** எந்த போஸ்ட் போட்டார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
எண்ட சொந்த போஸ்ட்டை coppy பண்ணியவர்க்கு.
- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -
**நாங்கெல்லாம் நடுக் கடலிலையே ஹாயா நடந்து திரீரவிங்க..
எங்ககிட்ட போய் கடலுக்கு போறதுக்கு கப்பல் வேணுமா? தோணி வேணுமான்னு? கேட்டு அவமனாப்படுத்தப்புடாது...
போங்க தம்பி போங்க.. போய் பிடிச்ச மீன விக்கிற வழியப்பாருங்க..
(நல்லாக் கேக்குறாய்ங்கைய்யா டீட்டியலு)
**திருமணமான பெண்களைக் குறிக்கும் Mrs என்பதை தமிழ் படுத்தும் போது சிலர் “திருமதி” என்றும் சிலர் “திருவாட்டி” என்றும் பயன்படுத்துகிறார்களே..அது ஏன்?
திரு என்றால் கணவன் என்றும் பொருள்படும்.
“கணவனை மதிப்பவர்களை திருமதி” என்றும்
“கணவனை ஆட்டிப்படைப்பவர்களை திருவாட்டி”
என்றும் சொல்கிறார்கள்.
(எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ..?)
**தனி ஒரு மனிதனுக்கு Facebook Account இல்லை எனில்
ஜெகத்தினை எரித்திடுவோம்....
- புரட்சிக் கவிஞர் அஹமட் சுஹைல் -
**எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா
ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?
ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
**வருக்கன் பலாப்பழத்தை தண்ட
மடியில் வளத்தாட்டி
சுள களத்தித் தின்னவந்தார் மச்சான்
வாய்க்கவில்லை போறாருகா!
(அவனுக்கு தனது மச்சி மீது ஓர் ஆசை. ஆசையை நிறைவேற்ற எண்ணி மச்சியின் வீட்டிற்கு செல்கிறான் அவன்.
அதற்கு இடம் கொடுக்கவில்லை அவள். பாவம் அவன் ஏமாந்து திரும்பிச் செல்வதைப் பார்த்து அவள் நையாண்டி செய்வதே இப்பாடல்.
இதில் ”வருக்கன் பலாப்பழமாக” அவள் உருவகிக்கப்படுகின்றாள். ”சுளை” என்பது கற்பு.) >எங்கள் பிரதேச நாட்டார் பாடல்களில் ஒன்று<
**கண்டியிலே ஒரு பொண்டாட்டி அந்தக்
கரவாகுல ஒரு வைப்பாட்டி
நானும் ஒரு பொண்டாட்டி இந்த
நாசமத்துப் போவானுக்கு!
(இன்னுமொரு நாட்டார் பாடல்)
**ஈ மெயில் அனுப்புற காலமிது நீங்க புறாவுக்கு ஓலை கட்டி அனுப்ப சொல்றீங்க..
டிஜிட்டல் இசை கேற்கும் எங்கள நீங்க க்ராமஃபோன் இசைத்தட்டு கேக்க சொல்றீங்க..
டீ.ஜேஸ் கலக்குற காலத்துல நீங்க பாகவதர் கச்சேரி பண்ண சொல்றீங்க..
இது ஜெனரேசன் கேப்.. அது புரியாத ரேப்..
சரி கம தேவையில்ல வெஸ்டேர்ன் தேவையில்ல கர்நாட்டிக் தேவையில்ல...
இருக்கவே இருக்கு ”ரெப்பூ” மாப்பு போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு நீதாண்டா டாப்பூ
(பிடித்த உள்ளூர் பாடலொன்றின் வரிகள்)
11 comments:
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
@thalir
நன்றி ஐயா
நன்றி உங்கள் வாழ்த்துக்கு.
“கணவனை மதிப்பவர்களை திருமதி” என்றும்
“கணவனை ஆட்டிப்படைப்பவர்களை திருவாட்டி”
இது நல்ல இருக்கே
@ராக்கெட் ராஜா
நன்றி சகோ...
இது ஒரு அறிஞர் ஒருவரிடம் கேக்கப்பட்டபோது அவர் சொன்னதாக ஒரு சஞ்சிகையில் படித்தது.
அவரது பெயரை மறந்துவிட்டேன்
கலக்கல்யா மாப்ள!
@விக்கியுலகம்
நன்றி மாம்ஸ்...
ஹா ஹா
நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும்
:-)
ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் வாழ்க ..வாழ்க ..
//
**தனி ஒரு மனிதனுக்கு Facebook Account இல்லை எனில்
ஜெகத்தினை எரித்திடுவோம்....///
super
@மருதமூரான்.
நன்றி நன்றி
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி சகோ...
உங்கள் வாழ்த்து + வருகை + கருத்திற்கு.
நன்றி நன்றி நன்றி
கருத்துரையிடுக