இன்று இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறப்போகும் கிரிக்கட் போட்டி பல வழிகளில் முக்கியமான போட்டி
1.இலங்கை அணிக்கு என் அபிமான தலைவன் மஹெல மீண்டும் தலைமை தாங்கும் முதலாவது போட்டி
2.உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் பின்னர் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளும் முதலாவது போட்டி.
3. இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளருடன் களமிறங்கும் முதலாவது போட்டி
4.டில்சான் தலைமைத்துவ அழுத்தங்கள் அற்ற பழைய வீரராக களமிறங்கப் போகும் போட்டி
5.புதிய நிருவாகம் மற்றும் தேர்வாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கும் முதலாவது போட்டி
6.இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு ஆடுகளத்தில் நடைபெறும் போட்டி
இப்படி பல வழிகளில் நாழைய போட்டி முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் அர்ஜுனவுக்குப் பின்னர் எனக்கு ரொம்பவும் பிடித்த ஆளுமை மிக்க தலைவனான மஹெல மீண்டும் தலைமைத்துவப் பதவியை பொறுபேற்றிருப்பதும் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அணி விளையாடவிருப்பதுமே எனக்கு அதிக ஆவலையும் எதிர்பார்ப்பையும் முக்கியதுவத்தினையும் தருகிறது.
இலங்கை அணியின் இறுதிவரை போராடும் குணம் சங்கா டில்சான் காலத்தில் காணாமல் போயிருந்தது. ஆனால் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து இறுதிவரை போராடுவதே மஹெலவின் தனிச் சிறப்பு. மஹெலவின் வருகையோடு இலங்கை அணியின் போராட்ட குணமும் மீண்டும் வருமென உறுதியாக நம்புகிறேன்
இலங்கை அணிக்கும் (என் அபிமான தலைவன்) மஹெலவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதேவேளை இக்கட்டான ஒரு கால கட்டத்தில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கி தன்னாலான பங்களிப்பைச் செய்துவிட்டு ஓய்வு பெற்ற டில்சானிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
0 comments:
கருத்துரையிடுக