RSS

கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும், புகழும் நிச்சயம் வாழும்.

1992 முதல் 2010 வரையிலான 19 வருட டெஸ்ட் வரலாற்றில் முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகள். ஒரு போட்டிக்கு சாராசரியாக 6 விக்கட்டுகள். இனி யாரால் முடியும்?

சாதனைச் சக்கரவர்த்தி சுழல் பந்து மாயாவி.. முத்தையா முரளீதரன் டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்துவிட்டார். ஒரு நாள் + T20 போட்டிகளில் முரளியின் பயணம் தொடர்கிறது.கண்ணீரோடு வழியனுப்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களோடு நானும் இணைந்துகொள்கின்றேன்.

800 விக்கட்டுகள் என்ற மைல் கல்லை அடைய இறுதிப் போட்டியில் 8 விக்கட்டுகள் தேவை. 800 விக்கட்டுகள் எடுத்தே ஆகுவேன் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கினார் முரளி.  எப்படித்தான் அவளவு உறுதியாக நம்பினாரோ...? அந்த நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் என் உளம் கனிந்த பாராட்டுக்கள். களமிறங்கினார்.. சாதித்தும் காட்டினார்.

இன்றைய நாள் முரளி மைதானம் நுழையும் போது செங்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.... எப்படி கெளரவம் என் ஹீரோவுக்கு...?

இன்று காலை 10.45 முதல் முரளியின் 800வது விக்கட் என்ற அந்த வரலாற்று நிமிடத்தினைக் பார்த்து மகிழ பல்கலைக் கழக உணவு விடுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் நான் காத்துக் கிடந்தேன். என்னுடன் பல நண்பர்களும் இணைந்திருந்தார்கள். 800வது விக்கட்டின்னை இலகுவாக, விரைவாகப் பெற்றுவிடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தேன்ம்ஹும்அந்த ஒரு விக்கட்டுக்காக பல மணி நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.

லக்ஸ்மன் + இசாந் சர்மா ஜோடி என்னை மட்டுமல்ல முரளி ரசிகர்கள் அனைவரையும் கடுப்பேத்திக் கொண்டே இருந்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நம்ம நண்பர்கள் திட்டிய  திட்டுக்களும், பேசிய பேச்சுக்களும் ஐய்யைய்யோ சிங்களத்தில் இவளவு கெட்ட வார்த்தைகள் இருக்கா…?(இன்னைக்குத்தானே தெரியும்...) இத மட்டும் இசாந் சர்மா லக்ஸ்மன் கேட்டிருந்தா சூசைட் பண்ணிருயிருப்பாங்க..

பொறுமை இழந்த நண்பர்கள் சென்றுவிட்ட போதும் நான் தொடர்ந்தும் பொறுமையுடன்(??) காத்திருந்தேன்.. (உனக்கு வேற வேலை இல்லையா எண்டு கேக்குறீங்களா..? அப்படி இல்ல உண்மையில நிறைய வேலை இருந்ததுஆனாலும்..)என் வாழ்நாள் ஹீரோக்களில் ஒருவரான முரளியின் ஓய்வுக்கு முன்னரான ஒவ்வொரு கனங்களையும் அனுபவிக்க காத்திருந்தேன். உணர்ச்சி பூர்வமான அந்த கனங்களை மைதானத்தில் நேரடியாக காண முடியாவிட்டாலும் அதே உணர்வோடு பார்க்க ஆசைப்பட்டேன்.

பிரார்த்தனைகளோடு அந்த தருணத்திற்காகக் காத்திருந்தேன்மறுபுறத்தில் மலிங்க விக்கட்டுகளைச் சரித்துக் கொண்டிருக்கின்றார்ரன்-அவுட் வாய்ய்ப்புகள் என்னாகுமோ? முரளிக்கு 800வது விக்கட் கிடைக்குமா..? மலிங்க ஓவர் பண்ணவே கூடாதுரன் - அவுட் வரவே கூடாது….. பிரார்த்தனை தொடர்ந்தது

