இந்த ஃபேஸ்புக் விசித்திரமான பல விசையங்களைக் கொண்டிருக்கிறது
புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது
ஆனால் இந்த ஃபேஸ்புக் ஒன்றும் ஆச்சரியமானதல்ல
பேஸ்புக் பாவிக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல
பேஸ்புக்கிலே சர்வ சாதாரணமாக வந்துபோகும் ஜீவன்களில் நானும் ஒருவன்..
பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோக்கு நக்கலடித்தேன்,
ஃபோட்டோக்களை எடிட் பண்ணினேன்
மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்,
ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம்
மறுக்கப் போகிறேன் என்று
இல்லை இலவே இல்லை
பேஸ்புக்கில் மற்றவர்கள் ஃபோட்டோவை நக்கலடித்தேன் ஏன் அவர்கள் ஃபோட்டோ கூடாதென்றா? இல்லை நக்கலடிக்கும் விதமாக அவர்கள் ஃபோட்டோ போட்டார்கள் என்பதற்காக
ஃபோட்டோக்களை எடிட் [பண்ணினேன் ஏன்
அவன் ஃபோட்டோக்களை சீரழிக்க வேண்டும் என்றா?
இல்லை என் ஃபோட்டோவை எடிட் பண்ணியதற்கு பழிவாங்குவதற்காக
மற்றவர்களைப் பயங்கரமாகக் கலாய்த்தேன் ஏன் அவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகவா?
இல்லை
சும்மா கிளு கிளுப்பு கல கலப்பிற்காக
உனக்கெதற்கு கிளு கிளுப்பு யாருக்குமே கிடைக்காத கிளு கிளுப்பு
என்று கேட்பீர்கள்.
ஆமாம் தேவைப்பட்டது என் தனிமையைப் போக்க எனக்குத் தேவைப்பட்டது. எனது சுய நலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது
தரப்படுத்தலில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக நலிந்து போன மேற்கிந்தியத் தீவுகள் அணியை தங்கள் நாட்டுக்கு கூப்பிட்டு அடிமேல் அடி அடித்தார்களே இந்திய கிரிக்கட் அணி அவர்களைப் போல…
என்னைத் தப்பு சொல்கிறீர்களே…. எனது பேஸ்புக் பிண்ணனியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்…நான் பார்த்து வந்த அவமானங்கள் எத்தனை, வில்லங்கம் பிடித்தவர்கள் எத்தனை, பொறாமை பிடித்தவர்கள் எத்தனை என்பதனைக் கணக்குப் பார்த்திட இயலும்
நான் Barn Buddy இல் விவசாயம் செய்ததில்லை ஆனால் பலருக்கு Barn Buddy இல் விவசாயம் செய்ய உதவியிருக்கிறேன்
நான் City Ville விளையாடியத்தில்லை ஆனால் பலர் City Ville யில் புள்ளிகள் பெற உதவியிருக்கிறேன்..
நான் சிரித்து மகிழ்ச்சியாக இருந்ததில்லை.. ஆனால் பலர் சிரித்து மகிழ காரணமாயிருந்திருக்கிறேன்
கேளுங்கள் என் கதையை என்னைத் தப்பாக நினைப்பதற்கு முன் கேளுங்கள்
இலங்கையிலே அழகிய சம்மாந்துறையிலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்..
இலங்கையின் தலையெழுத்திற்கு நானென்ன விதிவிலக்கா?
கொழும்பு என்னை அழைத்தது
உயர்ந்தவனாக்கியது தனிமையுமாக்கியது.
தனிமையில் தனியாக உழன்றேன்..
எங்கு செல்வது என்று தவித்தேன்..
நற்புகள் இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் அலைந்தேன்
இப்படி தனிமையில் அலைந்த நான் கடைசியில்
என் தனிமையைப் போக்க ஃபேஸ்புக் வந்தேன்
என் பெயரோ அஹமட் சுஹைல்.
எவ்வளவு அழகான பெயர்.
ஆனால் கையில்காசுமில்லை காதலிக்க ஆளுமில்லை
நான் மட்டும் நினைத்திருந்தால் ஃபேஸ் புக்கில் ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கி பலர் வாழ்க்கையைக் கெடுத்திருக்கலாம்
மாடர்ன் ஃபிகரை சட்டிங்கில் மடக்கி ப்ராக்கெட் போட்டிருக்கலாம்.
மற்றவர்களின் அக்கெளண்டை ஹெக் பண்ணீ ப்லாக் மெயில் பண்ணியிருக்கலாம்..
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த ஃபேஸ் புக் சமூகம்
ஸ்டேடஸ் போட்டால் கலாய்த்தார்கள் ஓடினேன்
ஃபோட்டோ போட்டால் எடிட் பண்ணீ அசிங்கப் படுத்தினார்கள் ஓடினேன்
வேண்டுமென்றே என் ஃபோஸ்ட்டுக்கு லைக் போடாமல் கொமெண்ட் போடாமல் தவிர்த்தார்கள் ஓடினேன்.
சற்றிங்கில் Hi சொன்னால் bye சொன்னார்கள் ஓடினேன்
ஃபேக் அக்கெளண்ட் வைத்து ஏமாற்றினார்கள் ஓடினேன்
குறூப்பாக சேர்ந்து காமெடி பண்ணினார்கள் ஓடினேன்
எனது சொந்த கற்பனையில் வந்த போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்றார்கள் ஓடினேன்.
பொய்யான வதந்திகளை என் மேல் கட்டிவிட்டார்கள் ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்….. ரொம்பத் தூரம் ஓடினேன்…
Laptop பை விட தூரம் ஓடியதால் Lap top எட்டவில்லை அதனால் திரும்பி Laptop அருகிலே வந்துவிட்டேன்
பாவம் என் வாழ்க்கை உசைன் போல்டை விடவும் வேகமாக ஓடவேண்டியதாக மாறிவிட்டது.
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்,வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க வேண்டும் இன்று என்னைக் குற்றம் சொல்வோர்..
செய்தார்களா..? சப்போர்ட் பண்ணினார்களா எனக்கு...?
போட்ட ஸ்டேடஸ்களையெல்லாம் கலாய்த்தது யார் குற்றம்?
கலாய்த்த அவர்கள் குற்றமா? இல்லை அவர்கள் கலாய்க்கும் வண்ணம் போஸ்ட் போட்ட என் குற்றமா…?
என் ஃபோட்டோக்களை எடிட் பண்ணியது யார் குற்றம்?
எடிட் பண்ண உதவிய ஃபோட்டொ சொப்பின் குற்றமா? இல்லை மற்றவர்கள் பொறாமைப் பட்டு எடிட் பண்ணி அசிங்கப் படுத்த தூண்டும் வண்ணம் ரொம்ப அழகாய்ப் பிறந்த என் குற்றமா?
ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியது யார் குற்றம்?
ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியவர்களின் குற்றமா…? இல்லை ஃபேக் அக்கெளண்ட் உருவாக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக்கின் குற்றமா?
ஃபேக் அக்கெளண்ட் உருவாக்கியவர்களின் குற்றமா…? இல்லை ஃபேக் அக்கெளண்ட் உருவாக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக்கின் குற்றமா?
என் போஸ்ட்களை கொப்பி பண்ணீ அவர்கள் போஸ்ட் என்று சொன்னது யார் குற்றம்?
கிட்னியை யூஸ் பண்ணீ யோசித்த என் குற்றமா? இல்லை அதை அப்பட்டமா கொப்பி அடித்த அவர்கள் குற்றமா?
கிட்னியை யூஸ் பண்ணீ யோசித்த என் குற்றமா? இல்லை அதை அப்பட்டமா கொப்பி அடித்த அவர்கள் குற்றமா?
இப்படியானவர்களைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து
சைலண்டாக இருந்த நான் வையலண்டாக மாறினேன்..
இப்படியானவர்கள் ஃபேஸ்புக்கிலிருந்து ஒதுங்கும் வரை என்னைப் போன்ற அமைதியான ”அஹமட் சுஹைல்” கள் ஆக்ரோசமான சுனாமிகளாகத்தான் மாறிக் கொண்டிருப்பார்கள்...
3 comments:
super....
@பெயரில்லா
thnk u vry much
”வேண்டுமென்றே என் ஃபோஸ்ட்டுக்கு லைக் போடாமல் கொமெண்ட் போடாமல் தவிர்த்தார்கள் ஓடினேன்....”என்னைப்பொறுத்தவரையில் இது சரியாக தோன்றுகிறது....
கருத்துரையிடுக