RSS

ஜெனெரேட்டர் பூட்டி என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்டாங்க.

நேத்து Lecture ல் இருந்து சீரியசா படிச்சிட்டிருந்தன். நான் சீரியசா படிச்சதால என்னவோ கரண்ட் அடிக்கடி கட் ஆகி கட் ஆகி வந்துது. எனக்கு பயங்கர கோவம்.பின்ன என்னங்க எவளவு சீரியசா படிச்சிட்டிருக்கும் போது இப்படி பண்ணினா நல்லா படிக்குற பிள்ள எனக்கு(??) எவளவு கோவம் வரும்.

அப்பதான் நம்ம Lecturer சொன்னார். கெம்பஸுக்கு  40 மில்லியன் செலவில் புதுசா ஒரு ஜெனெரேட்டர் வாங்கி வந்திருக்காங்களாம். அத போட்டு செக் பண்ணிட்டிருக்காங்களாமாம்.
 (ஆஹா……….. )  எனக்கு இன்னும் கோவம் கூடிட்டு..

ஏன் கோவம் எண்டுதானே கேக்குறீங்க. சொல்றன்..
நம்ம கெம்பஸ்ல கரண்ட் கட்டான Projector பாவிச்சு படிப்பிக்குற பாடங்கள்,  Computer Practical எல்லாம்  நடக்காது…. கரண்ட் கட்டான நமக்கு ஜாலிதான்..

சில நேரங்கள்ள போரடிக்குற பாடங்கள் நடந்திட்டிருக்கும்போது ஒரு மிஸ் கோல் குடுத்தா கரண்ட் கம்பத்துக்கு சைக்கிள் செயின் எறிஞ்சு கரண்ட கட் பன்றதுக்கெல்லாம் ஆள் வெச்சிருந்தன். சில நேரங்கள்ள நானே  Lectures  போகாம சைக்கிள் செயின் எறிஞ்சு Lecture நடக்காம ஆக்கியிருக்கன்.

இப்படியெல்லாம் பிளான் பண்ணி செய்திட்டிருக்கும் போது.. இப்படி ஜெனெரேட்டர் பூட்டி என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்டாங்க. இப்ப சொல்லுங்க என் கோவம் நியாயமானதுதானே….?

சரி ஜெனெரேட்டர் பொருத்துறத உடனே நிறுத்தியாகனும் எண்டு வேகமா அது பொருத்துர இடத்த தேடிப் போனன்.  படுபாவிங்க சரியா டீன் (பீடாதிபதி) அலுவலகத்துக்கும் செக்கியூரிட்டி போஸ்ட்டுக்கும் இடையில பொருத்திட்டு இருந்தாங்க.

உங்களுக்கு இத பொருத்துரத்துக்கு வேற இடமே இல்லையா எண்டு சாபமிட்டுகிட்டே.. ஜெனெரேட்டர் பொருத்திட்டு இருக்குற ஆள தேடினன். பயபுள்ள என்னாமா உடம்ப வளத்து வெச்சிருக்கான். அவன் உடம்ப பாத்த உடனே கோவமெல்லாம்……………??      
சமத்தா அவர் பக்கத்துல போய் தெரிஞ்ச அரைகுறை சிங்களத்துல பேச்சுக் குடுத்தன்.

நான்: என்ன அண்ண செய்திட்டிருக்கீங்க..?

அவர் : ஆ பாத்தா தெரியல….??

நான் : பாத்தா தெரியுது ஆனாலும் எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. அதான் நானும் அந்த ஸ்டைல்ல ஆரம்பிச்சன்.

அவர் : (புன் முறுவல்) ஜெனெரேட்டர் பொருத்திட்டு இருக்கன்.

நான் : ஓ இதான் ஜெனரேட்டரா..? இதப் பத்தி கொஞ்சம் சொல்றது…..

அவர் : இது …………நாட்டு தயாரிப்பு. ………………தொழில் நுட்பத்துலதான் இயங்குது. இதனால இந்த கெம்பஸ் முழுதும் எல்லா ரூமுக்கும் ஏசீ வசதி குடுத்து, கணனி வசதி குடுத்து எல்லாத்தையும் இயங்கவைத்தால் கூட 6 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கலாம். அப்ப கூட ஏராளமான அளவு மின்சாரம் மீதமாகும்….
(அப்படி சொல்லிட்டே போறாரு…...)

நான் : சரி அண்ண இத கட்டாயம் பொருத்தித்தான் ஆகனுமா? வேற எங்காவது மின்சாரம் இல்லாத கிராம மக்களுக்கு இதால மின்சாரம் குடுக்கலாம் தானே…. இங்க பொருத்துறது அனியாயம் தானே..? (அப்படி என்னுடைய சமூகப் பொறுப்ப வெளிக்காட்டினன்.)

அவர் : இல்ல தம்பி இது அவசரத் தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் பாவிக்க முடியாது ரொம்ப செலவாகும். 6 மணித்தியாலம் பாவிச்சா 36000/= செலவாகும்.
ஏன் கெம்பசுக்கும் கட்டாயம் தேவைதானேகரண்ட் இல்லாட்டி உங்களுக்கு பாடங்கள் நடத்த கஸ்டமாம், அன்றைய நாள் முழுவதும் பாடங்கள் எல்லாத்தையும் கேன்சல் செய்யவேண்டி வருது எண்டுதானே இத பொருத்துறாங்க…. ?

நான் : ஆமாண்ணே கரண்ட் கட்டானா பாடம் நடக்கக் கூடாது. நாங்க ஜாலியா இருக்கனும் எங்குறதுக்குதான்னே  சொல்றன்.

அப்படி சொன்னதும் அந்தாள் முகத்தப் பாக்கனுமேஐய்யோ என்னா ஒரு லுக்குஅடுத்தது அவர்ட கையில இருக்குற ஸ்கூட் ரைவர் நம்ம தலைக்குத்தான் வரும் என்டு புரிஞ்சு போச்சு….
ஆஹா எஸ்கேப்பாகனுமே..

வழமை மாதிரி ஃபோனத் தூக்கி காதுல வெச்சிகிட்டு ஆ சொல்லுடா மச்சான் லெக்சர் தொடங்கிட்டா இதோ வாரன்அண்ணா லெக்சர் தொடங்கிட்டாம் நான் போறன் அண்ணா  

ஹி ஹி நான் எஸ்கேப்..


இப்போ இந்த ஜெனெரேட்டர எப்படி வேல செய்யாம ஆக்குறது எண்டு ரொம்ப ஆளமா யோசிச்சிட்டிருக்கன். இப்போதைக்கு  ஒரு 40 அடி ஆளத்துக்கு போய்த்தான் யோசிச்சிருக்கன். இது போதாது இன்னும் ஆளமா போகனும்.

எவளவு ஆளத்துக்குப் போயென்டாலும் ஒரு முடிவெடுக்காம விடமாட்டன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

samira சொன்னது…

ippadi paditthaal uruppatta mathiri thaan.........

aiasuhail.blogspot.com சொன்னது…

என்னமா பன்றது... நம்மளால முடிஞ்சது அவளவுதான்.

உங்கள் கொமென்ஸுக்கும் வருகைக்கும் நன்றி.

தொடர்ந்தும் இணைந்திருங்கள்