RSS

மோசடிப் பேர்வழி சக்விதி ரணசிங்க கைது."

(சனிக்கிழமை போடவேண்டிய இந்தப் பதிவ சில பல மூட்-அவுட்களாலும் சில பல வேலைப்பழுக்களாலும் பப்லீஸ் பண்ண முடியல ஃப்ரென்ட்ஸ்.)

வழமை போல கடந்த வெள்ளிக் கிழமையும்  நான் இங்லீஸ் பேப்பர்கள் பக்கம் என் பார்வைய திருப்பினனா(அடேய் யாருடா அது.. பேப்பரா? இல்ல இங்லீஸ் படமான்னு கேக்குறது… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்………பேப்பர்தான்.)
எல்லாப் பேப்பர்கள்லையும் 
The most wanted fraudster Sakvithi Ranasinghe arrested
 என்பதுதான் பிரதான தலைப்புச் செய்தி. சரி மத்த தமிழ் சிங்களப் பேப்பர்கள்ள ஏதும் இருக்கான்னு பாத்தா தமிழ் பேப்பர் கிடைக்கல்ல சிங்களப் பேப்பர்கள்ளையும் அதே தலைப்பு ஆனா என்ன அதுல சிங்களத்துல போட்டிருந்தாங்க. .  

 "பிரபல நிதி மோசடிப் பேர்வழி சக்விதி ரணசிங்க கைது." 
                                                                                                                                                        
   Abhaya Ranasinghe Mudiyanselage Chandana Weera Kumara alias Sakvithi Ranasinghe
இதுதான்அண்ணாத்தட முழுப் பெயர். சக்விதி ரணசிங்க என்பது அண்ணாத்தட செல்லப் பெயர்.


 அண்ணாத்த இன்னா பண்ணினாரா…?????????? குத்து மதிப்பா ஒரு ரெண்டு வருசதுக்கு முன்னாடி… @@@@@ இன்னாங்குறீங்க….??? 
ஒரு கோடி ரெண்டு கோடியில்லீங்க மொத்தமா 1400 கோடி ரூபாய் (யெம்மாடீஈஈஈஈஈஈஈஈஈஈ… எம்புட்டுக் காசு.)சில பேப்பர்கள்ள 1433 கோடி எண்டுறாங்க. சில பேப்பர்கள்ள 1400 சிலதுகள்ள 1040 எண்டுறாங்க. சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெளண்டா 1400 கோடின்னே வெச்சுக்குவம்

அம்புடு காசையும் சுட்டுட்டு அண்ணாத்த தலைமறைவாகிட்டாருல்ல…. இம்புடு காசு எங்க இருந்து எடுத்தாகன்னுதானே கேக்குறீக… அட  போங்க சார். அண்ணாத்த பெரிய இங்கிலீசு டீச்சராமுல்ல…….. இலகுவில் ஆங்கிலம் கற்கலாம் வாங்க அப்படின்னு அண்ணாத்த டீவில இங்கிலீசு படிப்பிச்சாராமில்ல..டிவில அண்ணாத்தட இங்கிலீசப் பாத்துட்டு தொர நல்லாத்தான் இங்கிலீஸு பேசுதுன்னு தொரக்கிட்ட டியூசன் போயிருக்குக. அதுல சில பல லட்சங்கள அண்ணாத்த அபேஸ் பண்ணிகினாரு


 அண்ணாத்த இங்லீஸு படிப்பிக்குற அழகே தனிதான் பாருங்களேன்... 



அது மட்டுமா Shakthi Building Construction & Man power company (Pvt)Ltd., Success institute & IT Solution center
அப்படின்னு அண்ணாத்த சில பல கம்பனிகள போட்டுத்தாக்கி பல லட்சங்கள் பல கோடிகள  அபேஸ் பண்ணிகினாரு.