இடையில் டில்சானின் பந்துவீச்சில் இசாந் சர்மா ஸ்டம் செய்யப் படுகிறார் ஆட்டமிழந்தாரா..? 3ம் நடுவரிடம் கோரப்படுகிறதுஅது ஆட்டமிழப்பாக இருக்கவே கூடாது இதுதான் நான் உற்பட அனைத்து இலங்கை + முரளீ ரசிகர்களின் பிரார்த்தனையாகவிருக்கின்றது. நடுவரின் தீர்ப்பு சர்மா ஆட்டமிழக்கவில்லை. அரங்கு நிறைந்த கரகோசம்.நானும் என்னை மறந்து கரகோசம் செய்கின்றேன். என்னோடு இருந்த நண்பர்களும் கரகோசம் செய்கிறார்கள்.  இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நம்ப முடிகிறதா..?  இலங்கையின் தீவிர ரசிகர்கள் இந்திய வீரரொருவர் ஆட்டமிழக்கவில்லை என்பதை சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள்.. நம்ப முடிகிறதா….?
அதுதான் முரளி
அந்த விக்கட்டினை முரளி கைப்பற்ற வேண்டும்.. வீரத் திருமகனை 800 விக்கட் என்ற மைல் கல் சாதனையோடு வழியனுப்பி வைக்கவேண்டும் என்ற அவாதான் அது.

நீண்ட நேரத்தின் பின்னர்…. முரளி + நான் + முரளியின் குடும்பம் + இலங்கை கிரிக்கட் வீரர்கள் + முரளி ரசிகர்கள் + கிரிக்கட் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக்  கனம் வந்ததுபிரகயன் ஒஜாவின் விக்கட்டினைக் கைப்பற்றியதன் மூலம் 800 விக்கட்டுக்கள் என்ற மாபெரும் மைல்கல்லை முரளி அடைந்தார்.

அந்தக் கனம் யாருமே தன்னிலை மறந்து குறைந்த பட்சம் கரகோசமாவது செய்திருப்பார்கள். காலி மைதானமே அதிர்ந்ததுபல்கலைக் கழக உணவுச் சாலையும்தான். அனைவருமே எழுந்து நின்று எம் வீரத் திருமகனை கரகோசம் செய்து பாராட்டிய காட்சியை என்னென்று வர்ணிப்பது. சானக வெலகெதரவும், ஏஞ்சலோ மெத்தியூசும் முரளியை தம் தோளில் தூக்கி வரும்போது அவ்விருவரில் ஒருவராக நான் இருந்திருக்கக் கூடாதா என்று எனக்குள் கவலை மேலிட்டது...

முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகள். முரளிக்கு அடுத்த படியாக 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கட்டுக்களுடன் சேன் வோர்ன் இருக்கின்றார். முரளிக்கு கீழுள்ள அதிக விக்கட் கைப்பற்றிய முதல் 10 பேரில் யாருமே இப்போது விளையாடவில்லை. அனைவருமே ஓய்வுபெற்றுவிட்டார்கள்மீதமிருப்பவர்களில் ஹர்பஜான் சிங்(355)  , டேனியல் விட்டொரி(325), ப்ரெட் லீ(310) இவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கின்றது.. ஆனாலும் இந்த மைல் கல்லை அடைய பல வருடங்கள் செல்லும். அதுவரை இவர்கள் தாக்குபிடிப்பார்களா என்பது சந்தேகமே.. அதிலும் விட்டோரி அவளவு காலம் கஸ்ட்டம். ஆக முரளியின் இந்த பிரமாண்ட சாதனை இன்னும் பல வருடங்கள் நின்று நிலைக்கப் போகிறது
சிலவேளை இதுவே உடைக்கப்படாத சாதனையாகவும் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. அப்படியே இருந்துவிடாதா இறைவா..?

முரளியை விடைகொடுத்தனுப்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார்காலி மைதானம் நிறைந்த ரசிகர்கள், முரளியின் மனைவி, பிள்ளை, பெற்றோர், மாமியார், சகோதரர்கள், பாடசாலைப் பயிற்றுவிப்பாளர், முரளியின் பாடசாலையான சென்/அந்தனீஸ் மாணவர்கள், அதிபர் என்று ஏராளாமானோர் வருகை தந்திருந்தார்கள்.

தன் 19 வருட டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கைக்கு உறுதுணையாய் வந்த அனைவருக்கும் முரளி நன்றி தெரிவித்தார்

சில நடுவர்களால் உங்கள் பந்துவீச்சில் குறை காணப்பட்டபோது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேற்கப்பட்டபோது… ”கிரிக்கட் ஒரு விளையாட்டு அதனை விளையாட்டாகவே பார்க்கின்றேன். தொழில் நுட்பம் + விஞ்ஞான் அடிப்படையில் என்னை நான் நிரூபித்திருக்கின்றேன். அந்த வேளையில் எனக்கு உறுதுணையாகவிருந்த அனைவருக்கும் விசேடமாக அர்ஜுன ரணதுங்கவிற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்று கூறினார்.

முரளியின் எதிர்கால கிரிக்கட் வாழ்க்கை பற்றிக் கேற்கப்பட்டபோது..”தேர்வாளர்களுடன் பேசியிருக்கின்றேன், அவர்கள் விரும்பினால் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகள் வரை ஒரு நாள் போட்டிகளிலும் T-20 போட்டிகளிலும் விளையாட ஆர்வமாய் உள்ளேன் என்றும் கூறினார்.

சாதனைகள் பல படைத்தும் அவரின் குழந்தைத் தனம், அந்த அழகான குழந்தைச் சிரிப்புதன்னடக்கம், பெருந்தன்மை, அவைக்கூச்சம் இன்னும் அப்படியே இருக்கிறது. தலைக்கனம், தற்பெருமை, மேதாவித் தனம் எதுவுமே இல்லாத மனிதர். யாராலும் விரும்பப்படக் கூடிய அற்புத மனிதர், மனிதநேசர். வாழ்நாள் ஹீரோ முரளி என்றால் அது மிகையாகாது.

முரளியின் ஓய்வு என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு மிகுந்த கவலைதான். என்றாலும் அவரது இம்முடிவும் சரியானதே…. சரியான தருணத்தில் சரியான முடிவு. கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும் முரளியின் ஓய்வு இலங்கைக் கிரிக்கட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.


முரளியை சங்கா உட்பட அனைத்து வீரர்களும் தங்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றி வந்த அழகு.... ஐய்யோ எனக்குள் என்னமோ பண்ணியது.. வரலாற்றுப் பதிவுகள் அவை.

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீராவது வந்துவிடக் கூடாது என்று எவ்வளவோ போராடியும் இறுதியில் நான் தோற்றுதான் போனேன்….

முரளியின் எதிர்காலம், அவர்தம் குடும்ப வாழ்க்கை, அனைத்தும் மகிழ்சிகரமானதாகவும் அவரின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாகவும் அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
முரளி வாழ்நாள் சாதனையாளர்கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும்புகழும் நிச்சயம் வாழும்.
                                     Murali We Miss U Lot. Specialy I Miss U Lot.



மு.கு: முரளியின் வாழ்க்கைக் குறிப்பு அவரின் சாதனைகளை உள்ளடக்கிய முழுமையான பதிவொன்றை இட ஆவலாய் உள்ளேன். முடிந்தவரை விரைவாகப் பதிவிட முயற்சிக்கின்றேன்.



Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

எட்வின் சொன்னது…

நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றிருந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும், புகழும் நிச்சயம் வாழும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

aiasuhail.blogspot.com சொன்னது…

மன்னிக்கவும் திரு.எட்வின் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பல்கலைக் கழகத்தில் காலை 9-10.30 பரீட்சை இருந்ததால் என்னால் போட்டியை நேரடியாகக் காண காலி செல்ல முடியவில்லை. அதனால் என் மனம் அடைந்த துன்பம் இறைவன் அறிவான். ஆனாலும் காலை 10.45முதல் முரளி பிரியாவிடை பெறும் வரையான ஒவ்வொரு கனத்தையும் தவறவிடாமல் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

கிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும், புகழும் நிச்சயம் வாழும்.
நன்றி திரு.எட்வின் உங்கள் வருகை + கருத்து + வாக்களிப்பிற்கு.

ARV Loshan சொன்னது…

அருமை..
அழகாகவும் சுவையாகவும் எழுதியுள்ளீர்கள்.
பல வரிகளை ரசித்தேன்.
பொறாமையாக உள்ளது.
என்னை விட ஒரு தீவிரமான முரளி ரசிகரா என்று.. :)

//முரளியின் வாழ்க்கைக் குறிப்பு அவரின் சாதனைகளை உள்ளடக்கிய முழுமையான பதிவொன்றை இட ஆவலாய் உள்ளேன். முடிந்தவரை விரைவாகப் பதிவிட முயற்சிக்கின்றேன்.
//
என்னை முந்தி விடுவீர்களோ? ;)

aiasuhail.blogspot.com சொன்னது…

என் அழைப்பை ஏற்று என் பதிவுலகுக்கு வந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

// பொறாமையாக உள்ளது.
என்னை விட ஒரு தீவிரமான முரளி ரசிகரா என்று.. :)//

உண்மைதான் அண்ணா. நீங்கள் தீவிரம் என்றால் நான் அதி தீவிரம்.

//என்னை முந்தி விடுவீர்களோ? ;)//
முந்திவிட ஆசைதான். ஆனால் இதுவரை எந்த தயாரிப்புமில்லை. இனித்தான். தகவல் திரட்ட வேண்டும்.
நீங்கள் இப்படிக் கேட்டபிறகு. இன்னும் ஆர்வமாயும், அவசரமாயும், ஆசையாகவும் உள்ளது.