RSS

என் நண்பண்டா அப்பா ஓடிட்டாராம்.....

பொதுவா சில நண்பர்கள அவங்க நம்ம கூட பல நாள் பழகிருந்தாலும் அவங்க குடும்பம் சம்பந்தமா நமக்கு எதுவும் தெரியாம இருக்கும். அவங்க குடும்பத்துல எத்துன பேர்., அவங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க இது எல்லாம் தெரியாமலே பழகுவம். ஆனா சிலர்  இருக்காங்களே பழகின முதல் நாளே நம்மளப் பத்தின தகவலகளையெல்லாம் திரட்டி எடுத்துடுவாங்க,

அதுவும் அவங்க விசாரிக்கிற விதமே தனி. முதல்ல அப்பா அம்மால ஆரம்பிச்சுஅப்புறம் அக்கா தங்கச்சில போய் முடியும். அதுலையும் வீட்டுல தங்கச்சி யாரும் இருந்தா அத மட்டும் ரொம்ப டீப்பா விசாரிப்பாங்க….

நமக்கு மட்டும் அழகான தங்கச்சிமார் இருந்துட்டா போதுமே அப்புறம் நாம ஹீரோதான். நண்பர்கள்ட இது மாதிரியான விசாரிப்புகளின் போது நடக்கும், நடந்த சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கு.அதையெல்லாம் அப்புறம்  சொல்றன்,

இப்போ என்  நண்பன் ஒருத்தன் கூட நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்த பகிர்ந்துகொள்கிறேன். உண்மையாவே நடந்த சம்பவம் இது.

ஒருநாள் நான் பாடசாலை மைதானத்துல விளையாடி முடிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கும் போது என் நண்பன் ஒருத்தன் என்கிட்ட  வந்து பேசிட்டிருந்தான். அவன் ரொம்ப குறும்பா நக்கலா பேசக்கூடியவன். அவன்கூட பேசிட்டே இருக்கும் போது அவன் என் குடும்பத்தினரபத்தி  விசாரிச்சான் நானும் சொன்னன்.
அப்புறம் நான் விசாரிச்சன்….  முதல்ல அப்பா அம்மாவுல இருந்து ஆரம்பிப்பமே எண்டு நினைச்சு ஆரம்பிச்சன்..

நான்: சரி உங்க வாப்பா(அப்பா) என்ன பண்றார்…?

நண்பன் : அவரா அவரு ஓடிட்டார்டா….

நான் : என்னது…?

நண்பன் : ஆமாடா ஓடிட்டார்டா.

நான் : டேய் சொல்லுடா என்னடா பண்றார்…?

நண்பன் : உண்மையாத்தாண்டா ஓடிட்டார்.

நான் : மச்சான் விழையாடாம சொல்லன் என்ன செய்றார்.

நண்பன் : சத்தியமா ஓடிட்டார்டா..

நான் : அடப்பாவி….. யார்கூடடா ஓடிட்டார்…? எப்ப ஓடினார்..? இந்த வயசுல ஏண்டா ஓடினார்??

நண்பன் : டேய் டேய்.. இருடா…. ஓடிட்டார்னு சொன்னத்துக்கு இவளவு கேள்வி கேட்டு எங்க வாப்பாவ அவமானப்படுத்தாதடா...

நான் : இல்ல மச்சான் ஓடினா அப்புறம் என்ன மரியாத வேண்டிக் கிடக்கு..
              நீ ஒன்னும் கவலப்படாதடா மச்சான் அந்தாள் ஓடினா என்ன இனி                             அந்தாள மறந்துடுடா.. அந்தாள்கூட பேசாதடா......

நண்பன் : டேய் அவரு ஓடிட்டார்னா அது இல்லடா அவர்ட தொழில் ஒடிட்டர்    Auditorஅவர்ட தொழில கொஞ்சம் மாத்தி சொன்னதுக்கு….இப்படியாடா….? மன்னிச்சு விட்டுடுடா...

பயபுள்ள காமெடிக்கு ஒரு எழுத்த மாத்தி அவங்க அப்பாட பெயரையே டெமேஜ் பண்ணிட்டான்….

அதுக்கபுறம் நான் மிச்ச விசயங்கள விசாரிக்கவே இல்ல... அப்பாவையே ஓடிட்டார் எண்டவன் மத்தவங்களப் பத்தி என்னத்த சொல்லப்போறானோ... எண்டு நினச்சிட்டு விட்டுட்டன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Mohamed Faaique சொன்னது…

nallayirukku.....

அஹமட் சுஹைல் சொன்னது…

நன்றி சகோதரா...

நீண்ட நாட்களின் பின்னர்.. வந்திருக்கீங்க... எங்க போனீங்க..?