2011 உலகக்கிண்ணத்துக்கான 15வர் கொண்ட இறுதி இலங்கை கிரிக்கட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அணியை அறிவிப்பதற்கான ICC இன் காலக் கெடு இம்மாதம் 19ம் திகதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னதாகவே இலங்கை இறுதி அணி அறிவிக்கப்பட்டிருகின்றது. இதன்படி இதுவரையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளே தமது இறுதி அணியை அறிவித்துள்ளன.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அனுபவம் + இளமை கலந்த அணியே தெரிவு செய்யப்பட்டிருந்தாலும். சில தெரிவுகள் எனக்கு ஏமாற்றமளிக்கின்றன.
நான் எதிர்பார்த்த 15வர் கொண்ட அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது தவிர நான் எதிர்பார்த்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளமை திருப்தியே.
நான் எதிர்பார்த்தவர்களில்
தினேஸ் சந்திமாலுக்குப் பதிலாக திலான் சமரவீர
சுராஜ் ரண்டீவிற்குப் பதிலாக ரங்கன ஹெரத்.
1.குமார் சங்ககார(தலைவர்) 2.திலகரத்ன டில்சான் 3.உபுல் தரங்க 4.திலான் சமரவீர 5.மஹெல ஜயவர்தன (உப தலைவர்)6.டில்ஹார ஃபெர்னாண்டோ 7.சாமர சில்வா 8.சாமர கபுகெதர 9.ஏஞ்சலோ மெத்யூஸ்
10.திசர பெரேரா 11.முத்தைய்யா முரளீதரன் 12.ரங்கன ஹெரத்
13.லசித் மலிங்க 14.அஜந்த மெண்டிஸ் 15.நுவன் குலசேகர
துடுப்பாட்ட வீரர்களாக.
குமார் சங்ககார,திலகரத்ன டில்சான்,உபுல் தரங்க,திலான் சமரவீர மஹெல ஜயவர்தன (உப தலைவர்),சாமர சில்வா ,சாமர கபுகெதர ,
சகலதுறை வீரர்கள்:
ஏஞ்சலோ மெத்யூஸ்,திசர பெரேரா
வேகப்பந்துவீச்சாளர்கள்:
நுவன் குலசேகர,டில்ஹார ஃபெர்னாண்டோ,லசித் மலிங்க
சுழல் பந்துவீச்சாளர்கள்:
அஜந்த மெண்டிஸ்,ரங்கன ஹெரத், முத்தைய்யா முரளீதரன்
இதன்படி அண்மைக்காலமாக அணி தொடர்பாக நிலவி வந்த குழப்பங்கள், கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.
சனத் ஜயசூரிய,சமிந்தா வாஸ் ஆகிய மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா…? சனத் தனது செல்வாக்கு ,அரசியலைப் பயன்படுத்தி அணிக்குள் வருவாரா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டன.
இதன் மூலம் இறுதிப் 15வர் தேர்வில் அரசியல்தலையீடோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ இடம்பெறவில்லை என நம்பலாம்.
ஆனாலும் சுராஜ் ரண்டீவிற்கு இடம் கிடைக்காமை எனக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது. அதற்காக தெரிவுக் குழு தலைவர் அரவிந்த டீ சில்வா சொல்லும் காரணம் ஏற்புடையது என்றாலும் மெண்டிசை விட ரண்டிவை தெரிவு செய்திருக்கலாம் என்பது எனது வாதம்.
டினேஸ் சந்திமாலின் வெளியேற்றமும் கவலை அளிக்கிறது என்றாலும் நான் எதிர்பார்த்ததே… கடந்த காலங்களில் உலகக்கிண்ண இறுதி அணிக்கு வருவார்கள் என்ற சங்கக்கார உட்பட பலர் நம்பிக்கையுடன் கூறிவந்த இருவர் டினேஸ் சந்திமால், ஜீவன் மெண்டிஸ் இவ்விருவரும் அணியில் இல்லாதது கவலையே.
