RSS

ரவுண்டபோர்ட் சகாஃப்

நம்ம பக்கத்து ஊர்ல ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் சகாஃப்கொஞ்சம் புத்தி சுயாதீனம் குறைஞ்சவர்ஆனா அவர் புத்தி சுயாதீனமற்றவர் என்று இலகுவில் யாருக்கும் தெரிஞ்சிடாது. தெளிவான பைத்தியம் அப்படி சொல்லலாம்..

சகாஃப் எண்டு சொன்னா யாருக்குமே விளங்காது. ஏன் அவருக்கே புரியாது. அவர ரவுண்டபோர்ட் சகாஃப் என்று சொன்னால்தான் எல்லாருக்குமே தெரியும்.
அந்த பெயர் வந்த காரணத்த முதல்ல சொல்லிகிடுவம்.
அந்த ஊர் பிரதான வீதியில ஒரு ரவுண்டபோர்ட் இருக்கு அது நடுவுல ஒரு மணிக்கூண்டு கோபுரம். அதுதான் நம்ம சகாஃப் காக்காட நிரந்தர வாசஸ்த்தலம். அதனாலதான் அவர் ரவுண்டபோர்ட் சகாஃப் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படலானார்.

சரி மேட்டருக்கு வரலாம்.
ஒரு முறை பொதுத் தேர்தல் சூடு பிடித்திருந்த காலம். நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்கா என்ன பண்ணினார்….. அந்த மணிக்கூண்டு கோபுரத்துல இருக்குற கட்டொன்றில் ஏறி நின்று ஆழும் கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யத் தொடங்கிட்டார்.

அன்பான வாக்காளர் பெருமக்களேஇந்த தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல், அராஜகம் புரியும் அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். நமதூரில் ………………கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய ……………………………. இவன் நமதூருக்கு என்ன செய்தான்? லஞ்சம், பந்தம் வாங்கி தன் குடும்பத்தை மட்டுமே அபிவிருத்தி செய்தான். வெறும் 5ம் ஆண்டுகூட படிக்காத அவண்ட தம்பிய வோர்ட்டர் போர்ட் தவிசாளராக்கினான். தன் அடியாட்களுக்கு மட்டுமே வேலை வாங்கிக் கொடுத்தான்……………………………………………………………………………………………………. இப்படிபட்ட இந்த அராஜகமான ஆளை நாங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்க அருமையான வாய்ப்பு இது

இப்படி நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்காட பேச்சு சும்மா ஏறிப் போகுது. இவர்ட பேச்சக் கேட்க சுற்றி ஏராளமானோர் குவிஞ்சுட்டாங்க. கரகோசங்களும், விசில் சத்தங்களும் வானைப்பிளக்குது.

அந்த நேரம் பாத்து அந்த பக்கமா வந்த ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளர் காதுல இதெல்லாம் விழுந்துட்டு.
ஆஹா... பைத்தியாம இருந்தாலும் ரொம்ப தெளிவாப் பேசுறானய்யா…., தலைவர்ர சீக்கிரட்ட சிக்கனமா அவுத்துவிடுரானே…”
அப்படி யோசிச்ச அந்தாளு உடனே கட்சிக் கிளைக்கு ஓடிப் போய் மேட்டர சொல்லி அங்கிருந்த குண்டர்களையெல்லாம் கூட்டிட்டு வந்துட்டான்.

மிக ஆவேசமா அனல்பறக்க பேசிட்டிருந்த நம்ம பிரச்சார பீரங்கி ரவுண்டபோர்ட் சகாஃப் ஆளும் கட்சி குண்டர்கள்  தடிகள், ஆயுதங்களோட ஆக்ரோசமா வர்ரத கண்டுட்டாரு.
ஆகா.. வேலில போன ஓணான பிடிச்சி வேட்டிகுள்ள விட்டுடோமோ….” அப்படின்னு நெனச்சிட்டிருக்குற நேரம் குண்டர்களும் நெருங்கி வந்துடாங்க. அப்போ நம்மாளு போட்டாரு பாருங்க ஒரு போடு.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இதக்கேட்ட கூடிநின்னவங்க மட்டுமில்ல அடிக்கவந்த குண்டர்களுக்கும் சிரிப்ப அடக்க முடியல. சிரிச்சிகிட்டே திரும்பிப் போயிட்டாங்க.

நம்ம ரவுண்டபோர்ட் சகாஃப் காக்காவும் சபா…….. இப்பவே கண்ணக்கட்டுதேஅப்படின்னு சொல்லிகிட்டே நைசா நடையக் கட்டிட்டாரு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS