RSS

இலங்கை அணியின் வரலாற்றுச் சாதனை

நேற்று என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று.. காரணம் இலங்கை அணியின் வரலாற்றுத் தொடர் வெற்றி..

அவுஸ்திரேலிய மண்ணில் அவர்களுக்கெதிராக பெறப்பட்ட வரலாற்றுத் தொடர் வெற்றி.
இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் 26 வருட பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்றுக் கொண்ட முதலாவது தொடர் வெற்றி.

அவுஸ்திரேலிய அணியுடனான 20-20 போட்டியை வென்றபின்னர் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இதுவரையில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இலங்கை அணியினர் 2-0 என்ற கணக்கில் தம் வசப்படுத்தி வரலாறு படைத்துள்ளனர்.

குமார் சங்கக்கார தலைமையிலான இளம் இரத்தம் பாய்ச்சப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி சகல துறைகளிலும் கலக்குகிறது. மட்டுமல்ல இலங்கை அணியில் சகல துறை இளம் வீரர்கள் நிரம்பி வழிகின்றனர்.

முதலாவது போட்டி மலிங்க + மெத்தியூசின் அசத்தலான 9ம் விக்கட் உலக சாதனை  இணைப்பாட்டத்தின் மூலம் பெறப்பட்டது. அதில் அதிஸ்டமும் கலந்திருந்தது என்று சொன்னாலும் நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக மிகச் சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலமாக வெற்றி கிடைத்தது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில்:
உபுல தரங்க(86*) டில்சான்(47), சங்கக்கார(45) ஆகியோர் கலக்க

பந்துவீச்சில்:
மலிங்க(1), நுவன் குலசேகர, திசர பெரேராமுரளீதரன் மற்றும் ரண்டிவ் ஆகியோர் இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியினரின் களத்தடுப்பும் உயர் தரத்தில் இருக்கிறது.

அணியின் இவ்வாறான வெற்றிகள் உலகக் கிண்ணப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு சிறந்த உந்துதலாகவும், உளவியல் ரீதியாக பெரிய பலமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை

இளம் வீரர்கள் முதல் சிரேஸ்ட்ட வீரர்கள்வரை அனைவரும் சகல துறைகளிலும் பிரகாசிக்கின்றனர். அனைவரிடமும் அணி வெல்ல வேண்டும் என்ற தாகம் தெரிகின்றது…அதற்கான போராட்ட குணமும் இருக்கிறது.

இத்தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியையும் வென்று அவுஸ்திரேலிய அணியினருக்கு White Wash கொடுத்து இன்னுமொரு வரலாற்றைப் படைக்க எம் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

சிறப்பான ,கட்டுக்கோப்பான, ஒற்றுமையான இவ்வணி இன்னும் சாதிக்கும், வரலாறு படைக்கும்.
அவற்றைக் கண்டு மகிழ காத்திருப்போம்...


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ம.தி.சுதா சொன்னது…

நானும் பங்கு கொள்கிறேன்....

Ahamed Suhail சொன்னது…

Welcm dear