அணித் தெரிவு தொடர்பில் தெரிவுக் குழு தலைவர் அரவிந்த டீ சில்வாவின் கருத்தின் சுருக்கம்.
சனத் மற்றும் வாஸ் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் தொடர்பில்:
புதிய அணியை தெரிவு செய்யும் போது எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது நாட்டின் 20 மில்லியன் மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்வு செய்வதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே சனத் மற்றும் வாசை தேர்வு செய்யாமல் விட்டோம்.
உலகக்கிண்ணத்தின் பின் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறக் காத்திருக்கும் இந்த சிரேஸ்ட்ட வீரர்களை அணிக்கு தேர்வு செய்யமுடியாமல் போனது எங்கள் தெரிவுக் குழுவுக்கும் மிகுந்த கவலையும் வேதனையுமே…
இந்த மூத்த வீரர்களின் சேவை கடந்த காலங்களில் அளப்பரியது. அவர்களி அனுபவம் மற்றும் சேவையை எதிர்காலத்திலும் சிறிலங்கா கிரிக்கட் வேண்டி நிற்கிறது.
அவர்கள் தொடர்ந்தும் விழையாட விரும்பினால் அதையும் நாங்கள் வரவேற்கிறோம்.
சனத், வாஸ், சுராஜ் ரண்டிவ் இம்மூவரையும் பற்றிதான் நான் இப்போது கவலைப்படுகிறேன்.
சுராஜ் ரண்டிவின் நீக்கம் தொடர்பில்:
சுராஜ் ரண்டீவில் எந்தப் பிரச்சினையுமில்லை ஆனால், அவரை அணியில் இணைத்துக் கொள்ள முடியாத நிலை. காரணம் ஏற்கனவே அணியில் முரளி மற்றும் மெண்டிஸ் ஆகியோர் ஓஃப் ஸ்பின் வீசுபவர்களாக இருப்பதால் லெக் ஸ்பின் மற்றும் வித்தியாசமான மாற்றங்களோடு பந்துவீசும் வீரர் தேவைப்பட்டார், அந்த வகையில் எமக்குள்ள சிறந்த வீரர் ரங்கன ஹெரத்தான் எனவே அவரை தேர்வு செய்தோம்.
டில்ஹார ஃபெர்னாண்டோ லசித் மலிங்கவிற்கு பின்புலமாக பக்க பலமாக பந்துவீசக்கூடிய வீரர் எனவே அவரைத் தேர்வு செய்தோம்.
சமிந்தவாசுக்குப் போட்டியாக இருப்பவர் நுவன் குலசேகர.
வாஸ் புதிய பந்தினை லாவகமாகக் கையாளக்கூடியவர். குலசேகரவும் புதிய பந்தினை சிறப்பாக கையாள்வார்.
ஆனால் நுவன் குலசேகரவின் கடந்த ஒன்றரை வருடப் பெறுபேறுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் குலசேகரவிற்கு முன்னுரிமை அளித்தோம். ஒரு வேளை குலசேகர காயத்திற்குள்ளானால் அந்த இடத்தினை வாசினைக் கொண்டு நிரப்புவோம்.
மஹெல ஜயவர்தனவை 3வது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பயன்படுத்த எண்ணியுள்ளோம். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தரங்க மற்றும் டில்சான் இருவரில் யாராவது ஒருவர் சிறப்பாக செயற்படாதவிடத்து அந்த இடத்தை மஹெலவைக் கொண்டு நிரப்புவோம்.
ICC காலக்கெடு இம்மாதம் 19ம் திகதிவரை இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே அணியினை அறிவிக்கக் காரணம்.. இறுதி 15வரைத் தேர்வு செய்து நாளை ஆரம்பமாகும் மாகாணங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே.
ஒப்பீட்டளவில் சிறந்த அணி. சில ஏமாற்றங்களைத் தவிர்த்து அணி திருப்தி அளிக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் உட்சபட்ச திறமைகளை வெளிப்படுத்தி எம் நாட்டுக்கு மீண்டும் ஒரு உலகக்கிண்ணத்தை கொண்டுவர வேண்டும் என்று வாழ்துகிறேன்.
எமது அணியினைப் பலப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை எமது நாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
** இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை போட்டிகளைப் பாதிக்கலாம் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகின்றது.
நம்பிக்கையோடு காத்திருப்போம். இலங்கை அணியின் வெற்றிக்காய் பிரார்த்திப்போம்.
23 comments:
சந்திமால் - சமரவீர தொடர்பில் எனக்குப் பிரச்சினையில்லை.
சந்திமாலோடு ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் சமரவீர மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்.
மென்டிஸ் உள்ளூர் மட்டப் போட்டிகளில் கலக்கிவருகிறார், அவரையும் தவிர்க்க முடியாதே?
2011 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி கிரிக்கட் பற்றிய அற்புதமான ஆய்வு, நன்றி சிறந்த ஆக்கத்துக்கு... மேலும் நீங்கள் இலங்கை வானொலியில் கிரிகட் பற்றிய நிகழ்சிகள் ஏதும் தொகுத்து வழங்கினால் அது நேயர்களுக்கு சிறந்த ஒரு விருந்தாக அமையும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்
@கன்கொன் || Kangon
சமரவீர நின்று நிலைத்தாடக்கூடியவர்தான்.
அவரின் அனுபவம் பொறுமையும் அணிக்கு கை கொடுக்கலாம்,
மென்டிஸின் வந்த வேகத்திலேயே விழுந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
அவரின் பாச்சாக்கள் இப்போது பெரிதாக பலிக்கவில்லையே.. சகோதரா...
@Mohamed Rizad M.B.
நன்றி ரிசார்ட் நானா..
எனக்கும் ஆசைதான்... அந்த நேரத்தில் வேறு நிகழ்சிகள் ஒலிப்பதால் இதற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.
அனுசரை கிடைத்தால் வாய்ப்பு வழங்குவார்கள்.. ம்ம் பார்க்கலாம்
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
உலகக் கிண்ணப் போட்டிக்கான இலங்கை மட்டைப்
பந்து வீச்சாளர் தேர்வு பற்றிய முழுமையான
தொகுப்பு. அருமை.
இலங்கை வானொலி அறிவிப்பாளராய்
உலகப் புகழ் அடைந்துவிட்டீர்களே,
உங்கள் முழு தெளிவான புகைப்பத்தை
இணைக்கலாமே, உங்கள் வலைப்பூவில்?
@NIZAMUDEEN
நன்றி சகோதரரே..
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இலங்கை வானொலி அறிவிப்பாளராய்
உலகப் புகழ் அடைந்துவிட்டீர்களே,
உங்கள் முழு தெளிவான
புகைப்ப-ட-த்தை இணைக்கலாமே, உங்கள் வலைப்பூவில்?
@NIZAMUDEEN
//இலங்கை வானொலி அறிவிப்பாளராய்
உலகப் புகழ் அடைந்துவிட்டீர்களே,//
ஹா ஹா இலங்கை வானொலி உலகப் பிரபலம் என்பது உண்மை. ஆனால் அதில் நான் இருப்பதால் ஓரளவு பிரபலம் கிடைத்திருக்கலா,. சொல்லிக் கொள்ளும்படி இன்னும் பிரபலமாகவில்லை என்றே நினைக்கிறேன்.
//உங்கள் முழு தெளிவான
புகைப்ப-ட-த்தை இணைக்கலாமே, உங்கள் வலைப்பூவில்?//
எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. என் புகைப்படம் Profile Picture ஆக இருக்கிறதே..
உங்கள் வருகைக்கும், அன்பு கலந்த கருத்திற்கும் நன்றி.
மீண்டும் வருக
ரண்டீவ் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன் சந்டிமாளோடு ஒப்பிடுகையில் அனுபவம் மிகுந்த சமரவீர அணிக்கு அவசியமே
சிறந்த ஒரு படைப்பு
@தர்ஷன்
நிச்சயமாக தர்சன் அண்ணா.. ஆரம்பத்தில் சமரவீரவை விடசந்திமாலை விரும்பினான். ஆனால் இப்போது சமரவீரவை ஆதரிக்கிறேன்.
அவரின் பொறுமையான ஆட்டம், நிலைத்து நிற்றல்,அனுபவம் என்பன அணிக்கு பெரிதும் உதவும்
மெண்டிசைவிட ரன்டீவ் சிறப்பான தெரிவு,
ரன்டீவின் துடுப்பாட்டம், களந்தடுப்பு மிகவும் பயன்படும்.
ம்ம் பார்க்கலாம்,
நன்றி வருகைக்கும், கருத்துக்கும்
மீண்டும் வருக
@யாதவன்
நன்றி சகோதரா...
கருத்திக்கும், வருகைக்கும்.
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்
@தமிழ் உலகம்
இதோ இணைத்துவிடுகிறேன்.
நன்றி உங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும்
பகிர்வுக்கு நன்றி
நல்ல அலசல்
வாஸ் அணியில் இல்லாதது மிக கவலை அழைகிறது !!!!
சாமர சில்வா இன் தேர்வு எனக்கு உடன்பாடு இல்லை ....
பார்ப்போம் அணித் தெரிவை விட தலைமையின் முடிவுகளை...
பதிவுக்கு நன்றிகள்...
@விக்கி உலகம்
நன்றி உங்கள் ஆதரவு தொடரட்டும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@Jhona
ம்ம் வாசைப் பயன்படுத்தி இருக்கலாம். வாசிடம் வேகம் இல்லை என்பதைத் தவிர வேரெந்தக் குறையுமில்லை.
விக்கட்டுளை வீழ்த்தும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இன்னும் வாசிற்குக் குறையவில்லை.
சாமர சில்வாவை விட சாமர கபுகெதரவை வெளியேற்றியிருக்கலாம்.
நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்
@ம.தி.சுதா
எனக்கு தலைவராக சங்கக்காரவை விட மஹெலவை ரொம்பப் பிடிக்கும். வீரர்களை அன்பால் கட்டுப்படுத்தும் ஆற்றல் சங்கக்காரவிற்கு குறைவு.
பார்க்கலாம்...
நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும்
நான் எதிர்பார்த்ததில் மென்டிஸ்க்கு பதில் ரன்திவ் மட்டும் பிழைத்துப்போனது.
பார்க்கலாம் மென்டிஸ் என்னதான் செய்கிறார் என்று..;)
சனத்-வாஸ் : என்னைப் பொறுத்தவரை வாசுக்கு இடமளித்திருக்கலாம், அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூவருமே வலதுதுகைப் பந்துவீச்சாளர்கள் ஒரு இடதுகை பந்துவீச்சாளருக்கு வாய்ப்பளித்திருக்கலாம் தவிர சமிந்தவாஸ் அண்மைக்காலமாக பந்துவீச்சு மட்டுமன்றி, துடுப்பாட்டத்திலும் கலக்கியிருக்கிறார்..:)
பார்க்கலாம்..:)
@Bavan
மெண்டிஸ்-சுராஜ் விடையத்தில் எனக்கும் ஏமாற்ற்மே..
உண்மையில் வாசுக்கு கட்டாயம் வாய்ப்பளித்திருக்கலாம்.
சிறந்த ஃபோர்மிலும் இருக்கிறார், இலங்கை கிரிக்கட் கட்டாயம் வாஸை மிஸ் பண்ணும்.
பார்க்கலாம்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கருத்துரையிடுக