அண்ணாத்தட பிஸ்னஸ்லையே மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமோ???? சக்விதி நிதி முதலீட்டு நிறுவனம் (Shakvithi Investment company)  

அப்படின்னா இன்னான்னு கேக்குறீகளா..?? அதாங்க அது பணத்தாச பிடிச்ச பயபுள்ளைங்க கோர்ட்டு சூட்டு மாட்டிகினு பொட்டி நெறைய பணத்த போட்டுகுனு ஒரு கம்பெனில கொண்டு பணத்தையெல்லாம் குட்த்துட்டு ஜாலியா வருவாங்க.. அப்புறம் கொஞ்ச நாளுக்கப்புறம் அதே பயபுள்ளைங்க கிளிஞ்ச பனியனும் கிளியாத வேடியும் போட்டுகினு அதே கம்பெனிகளுக்கு முன்னாடி தலைல துண்டப் போட்டுகுனு குந்தினு கிடப்பானுகளே… இந்தியாவுலையெல்லாம் அடிக்கடி நடக்குமே…. தமிழ் படங்கள்ளையெல்லாம் காட்டுவாங்களே… ஆஆ அதேதான்..


அதுதான் அண்ணாத்தட மாஸ்டர் பீசு. அது மூலமாத்தான் அண்ணாத்த பல பல கோடிகள் அமத்தினாரு. அம்புடு காச எப்புடி சேத்துகினாறுன்னுதானே யோசிக்குறீங்க. அத ஏங்க கேக்குறீங்க???? பணத்தாச பிடிச்ச பயபுள்ளைங்க யாருதானில்ல…..??அண்ணாத்த வேற.. நல்ல பிஸ்னஸ் டெக்னிக் தெரிஞ்சவரா…. நல்ல யூஸ் பண்ணிகினாரு.. சும்மா இல்லீங்க அண்ணாத்த என்ன செஞ்சாரு தெரியுமா?? தண்ட கம்பனில முதலீடு செய்ரபயபுள்ளைங்களுக்கு பத்துல்ல பதினைஞ்சுல்ல 72% வட்டி எண்டு போட்டாரே ஒரு போடு… ஆஆஆஆஆஆஆஆஆஆஆ………… ஆ…. அப்படித்தான் எல்லாருமே வாயப் பொளந்தாய்ன்ங்க.


அப்புறம் சொல்லவா வேணும்.. பணத்தையெல்லாம் கொண்டுபோய் அணாத்தகிட்ட குடுத்துடானுங்க. அதுமட்டுமில்ல பணம் கொடுத்த சிலருக்கு சொன்னமாதிரியே 72% வட்டி கொடுத்து பைசல் பண்ணிட்டாரு. அந்த பயபுள்ளைகளும் அண்ணாத்தட அருமை பெருமைகள ஊர்ல அள்ளிவிட அண்ணாத்தட காட்டுல மழையோ மழ. எல்லா பயபுள்ளைங்களும் அந்த பேங் இந்த பேங்ல போட்ட காசையெல்லாம் எடுத்து அண்ணாத்தகிட்ட நீட்டினாங்க. அண்ணாத்தையும் எல்லாருக்குமே சேர்த்து பெருசா நீட்டினாரு……. கம்பிய.(இதுல என்ன காமெடின்னா 25க்கு மேற்பட்ட பொலீஸ் அதிகாரிங்க, கிரிக்கட் வீரனுங்க, படிச்ச பக்கிகதான் பணம் போட்டு ஏமாந்ததுலே அதிகம்)


 இதுக்கிடையில சில பேங் காரங்களும் என்னை மாதிரி உசார் பார்ட்டிங்களும் அண்ணாத்த ஏதோ தில்லுமுல்லு பண்றாருன்னு போலீசுக்கும்,மத்திய வங்கிக்கும். அலேர்ட் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிங்களும் வெளிக்கிட்டு மேக்கப் போட்டு, லிஃப்ஸ்டிக் போட்டு வாறதுக்கிடையில அண்ணாத்த நாட்டை விட்டே கிரேட் எஸ்க்கேப். அப்புறம் என்ன அண்ணாத்தட கம்பெனிகள்ள மிச்ச சொச்ச ஆபீசருங்கள அள்ளிகிட்டு பொலீஸ் போச்சு. அண்ணாத்தைய பிடிக்குறதுக்கு சர்வதேச பொலீசுக்கும் ஒரு அலர்ட் குடுத்து வெச்சிருந்தாங்க நம்ம பொலீஸ்.எல்லார் கண்ணுலையும் மண்ணத் தூவிட்டு தலை மறைவா இருந்தாரு நம்ம அண்ணாத்த

                                         எப்புடி இருந்த அண்ணாத்த இப்புடி ஆகிட்டாரே....


