செல்ஃபோனில் காதலித்துப்பார்..
செல்ஃபோனில் காதலித்துப்பார்..
உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாற்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரணாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்
உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்கோர்ள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Miss Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Miss Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்
கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஒன்னுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்
மொபிடெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுதுக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சக்காரனாவாய் இல்லை கடன்காரணாவாய்இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
***அஹமட் சுஹைல்***
பி.கு:
1. இந்த உல்டா முழுக்க முழுக்க என் கற்பனை.
2. இது miss call மட்டுமே கொடுக்கும் காதலிகளுக்கும், Out going பண்ணிப் பண்ணியே ஓட்டாண்டியான காதலர்களுக்கும் சமர்ப்பணம்.
3 comments:
நல்ல தகவல் நன்றி ..காதல் waste thank you for information..
Thnx.
ennudaiya pathivinai en peyarudane ungal pakkaththil ittamaikku manamaarntha nandrikal
@அமைதிச்சாரல்
நன்றி ஐய்யா.
வலைப்பதிவில் தவழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு எழுந்த நடக்க கை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி ஐய்யா.
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நோக்கி
Ahamed Suhail
வருகைக்கும் பகிர்விற்கும் மீண்டும் எனது நன்றிகள்
கருத்துரையிடுக