உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 21 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் உலகெங்கும் அதற்கான பரபரப்புகள் அதிகரித்துவருகின்றன.
கிரிக்கட்டின் திருவிழாவான உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளை கண்டுகளிக்க உலகெங்குமுள்ள பலகோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அனைத்து அணிகளும் தங்களைத் தயார்படுத்தலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் ரசிகர்களும் தத்தமது அணியினரை உற்சாகப்படுத்த பல்வேறு வித்தியாசமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இலங்கையிலும் பல்வேறு தரப்பினரும் எமது இலங்கை அணியினரை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
உலகக் கிண்ணத்தின் பிரமாண்ட மாதிரியை உருவாக்கி அதில் நாடு பூராகவும் உள்ள ரசிகர்களின் கைகளைப் பதித்து வரும் நடவடிக்கை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கின்றது.
மறுபுறம் நூலினால் மிகப்பிரமாண்ட தோல்பந்தை உருவாக்கும் முயற்சியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவை இப்படி இருக்க இலங்கை அணியினரை ஊக்கப்படுத்தும் முகமாக 2011 உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே இது வெளியிடப்பட்டிருந்தாலும் எனக்கு இப்போதுதான் துல்லியமான முழுப்பாடலையும் பெற முடிந்தது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
பாடல் ,காட்சி அமைப்பு, நடனம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் ஒரே ஒரு குறை, கிரிக்கட் காட்சிகளாக டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட காட்சிகளை மட்டுமே இணைத்துள்ளனர். அதுதான் குறை அதைவிடுத்து பாடல் சூப்பர்
என்ன தினவன்ன- வாங்க மச்சான் கரகோசம் செய்து வாங்க

வாங்க... வாங்க வாங்க வாங்க மச்சான் வாங்க
கரகோசம் செய்து செய்து வாங்க
வாங்க வாங்க வாங்க மச்சான் வாங்க
ஜயகோசம் செய்து செய்து வாங்க.
2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் இலங்கை அணிக்கான பாடல்
1996ம் ஆண்டு உலகக்கிணத்தைப் பெற்ற பின்னரான பாடல்
இந்தவேளையில் ஐ.சி.சியின் மைதான பரிசோதகர்கள் அண்மையில் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் நடைபெறவுள்ள அனைத்து மைதானங்களுக்குமான தமது விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இதில் இலங்கையின் உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட 3 மைதானங்களினதும் ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக கூறியதோடு மேலதிக வேலைகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் இந்திய மைதானங்களில் கொல்கத்தா ஈடுன் காடுன் மைதானம் மட்டும் உரிய நேரத்திற்குள் முக்கிய வேலைகளை முடிக்கத்தவறியதாகக் கூறி ஐ.சி.சியானது ஈடுன் காடுன் மைதானத்தை உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் மைதானப் பட்டியலில் இருந்து அகற்றிவிட்டது.
இதற்குப் பகரமாக மாற்று மைதானம் குறித்த ஆலோசனை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும் இலங்கை -இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியொன்றில் ராஜ்கோர்ட் கிரிக்கற் மைதானம் ஆடுகளத்தின் மோசமான நிலமை காரணமாக சில ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த மைதானத்திற்கும் ஐ.சி.சியானது ஒருவருடத் தடை மற்றும் அபராதம் விதித்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
உலகின் மிகச் செல்வந்த கிரிக்கற் சபையான இந்திய கிரிக்கற் சபையின் கண்காணிப்பு, மற்றும் நிருவாகத்தின் கீழ் இருக்கும் இம்மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலமை மிகவும் கவலையானதும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பாரிய அவமானமுமாகும்
2 comments:
அருமையான தொகுப்பு,,,, வாழ்த்துக்கள்,..... பாடலில் லேட்டஸ்ட் கிளிப்ஸ் ஏதும் இணைத்து இருந்த இன்னும் சூப்பரா இருந்திருக்கும், still we miss our Jayasurya,,,,
@Mohamed Rizad M.B.
இது பாடலின் ஒரிஜினல் வடிவம் அதனால் நான் எதுவும் எடிட் பண்ணல.
நானும் சமிந்தவாஸ், ஜயசூர்ய இருவரையும் ரொம்ப மிஸ் பண்ணுறன்.
இரு பெரும் தூண்கள் இல்லாத இலங்கை அணி என்ன செய்யப் போகுதோ..?
பார்ர்க்கலாம்
நன்றி வருகைக்கும் கருத்திற்கும்
கருத்துரையிடுக