 கத இப்புடி இருக்குறப்போ கிட்டத்தட்ட 2 வருசத்துக்கப்புறமா அண்ணாத்தட மனைவிட வீட்டுப்பக்கம் அவர்ட மனைவி புதுசா வந்திருக்காகக….. இத சந்தேகப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருத்தர் பொலீசுக்கு ஃபோனப் போட்டு சொல்ல.. உடனடியா அங்கு வந்த அவசரப் போலீஸ் வீட்ட சுத்தி வளச்சு அண்ணாத்தட மனைவிய கைது செஞ்சப்போ; அங்க புதுசா ஒருத்தன் கோவா படத்துல ப்ரேஜ்ஜி அமரன் வெச்சிருந்த அதே தாடியோட. யார்ரா இவன் அப்படின்னு விசாரிச்சா…. அட நம்மாளு.. யாரு?? நம்ம்ம சக்விதி ரணசிங்க அண்ணாத்ததான். பயபுள்ள இங்கினைக்குள்ளையே சில மாசமா சுத்தீனு இருந்திருக்கு. அதுவும் தமிழ் பெயரொண்டோட. இந்தியாவிலிருந்துதான் கடைசியா வந்திருக்காக.


அண்ணாத்தைய கண்ட சந்தோசத்துல நம்ம பொலீஸ்காரங்களுக்கு படு குசி.செல்லம் லவ்யூ….. வாடாச் செல்லம் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்க. இது இடம் சரியில்ல வா மாமியா வீடு இருக்கு அங்கன போய் நல்ல ராஜமரியாதையோட நலம் விசாரிப்பம் வா…. வாடாச் செல்லம் வா.. அப்படின்னு அள்ளிகின்னு போயிட்டாங்க. அண்ணாத்தட மனைவியையும்தான்.


அதுகுள்ள பொலீஸ் காரங்க சீ..டீ க்கு ஃபோனப்போட்டு மச்சான் நம்ம சக்விதி மாட்டிருக்கான் ஃப்ரீயா இருந்தா வாங்கடா மாப்புளகளா. அப்படின்னு சொல்ல அதுக்கு நம்ம சீ..டீ...  இல்லடா மாப்புள கொஞ்சம் பிசியா இருக்கம்…செல்லத்த இங்க அனுப்புங்க நாங்க நல்லா நலம் விசாரிக்குறம். அப்படின்னு சொல்ல இப்போ அண்ணாத்டைய பொலீஸ் வண்டியில ஏத்தி சீ..டீ கிட்ட அனுப்பிடாங்க. அண்ணாத்த இப்போ சீ..டீகிட இருக்காரு.


இன்னைக்கு நம்ம Police Big Principel என்ன சொல்றாரெண்டாஎன்னது……?? Police Big Principel என்றால் யாரா???? ஐய்யோ எல்லாருக்கும் இங்லீஸ் ரொம்ப வீக். அதான் சார் பொலீஸ் மா அதிபர். அவரத்தான் இங்லீஸ்ல சொன்னன்.(ஹி ஹி ஹிஎன்ன சொல்லிருக்காருன்னா சக்விதி அண்ணாத்த மேல யாருக்கும் ரொம்ப லவ் எண்டால் (ஹி ஹி முறைப்பாடு செய்யவிரும்பினால்) அது சம்பந்தமான தகவல்களப் கேட்டுக்குறதுக்கு 011 2422176 என்கிற நம்பருக்கு ஃபோனப் போட்டு தகவல்கள தெரிஞ்சிகொள்ளட்டாம் எண்டு சொல்லிகினாரா.. 

நான் என்ன பண்ணினன் தெரியுமா. உடனே இந்த நம்பருக்கு ஒரு ஃபோனப் போட்டு சார் நானும் அந்தாள்கிட்ட ரெண்டரைக் கோடி காசு குடுத்தன் சார்.. எனக்கு அந்த அரைக் கோடி வேணாம் சார் அத வேணும்னா நீங்களே வெச்சுகுங்க.. அந்த ரெண்டு கோடிய மட்டும் வாங்கித் தந்துடுங்க சார். அப்படின்னு சும்மா அடிச்சு விட்டிருக்கன், நீங்களும் ரெளண்டா ஒரு அமெளண்ட அடிச்சு விடுங்க. லம்பா ஒரு அமெளண்ட் கெடச்சாலும் கெடைக்கும்மலேசியாவுல ஒரு பழமொழி சொல்லுவாங்க ம….. கட்டி மலைய இழுப்பம் வந்தா மல போனா ம…….. நீங்களும் சும்மா அடிச்சு விடுங்க


இந்த நேரத்துல நம்ம சக்விதி அண்ணாத்தகிட்ட அவரு நாக்கப் புடிங்குக்குற மாதிரி ஒரு 4 கேள்வி கேக்கப்போறன்

1. அன்னாத்த ஏன் உனக்கு இம்புட்டு ஆச…??
 2.பாத்தியா அண்ணாத்த காச அடிக்கும் போதும் நிம்மதியில்ல அடிச்ச பொறவும் அனுபவிக்க முடியல பாத்தியா?
3.அந்த காச வெச்சு ஒரு 2 வருசமாவது சந்தோசமா இருந்திருப்பியா?
 4.அண்ணாத்த… இம்புடு காச அடிச்சிகின்னு மறுபடியும் இலங்கைக்கு வந்திருக்கியே உனக்கு அறிவில்லையா..??

ஒரு அட்வைஸ் சொல்றன் கேட்டுக்க அண்ணாத்த... பெரியஅமெளண்ட் அடிச்சிருக்குற… அதுல ஒரு அமெளண்ட நம்ம மாண்பு மிகு தலைவர்களுக்கு குடுத்து கரெக்ட் பண்ணீக்கினியெண்டா அப்புறம் நீ எஸ்கேப்தான். ட்ரை பண்ணிப் பாரு அண்ணாத்த... ஒரு வேள வேர்கெளடாகும். நீ செய்யக் கூடிய ஆள்தானே.. செஞ்சுபாரு...


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆகா.. இந்தாளா ..இவ்வளவு கோடி சம்பாரிச்சிருக்கான்?...

Ahamed Suhail சொன்னது…

// பட்டாபட்டி.. கூறியது...
ஆகா.. இந்தாளா ..இவ்வளவு கோடி சம்பாரிச்சிருக்கான்?..//

ஆமா அண்ணாத்த பாத்தா சொங்கி மாதிரி இருந்துட்டு பண்ணினதெல்லாம் டுபாக்கூர் வேல.


இப்போ பொலீஸ் அடிச்ச பணமெல்லாம் எங்கடா என விசாரிச்சப்போ சொல்றானாம்.
பணத்தையெல்லாம் கெசினோ விழையாடுல விட்டுட்டானாம்.

என்னா ஒரு எகத்தாளம் பாத்தீங்களா...????

Mohamed Faaique சொன்னது…

இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே வந்து ஹிந்தி பாட வகுப்பு செய்வான்

அஹமட் சுஹைல் சொன்னது…

// Mohamed Faaique கூறியது...
இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே வந்து ஹிந்தி பாட வகுப்பு செய்வான்
//

செஞ்சாலும் செய்வான். இந்தியாவில இருந்து வந்திருக்கான். இலகுவில் இந்தி கற்கலாமெண்டு கூப்பிட்டால் போறதுக்கும் ஆள் இருக்கும்.


நன்றி Mohamed Faaique
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும். தொடர்ந்தும் வாங்க.

டிலீப் சொன்னது…

அன்னாத இம்மட்டு காசா…….
நானும் அவன்ட இங்கிலிஸ் படிக்க போறத்துக்குதான் இருந்தன் பட் டைம் கிடக்கல….தப்பிச்சன்

அஹமட் சுஹைல் சொன்னது…

// Dileep கூறியது...

அன்னாத இம்மட்டு காசா…….
நானும் அவன்ட இங்கிலிஸ் படிக்க போறத்துக்குதான் இருந்தன் பட் டைம் கிடக்கல….தப்பிச்சன்//

ஆஹா தப்பிச்சீங்க பாஸ். தப்பிச்சீங்க.
இல்லன்னா உங்க காசுக்கு அரோகராதான்.

இம்புட்டுக் காசையும் அடிச்சிட்டு பயபுள்ள இப்போ இன்னா சொல்றான் தெரியுமா??
அம்புடுக் காசையும் கொண்டுபோய் கெஸினோ விளையாடினானாம். யாரூட்டுக் காசுல யாரு விளையாடுறது??

நன்றி திரு.Dileep.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
நன்றி