RSS

அப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்


அப்புக் குட்டியும் தபால் திணைக்களமும்


நம்ம அப்புக் குட்டி ஒரு பிரபலமான அரசியல்வாதி என்பது நம்ம எல்லாருக்குமே தெரியும்.
ஒரு நாள் அப்புக்குட்டிட கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம் இது.

அன்னைக்கு அப்புக்குட்டி அலுவலகத்துல ரொம்ப பிசி.

திடீர்னு அப்புக்குட்டிட அறைக்குள்ள இருந்து சத்தம். உடனே அவரின் செயலாளர் ஓடிவந்து என்னாச்சுன்னு பார்த்தா மேசையில இருந்த ஃபைல் எல்லாம் கீழ சிதறிக் கிடக்கு,

அப்புக்குட்டி கோபத்தின் உச்சத்துல இருந்தாரு.செயலாளருக்கு ஒன்னுமே புரியல

செயலாளர் : என்னாச்சு சார்..?

அப்புக்குட்டி தன் கைல இருந்த கடிதத்த செயலாளர்கிட்ட நீட்டினார். கடித உறைல முகவரி எழுதும் இடத்தில் முகவரி எதுவுமில்லாமல்
இலங்கையில் உள்ள மிகப் பெரிய அயோக்கியனுக்கு
என்று மட்டும் எழுதி இருந்தது.


செயலாளர் : விடுங்க சார் யாரேனும் ஒரு விசமி எழுதி இருப்பான். இதுக்கெல்லாம் நீங்கள் ஏன் சார் நீங்க ஆத்திரப்படணும்?

அப்புக்குட்டி : இதை எழுதினவனைப் பற்றி நான் கோபப்படவில்லை. ஆனால் இது எனக்குரியது என்று நினைத்து எனக்கே அனுப்பி வைத்திருக்கிறானுகளே.. இந்த தபால் திணைக்களத்தில் உள்ளவனுகள். அவனுகளை நினைத்தால்தான் எனக்கு ரத்தம் கொதிக்கிறது…..


ஹி ஹி ஹி எப்புடித்தான் கண்டு பிடிக்குறாய்ங்களோ


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

roshaniee சொன்னது…

இறுதி வரிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது .சூப்பர்
அரசியல் வாதிக்கு பொருத்தமான முகவரி

aiasuhail.blogspot.com சொன்னது…

@roshaniee

ஹா ஹா செம காண்டுல இருக்கீங்க போல..?


நன்றி
வருகைக்கு

ம.தி.சுதா சொன்னது…

சுவாரசியத்துடன் நகர்த்தியுள்ளீர்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

aiasuhail.blogspot.com சொன்னது…

@ம.தி.சுதா

நன்றி சகோதரா...

நீண்ட நாட்களுக்குப் பிறகு... உங்கள் வருகை.

நன்றி.