கொஞ்சம் விலையக் குறைச்சு டொங்கல வாங்கலாம் எண்டு முடிவெடுத்த பரம் தன் நண்பர்கிட்ட சொல்லி விலைய குறச்சுக் கேட்டாரு. அதுல என்ன காமெடி அப்படின்னு பாத்தா டொங்கள் இம்ப்போர்ட் பண்றது அவர்ட நண்பனில்ல. அப்போ யாரு…? நண்பனின் நண்பனின் நண்பனின் நண்பனின் சகோதரன்.

இத்துன பேயர்களையும் சாரி பேர்களையும் தாண்டிவாற டொங்கல்ல என்னெண்டு விலயக் கொறைக்குறது… சரி விட்டுடலாம் எண்டு அதே விலைக்கே பிஸ்னஸ் நடத்த முடிவெடுத்தாரு. ஆனாலும் ஐட்டம் இன்னும் பிரசவமாகல மறுபடியும் சாறீ….. டெலிவரி ஆகல்ல எங்குறத தமிழ்ல சொல்லிப்பாத்தன். இப்போ சொந்த செலவுல சூசூனியம் வெச்சிகிட்டாரு.

சரி அப்பையாவது அடங்கவேணாமா… ஆச ஆசையோ ஆச. என்ன பண்ணினாரு. சொல்றன் கேளுங்க. ( அப்படியே அடுத்த பரகிறாஃபுக்கு ஜம்பாகுங்க)

மிகிந்தலையில பொசன் சீசன் ஆரம்பமாகுது லைட்டா ஒரு கடையப் போட்டு கொஞ்சம் பணத்த பொரட்டலாம் எண்டு கட்டில்ல பொரண்டு பொரண்டு யோசிச்சு ஒரு முடிவெடுத்து நாலு பார்ட்னச சேர்த்துகிட்டாரு. எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி நடந்துட்டிருக்கும்போது பொசன் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடியே பார்ட்னசெல்லாரும் விலகிட்டாங்க. என்னடா இது; ஏன் திடீர்னு இப்படி விலகிட்டானுங்க எண்டு விசாரிச்சா அப்பதான் விசயம் வெளியில வந்துது. அதென்ன விசயம்..?
(வாங்க அடுத்த பந்திக்கு. பந்தின்னதும் வாயில எச்சி ஊறுதோ..? ஹி ஹி இது அது இல்ல, அடுத்த பரகிறாஃப். ஹி ஹி )

எங்கவிட்டன்..? ஆ…. அதென்ன விசயம்..?
எப்படியோ அந்த நாலு பார்ட்னசுக்கும் பரம்ட டொங்கல் பிசினஸ் சொதப்பின மேட்டர் லீக்காயிடிச்சு.
ஆஹா இப்படிப்பட்ட ஆளோடா கூட்டு சேர்ந்து மொதலுக்கே ஆப்படிக்க முடியாதுன்னுதான் அவங்க ஜூட் விட்டுடாங்க.

ஒரு மனுசனுக்கு எவ்ளோவ் எடஞ்சல் பண்றாய்ங்க…...

இதெல்லாத்தையும் பாத்து மனசொடஞ்சுபோன நம்ம பரம்.
“இனி ஒன்னும் சரிவராது உங்களால எவ்வளவு முடியுமோ அவளவுத்தையும் பண்ணுங்கப்பா” அப்படின்னு முடிவெடுத்துட்டாரு.சரி பரம் இப்போ என்ன பன்றாருன்னு கேகிங்களா..?

இப்போ….. இப்போ….. ஃபேஸ்புக்ல தண்ட ஒரிஜினல் அக்கெளண்டுல எவனோ தனக்கு கேவலமா போட்ட ஸ்டேடஸ்ஸையும் அதுக்கு மத்தவங்க போட்ட கொமென்ஸையும் பாத்துட்டு இருக்காரு. இதுல என்ன காமெடின்னா…. யூசர்நேம், பாஸ்வேர்ட் இருந்தும் அந்த ஸ்டேடஸ்ஸ அழிக்க தெரியாம பப்பரப்பேனு குந்தின்னிருக்காரு…(கோட்டர் கோவிந்தன் வந்துதான் பரம சமாதானப்படுத்தனும்.)

இபோ கடைசியா விக்கல் வந்து அத நிறுத்த முடியாம நிறுத்த தெரியாம 2500/= குடுத்து மருந்து எடுத்துட்டு வந்திருக்காரு...

ஹி ஹி... அப்போ பாருங்களன்……

(Comments & Vote Plz)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS