RSS

தலைப் பிறை நாள். ஐ மிஸ் யூ...

தலைப்பை பாத்துட்டு தம்பி ஏதோ நோன்பு பத்தி சீரியசா சொல்லவாறான் அப்படின்னு நெனச்சா சாறீ.கொம்.
இது சும்மா மலரும் நினைவுகள் மட்டுமே.

ரமழான் மாதம் தலைப்பிறைபார்க்கும் நாளிலிருந்து ஒரு புதுவித அனுபவம் ஆரம்பிக்கும்.  அதை நான் இப்போ ரொம்பவே மிஸ் பன்றன்ரமழான் காலத்தில் நான் ஊரிலிருக்கும் போது நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை நான் இப்போ ஊருக்கு வெளியே இருந்துகொண்டு ரொம்பவே மிஸ்பண்றன்கல்விக்காக ஊரைவிட்டு வெளியே வந்திருக்கும் எனக்கு அவற்றையெல்லாம் இப்போ மலரும் நினைவாக நினைக்க முடியுதே தவிர அனுபவிக்க முடியல.  என் ஆறுதலுக்காக அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவுஇப்பதிவு தொடர்ச்சியாக வரும்.


தலைப்பிறை காண வீட்டு வாசலில் என் தாய்அன்ரிமாரோடு (தாயின் சகோதரிமார்) அமர்ந்து கதச்சுக்கொண்டிருப்பாவா..? அந்த நேரம் இடையில புகுந்து நானும் ஏதாவது பகடியா கதைச்சுட்டிருக்கும் போதே
என் தாயை சீண்டிவிட எனக்குத் தெரிந்த யாராவது ஒரு பெண்ணை அல்லது என் பாடசாலை நண்பியைப் பற்றி இடைக்கிடையே அவள் நல்ல அழகு, என்கூட அன்னைக்கு அப்படி கதைச்சுது, இப்படி கதைச்சுது, என் மேல அந்தப் பிள்ளைக்கு சின்ன லைனொண்டு இருக்கு அப்படி சொன்னாப் போதும்….

அவ(என் தாய்) …. அதெல்லாம் படிச்சு முடிச்சுட்டு அப்புறம் பாத்துக்கலாம், இப்போ படிக்குற வேலைய மட்டும் பாருங்கவாப்பா.  யாரு பிள்ள அது இரு நாளைக்கு ஸ்கூல்ல அந்த பிள்ளைய சந்திச்சு விசாரிக்கன் என்று சொல்ல. நானும் சரி இப்போ சொல்லி வெக்குறன் அப்புறம் பாத்து முடிச்சி வெய்ங்க அப்படி சொல்லிஇன்னும் இன்னும் சீண்டிவிட அப்புறம் என் தாய், அண்ரி மார் எல்லாரும் சேர்ந்து எனக்கு அட்வைஸ் பண்ண.. ஐய்யோ இந்த டீச்சர்ரா மகனா இருந்துட்டு நான் பர்ர பாடு, உம்மா, அன்ரிமார் படிப்பிக்குற ஸ்கூல்ல நானும் படிக்குறதால  ஒரு பிள்ளைக்கு நிம்மதியா லைன்விட முடியல அப்படி சொல்லிக்கிட்டே அங்கிருந்து கிளம்பும் அனுபவம்..
ஹைய்யோ அது ஒரு அற்புத உணர்வு சார் அது..
(இத ரொம்பவே மிஸ்பண்றன்)

அப்படியே அங்கே இருந்து எஸ்கேப்பாகி நண்பர்களோட நகர்வலம் போகும் அனுபவம் ஹைய்யோ அது சூப்பரோ சூப்பர்.
ஒரு சைக்கிள்ள ரெண்டுபேர் வீதம் பல சைக்கிள்கள். சைக்கிள ஓடுரவனுக்கு சப்போர்ட்டாக கால் போட்டுக்கிட்டு எல்லா ரோட்டுலையும் வலம். அதுல நம்ம ஸ்கூல் ஃபிகருங்க ஏரியாப் பக்கமா போய் அந்த பிகரு பெயர சொல்லி சத்தம் போட்டுட்டே போற அனுபவம் இருக்கே…. ஆஹாஆஆ......
யாராவது நம்ம ஸ்கூல் பிகருங்க ரோட்ல நின்னா சைகிள மெதுவா ஓடிகிட்டே சைக்கில் பெல்ல அடிசிக்கிட்டு ஸ்கூல்ல அந்த பிகரு சம்பந்தமான ஜோக்க சொல்லிகிட்டு, ஏதாவது பாட்டுப் பாடிகிட்டே போற சுகம்….. ம்ம்ம்
(அதென்னமோ தெரியல சார் ஃபிகருங்கள கண்டாலேஜோக்குகளும், நக்கல்களும்,நையாண்டிகளும் அதுவா டைமிங்ல ரைமிங்கா வருது சார்...)
(அந்த டைமிங் ரைமிங் எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றன்)

அப்படித்தான் ஹாயா பாட்டு படிசிகிட்டே போகையில யாராவது ஒரு பிகருட உம்மா அந்த டீச்சர்ட மகனா புள்ள அது எண்டு கேட்டு என் ஃபியூசப் புடிங்கின வரலாறுகள நான் என்னெண்டு சொல்ல.
(என் கூட எத்துனையோ பசங்க வருவானுங்க அவனுகளையெல்லாம் விட்டுட்டு நம்ம மேலயேஏஏ குறியா இருப்பாய்ங்க. அந்த இருட்டுலையும் நம்ம அவளவு பிரகாசமோ…??)

இப்படியே அந்த மாலை (7 மணியளவில்) வேளையில் ஊரைச் சுற்றிவரும் போது எல்லார் வீட்டிலும் வானொலிப் பெட்டி அதிலும் முஸ்லிம் சேவைதான் சத்தமா ஒலிக்கும்.

கொழும்பு பெரியபள்ளி வாயிலின் தலைப்பிறை அறிவிப்பைக் கேட்க ஆவலாய் வானொலிப் பெட்டியின் சத்தத்தை கூட்டி வெச்சிட்டு வீட்டு வாசலில் உற்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டும் தெரிந்தவர்களிடம் பிறை கண்டாச்சாமா? நாளைக்கு நோன்பாமா? என்று விசாரிச்சுக் கொண்டும் பெண்கள் இருக்க..; ஆண்களோ சந்தியிலும் பள்ளிவாயிலிலும் பிறை அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கும்காட்சிகள்  காண்பதற்கு அழகானவை.
(அந்த அழகான காட்சிகளை நான் ரொம்ப மிஸ் பண்றன்)

வயசானவங்க உற்காந்து எங்கட காலத்துல அப்படியாச்சு, இப்படியாச்சு. ஒருமுறை நாளைக்கு நோம்பில்லன்னு சொல்லிட்டு இரவு 12 / 1 மணிமட்டுல திரும்ப நாளைக்கு நோன்புன்னு அறிவிச்சாங்க அப்படின்னு சொல்லி அவங்க காலத்து கதைகள கதைச்சிட்டிருக்கும் போது..
மூத்தம்மா அதெல்லாம் உங்க காலம் இப்ப அப்படியெல்லாம் இல்ல பிற தெரியலனா மேகத்த கிழிச்சுகிட்டு ராக்கெட்ல போயாவது பிற கண்டுபிடிச்சிட்டு வருவம் எண்டு சொல்லி அவங்கள கலாச்சிகிட்டு போற அந்த நாட்கள நான் ரொம்பவே மிஸ் பண்றன்.

இதையெல்லாம் ரசிச்சிகிட்டே வீதியில் ஓடியாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கிடையே போகும் போது. யாராவது ஒரு குட்டிப் பயலப் பிடிச்சி என்ன மச்சினன் நோம்புக்கு ரெடியா?, ராத்தா பிற பாக்குறல்லியாம? எங்கடா ஆளக் காணோம்? ரோட்டுல வந்து நிக்கச் சொல்லுடா... எண்டு அந்தக் குட்டிப் பைய்யன்களிடம் கோரசா விசாரிக்கும் போது. அதுல சில குட்டிச் சாத்தான்கள் வில்லங்கமா கொடுக்குற பதில்களால ஐய்யோ வடபோச்சே... அப்படி ஃபீல் பண்ணிகிட்டு.... சில நேரம் அவனுங்க ஏசுற ஏச்ச தாங்க முடியாம சைக்கிள விட்டு இறங்கி அந்த குட்டிச்  சாத்தான துரத்துரத்திக் கொண்டுபோக... அவன் வீட்டுக்குள்ள ஓட…. அப்புறம் அந்த இடத்தோட வாபஸ் வாங்கிட்டு எங்கள் நகர்வலத்த தொடரும் அனுபவம் இருக்கே…. அத அனுபவிக்கனும் சார்.
(அந்த அனுபவத்தையும் நான் ரொம்ப மிஸ் பண்றன்)
 
நானே ராஜா மத்த நண்பர்களெல்லாம் மந்திரிகள் எண்டு ஜாலியா  போய்க்கொண்டிருக்குற நேரம் நம்ம மூத்த சகோதரர்களோ நெருங்கிய உறவுக்காரங்களோ அந்த ஏரியாவுல நின்னா
ரூட்ட மாத்து…….. அப்படி சொல்லி அடுத்த ரூட்டுக்கு மாறும் போதும் சரி. அவங்களுக்கு முன்னாடி எதுவுமே பண்ணாத தொத்த பபா மாதிரி அமைதியா போகும் போதும் சரி எங்க நடிப்பு இருக்கே…?? சிவாஜி எங்ககிட்ட கடன் வாங்கனும். அப்படி ஒரு நடிப்பு.
(அப்படி நடித்த நாட்கள ரொம்ப மிஸ் பண்றன் சார்)

இப்படி நகர் வலம் போய்க்கொண்டிருக்கும் நேரம் பாத்து எங்காவது பிறை தென்பட்டா பள்ளிலையும், வானொலியிலையும் ஒரே நேரத்துல அறிவிப்பாங்க. அதக் கேட்ட உடனே எங்க நகர்வலத்த நிறுத்திட்டு எங்க வீடுகள நோக்கி வேக வேகமா வருவோம்ல அந்த நேரம் பசங்க பட்டாசு கொழுத்தி சந்தோசமா இருப்பாங்.(இப்போ இந்த பட்டாசு நாகரீகம் ரொம்பவே குறஞ்சுடுச்சு. ) 
அந்த கூட்டத்துல நாங்களும் சங்கமமாகி…. சில பல பட்டாசுகள கொழுத்திப் போட்டுட்டு அதுல சிலத அள்ளிகிட்டுப் போய் நமக்கு ரொம்ப பிடிச்ச(??) பயபுள்ளைங்க, நல்லா(????) படிப்பிக்குற வாத்தியாருங்க வீட்டுல நைசாப் போட்டுட்டு நாசூக்கா எஸ்கேப்பாகுற டெக்னிக் இருக்கே…. ஹி ஹி... (கேளுங்க சொல்லித்தாரன்)
அந்த பட்டாசு அவிங்க வீட்டுல விழுந்து வெடிக்குற சத்தமிருக்கே…. அதக் கேக்குறப்போ ஹைய்யோ....ஆர்.ரஹ்மான்ட இசையில ஸ்ரேயா கோசல் பாடினா எப்பிடி இருக்கும் அப்பிடி இன்பமா இருக்கும். அனுபவிச்சுப் பாருங்க சார்.
(அந்த இன்பத்தையும் நான் ரொம்பவே மிஸ்பண்றன் சார்.)

சில வானவெடிகள (ரொக்கட்) வீராப்பா கையில பிடிச்சு  விடுறப்போ சில பல நேரங்கள்ள இலக்குத் தவறி எவன் வீட்டு கூரையிலையாவது விழுந்துடும். அந்த வீட்டுக்காரணும் எவண்டா அவன் சின்னப் பிள்ளைகள் தூங்குற வீட்டுல வெடிலப்போட்டது எண்டு வெறியோட வர்ரப்போ நாங்களும் அநியாயத்த தட்டிக்கேக்குற தன்மானச் சிங்கங்கள் மாதிரி கோரசா யார்ராவன் வெடிலப்போட்டது பிடிடா அவன எண்டு சொல்லிகிட்டு யாருமே இல்லாத திசையாப்பாத்து சும்மா துரத்திக்கு ஓடுராப்போல ஓடி எஸ்கேப்பாகுவமே... அந்த டைமிங்க என்னன்னு சொல்றது.
அந்த இனிமையான நாற்களக்கூட இந்த முறையும் மிஸ்பண்றன் சார்.



இப்படியே ஊர ரணகளப்படுத்திட்டு எதுவுமே பண்ணாத அப்பாவி மாதிரி இந்தப் பாவி வீட்ட வருவானே... அப்போ யாரும் சொல்லுவாங்க…. இவனாடா அவன்னூ…? ம்ஹும் யாருமே சொல்லமாட்டாங்க.
அவ்ளோஓஓஓஓஓ  நல்ல பிள்ள நானு.


அப்படியே வீட்ட வந்தா நம்ம தாயார் பெரிய லிஸ்ட்டோட வெயிட் பண்ணுவா  எங்க ராசா போய் சுத்திட்டு வர்ர…. அவசரமா போய் இந்தசாமானெல்லாம் வாங்கிவான்னு லிஸ்ட்ட குடுப்பாவா?
சரி டெடிட மோட்டார் சைக்கிள தந்தாதான் போவன் எண்டு கண்டிசன் போட்டு மோட்டார் சைகிள எடுத்துட்டுப் போவனே அதையும் இந்த முற மிஸ் பண்ணுறன். அப்படி அலேக்கா மோட்டார் சைகிள எடுத்துட்டுப் போற நேரமாப் பாத்து மூத்த நானா கெதியாவா நானும் வெளியில போகனும் அப்படின்னு ஒரு அலர்ட் குடுப்பாரு... பாப்பம் கடையில சனமில்லாட்டி கெதியா வருவன் இல்லனா எனக்குத்தெரியாப்பா அப்படி சொல்லிகிட்டு உள்ளுகுள்ள சிரிச்சிகிட்டே போவனே அது சூப்பர் அனுபவம் சார்
 அந்த சூப்பரான அனுபவத்தையும் இந்தமுற மிஸ் பண்றன்.

அப்படியே  கடைக்குப் போனா அங்க பெரிய சனம் நிக்கும். நம்மட செல்வாக்கப் பயன்படுத்தி கடைக் கதவ திரந்துட்டு போய் கடக்காரர்கிட்ட பொஸ் இதெல்லாம் போட்டு வெய்ங்க ஒரு பத்து நிமிசத்துல வாரன் அப்படி சொல்லிட்டு மோட்டார்  சைக்கிள எடுத்துட்டு ஒரு ரெளண்ட் போய். நம்ம பசங்க வீட்டுவாசல்ல நின்னு கலர்ஸா ஹோர்ன் பண்ணினா பயபுள்ள வருவான். மச்சான் ஏறுடா ஒரு ரெளண்ட் போய் வருவம் எண்டு சொல்லி அவன அள்ளிகிட்டு மத்த சகாக்கள்ட வீட்டுகெல்லாம் போய். மக்கள் நாளைக்கு 11 மணி மட்டுல வீட்ட வா. கரம்போர்ட் விளையாடுவம் சரியா. டேய் நேரத்தோட எழும்பிட்டாய்ண்டு சொல்லி 11 மணிக்கு முன்னாடி வீட்டுப் பக்கம் வந்தியோ…??? நோம்புண்டும் பாக்கமாட்டன்கொல உழும் சரியா 11 மணிக்குப் பிறகுவா
 (பின்ன என்ன சார் அவனுங்க பாட்டுக்கு நேரத்தோட வீட்டுக்கு வந்துட்டானுங்கன்னா நம்ம தூக்கத்த கெடுத்துடுவானுக..)

அப்படி ஒரு அலர்ட் குடுத்துட்டு அப்படியே
அந்த ரெளண்ட முடிச்சிட்டு பின்னால மங்கி மாதிரி  ஒரு சொங்கி குந்தினிருக்குமே அதக் கொண்டுபோய் அதுட வீட்டுல களட்டி விட்டுட்டு அப்படியே கடைக்கு வந்தா நம்மாளு எல்லாம் கரெக்டா போட்டு வெச்சிருப்பாரு அதையும் தூக்கிட்டு வீட்ட வரும்போது எப்படியும் ஒரு மணித்தியாலம் போயிருக்கும்.

நம்ம அண்ணாத்த இவ்வளவு நேரம் என்னடா செஞ்ச அப்படின்னு சொல்லி கோவத்தோட கேப்பாரா? நானும் அந்தக் கடையில சரியான கிரெளட்; போலின்ல நிண்டு முட்டி மோதி வாங்கிட்டுவாறன் என்று சொல்லும் போது அண்ணாத்த மொறச்சிட்டே ஒரு லுக்குவிடுவாரு நானும் அத பாக்காதமாதிரி தலைய குனிஞ்சிட்டு உள்ள போயிடுவன்(ஹி ஹி ஹி)
அந்த அனுபவம் சூப்பரோ சூப்பர். அதையும் மிஸ்பண்றன்.

ஒருவேள எங்க ஊர்லையே தலைப் பிறை தென்பட்டாஒரு சுவாரஸ்யமான சண்டை ஒன்னு என்னால எங்க வீட்ட நடக்கும்.இந்த இடத்துல அதையும் சொல்லியாகனும்

பொதுவா தலைப் பிறையப்  பாத்துட்டு அப்படியே முன்னாடி நிக்குற ஒருத்தருக்கு சலாம் கொடுப்பாங்கநான் அங்க இங்க ஓடித் திரியிரதால பெருச வீட்டுல இருக்குறதில்ல அப்போ என் தாயார் என் ரெண்டாவது சகோதரர கூப்பிட்டு பிறையப் பாத்துடு சலாம் கொடுப்பாஅப்போ நான் போய் சண்ட பிடிப்பன்ஓ அவரு மட்டும்தான் உங்க பிள்ள அவருக்குதான் சலாம் கொடுங்க எங்களுக்கெல்லாம் வேணா அப்படி சொல்லிட்டே கோவிச்சிட்டு வந்துடுவன்அப்புறம் என் தாயார் என் பின்னாலயே வந்து என் கையப் பிடிச்சி வாசலுக்கு இழுத்துவந்து
(உதைப்பா அப்படின்னு நினைக்குறீங்களா சீ சீ...)
 பிறையப் பாத்துட்டு எனக்கும் சலாம் கொடுத்துட்டு என் நெற்றியில் அழகாய் ஒரு முத்தமிட்டுட்டு சொல்லுவா அவருக்கு சலாம் மட்டும்தான் கொடுத்தன் உனக்கு முத்தமும் சேர்த்துக் கொடுத்திருக்கன் சரியா??அப்படி சொல்லுவாநானும் சந்தோசத்துல நம்ம அண்ணாத்தையப் பாத்து சேர்ட் கொலற தூக்க்கிவிட்டுட்டே எப்புடீ…??????? அப்படின்னு கேட்டுட்டே போவனே 
அந்த முத்தம், அந்த நாட்களை இம்முறையும் ரொம்பவே மிஸ் பண்றன் சார்

நம்ம அன்ரிமார் வீடு பக்கத்துல பக்கதுலையே இருக்குறதால எல்லார் வீட்டையும் போய் காலையில(சஹருக்கு) என்ன சாப்பாடு? எண்டு விசாரிச்சு நமக்கு பிடிச்ச கறி இருந்தா சரி காலையில வீட்டுக்கு இந்தக் கறிய அனுப்பி வெய்ங்க எண்டு ஒரு ஓடரப் போட்டுட்டு வீட்ட வந்தா என் தாய் பெற்ற அன்புச் செல்வங்கள் எல்லாருமே வீட்ல இருப்பாங்க. எல்லாருமா சேர்ந்து இரவுச்சாப்பாட்ட கும்மு கும்முன்னு கும்மிட்டு அவரவர் ரூமுக்குப் போய் தூங்கிடுவம். சாப்பிடும் போது கறிக்கு சண்ட, அவருக்கு கறி கூட எனக்கு குறைய அப்படியெல்லாம் சண்ட பிடிச்சு ஜாலியா சாப்பிடும் அந்த இனிமையான நாற்களையெல்லாம் நான் ரொம்பவே மிஸ் பண்றன்.


ரமழானின் தலைப் பிறை நாள் அன்றே இவளவு சந்தோசம்னா மொத்தம் 30 நாளும் எவ்ளோ சந்தோசமிருக்கும். அதையெல்லாம் இம்முறையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றன்.
அவற்றையும் அடுத்தடுத்த பதிவுல உங்களோட பகிர்ந்துக்கலாமெண்டிருக்கன். உங்க கொமென்ஸ் & வோர்ட்லதான் இருக்கு. பகிர்ந்துகுறதா இல்லையா எங்குறது.
So commets & vote plzzzzzzzzzzzzzz



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

Mohamed Faaique சொன்னது…

ரமலான்'ல உருப்படியா எதுவுமே செய்ய மாட்டீங்களா...
இன்டலி'யில் என் இணைப்பதில்லை..?

அஹமட் சுஹைல் சொன்னது…

//Mohamed Faaique கூறியது...
ரமலான்'ல உருப்படியா எதுவுமே செய்ய மாட்டீங்களா...//

பிரதர்ர்ர்ர்ர்ர்ர் இது அப்போ வாலுப் பைய்யனா இருந்தப்போ... பண்ணின அக்கப்போர்கள்.
இப்பவும் நான் குட்டிப் பைய்யந்தான். ஆனாலும் கொஞ்சம் பக்குவம் வந்துடுச்சு... ஹி ஹி ஹி

//இன்டலி'யில் என் இணைப்பதில்லை..?
//
”இன்ட்லி”தானே இணைச்சிருக்கனே.... பாக்கலையோ.....???

பெயரில்லா சொன்னது…

enna machchan seire appadi thirintha kaalankel nerankel ellam poividdathu ini eppa varum ciycalla 2 peru pora kaalam .unmayakevay supperra.quikka episod toderunke.ok thanks

அஹமட் சுஹைல் சொன்னது…

//பெயரில்லா கூறியது...
enna machchan seire appadi thirintha kaalankel nerankel ellam poividdathu ini eppa varum ciycalla 2 peru pora kaalam .unmayakevay supperra.quikka episod toderunke.ok thanks//

நன்றி நன்றி நன்றி.

தொடர்ந்து வரும்.
சைகிள்ள ரெண்டு பேர் கால் போட்டு போற காலம். இனிக் கஸ்ட்டம்தான். இப்போதான் எல்லாரும் மோட்டர் சைக்கிள் வெச்சிருக்கானுகளே...

Unknown சொன்னது…

iyooo paavam suhail....

அஹமட் சுஹைல் சொன்னது…

// nisha கூறியது...
iyooo paavam suhail....//

யாரு நம்ம ஹைய்யோ ஹைய்யோ நிசாவா?

பரவால்ல நம்ம ஏரியாப்பக்கமும் வர்ரேள் என்ன?

ஓகே, ஓகே