இற்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஊர்ல தொலைபேசிப் பாவனை அதிகரித்து வந்த நேரம் அது. அப்போ நம்ம ரிஃபாஜ் நானாவுக்கு ஒரு 45 வயசு இருக்கும். ஊர்ல அவர்தான் பிரபல விவசாயி, படிக்காத மேதை.
அவர் ஒரு நாள் தன் வயல் பக்கமா ஒரு ரவுண்ட் போய் வயல சுத்திப் பாத்திட்டிருக்கும் போது. அவர்ர நண்பன் ஒருத்தன்ட வயலுக்குள்ள அடுத்த வயல் காரன் வரம்ப வெட்டி தண்ணிய ஓடவிட்டிருந்தான். நண்பர்ட வயல் தண்ணில மூழ்குது.
ரிஃபாஜ் நானாவுக்கு ஒரே கவலையும் ஆத்திரமும். தனி ஒருத்தனா வரம்பக் கட்ட முடியாது. உடனே நண்பன்கிட்ட சொல்லியாகனுமே.. என்ன பண்ணலாம்...? அவன் வீடு ரொம்ப தூரம். போய் சொல்ல முடியாது. சரி நம்ம வீட்ட போய் நண்பண்ட ஃபோனுக்கு ஃபோணப்போட்டு சொல்லிடுவம் எண்டு வீட்டுக்கு விரைந்தார்.
வீட்ட வந்து தண்ட நண்பன் எப்பவோ ஒரு தாள்ள எழுதிக் கொடுத்த அந்த நம்பற தேடி எடுத்துட்டார், ஆனா... என்ன பிரச்சின; நம்பர டயல் பண்ணத் தெரியாது. வீட்டிலையும் யாருமில்ல. என்ன பண்ணலாம்????
ஆ…. பக்கது வீட்டுல ரொம்ப படிச்ச நண்பன் ரிசா ட் இருக்கானே. அவந்தான் 4ம் ஆண்ட நாலு வருசம் படிச்ச கெட்டிக்காரணாச்சே.. அவனுக்கு தெரிஞ்சிருக்கும். அவனக் கூப்பிட்டு கோள் எடுத்துத் தரச்சொன்ன சரி.
(நண்பன் ரிசாட்ட கூப்பிட்டார் ரிஃபாஜ் )
அடுப்பங் கரையில சமையல் செஞ்சிட்டிருந்த றிசாட் அவசர அவசரமா வெளியில் வந்தார்…
றிசாட் : என்ன ரிஃபாஜ் என்ன விசயம்.?
ரிஃபாஜ் : இல்லடா இந்த நம்பருக்கு கோள் ஒண்டு எடுத்துத்தாவன்.
றிசாட்: ஐய்யோ… வேலசெஞ்சிட்டிருக்கண்டா..
ரிஃபாஜ் : கொஞ்சம் அவசரம்டா இப்பவே வாவன்.
றிசாட் : சரி சரி.. எந்த நம்பர்.?
அப்படி கேட்டுக்கொண்டே ரிஃபாஜ்ட வீடுப்பக்கம் வந்தார் றிசாட். ரிஃபாஜ் நம்பர தூக்கி நீட்டினார்.
பத்து இலக்கம் இருக்கு.
ஆனா நம்ம ரிசாட்டுக்குத்தான் 9 எண்டால் ரொம்ப பிடிக்குமே…
ஏதோ அவசரத்துல பத்து இலக்கத்துக்குப் பதிலாக ஒன்பது இலக்கங்கள அடிச்சிட்டு.
”இந்தா கோள் போகுது. கோள எடுக்கலாட்டி கொஞ்சம் சுணங்கி இந்த பொத்தான அமத்து (ரீ-டையல்) திரும்ப கோள் போகும் சரியா..?
எனக்கு சமையல் வேல நிறையக் கிடக்கு. அவள் வாறதுக்கிடையில சமச்சிடனும் இல்லாட்டி நேத்து உனக்கு நடந்ததுதான் எனக்கும்”
எண்டு சொல்லிட்டு ஒரே ஓட்டம்.
நம்ம ரிஃபாஜ் நானாவும் ரிசீவர தூக்கி காதுல வெச்சா….
அங்க மறுமுனையில தொலைபேசி நிறுவனத்தால் இலக்கம் பிழையானால் ஒலிக்கவென ஒலிப்பதிவு செய்துவைக்கப்பட்ட குரல்.
”நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது. தயவு செய்து இலக்கத்தைச் சரி பார்க்கவும்”
அப்படி சொல்லிச்சு..
என்னடா இது.. ?? நம்பர சரியாத்தானே குடுத்தம். ரிசாட் வேற கோளெடுத்துத் தந்தானே…. ம்ம்ம்…
ரிசாட் சொன்ன மாதிரி திரும்ப ரீ-டையல் பொத்தான அழுத்தினால் ...
திரும்பவும்.
”நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது. தயவு செய்து இலக்கத்தைச் சரி பார்க்கவும்”
இப்படி பல முறை திரும்ப திரும்ப அழைப்பை ஏற்படுத்தினாலும் அதே பதில். நம்ம ரிஃபாஜ் நானா வேற செம சூடான பார்ட்டியா…. ஆளுக்கு நல்லா கோவம் வந்துட்டுது.
சரி கடைசியா ஒரு தடவ எடுத்துப் பாப்பம்.
ரீ-டையல்…...
”நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது. தயவு செய்து இலக்கத்தைச் சரி பார்க்கவும்”
(ரிஃபாஜ் நானா பயங்கர கோவத்தோட..)
”இஞ்சப் பாரு புள்ள.. என்ன பகடி பண்றியா..?? ஆ… ??? உங்க வயல்ல எவனோ ஒருவன் வரம்ப வெட்டியுட்டானுண்டு உங்க வாப்பாவுக்கு சொல்ல கோள் எடுத்தா நீ விளையாடுறாய் என்ன..?
பகடி பண்ணாம கெதியா ஃபோன உங்க வாப்பாகிட்ட குடுபாப்பம்…”
என்று கத்திவிட்டு; மகள் ஃபோன வாப்பாகிட்ட குடுப்பாள் எண்ட நம்பிக்கையில் கொஞ்சம் அமைதியானார்..
ஆனால் மீண்டும்...,
”நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது. தயவு செய்து இலக்கத்தைச் சரி பார்க்கவும்”
”#&*% $&*(@@#^*)(&%$ &%$@#^* (கெட்ட வார்த்தையாம்) என்ன புள்ள என்னோட விளையாடுறியா..? ஆ…??? அது சரி நல்லது செய்ய வந்த என்ன நீ பைத்தியக் காரன் ஆக்குறாயென்ன..?
சொல்ல வந்த எனக்கு செருப்பால அடிக்கனும். நான் விசயத்த சொல்லிட்டன் உங்க வாப்பாகிட்ட சொல்லி என்னெண்டு பாரு. இல்லன்ன நீயாச்சு உங்க வாப்பாவாச்சு. ”
அப்படி சொல்லிட்டு ஃபோனை சடாருண்டு அடிச்சுட்டு போயிட்டாரு.
பாவம் அந்த ரெக்கோர்டிங் வொய்ஸ் அக்கா என்ன பாவம் பண்ணினாவோ..?
4 comments:
பாவம் அந்த ரெக்கோர்டிங் வொய்ஸ் அக்கா என்ன பாவம் பண்ணினாவோ..?
//
ஹா.ஹா..
//அப்படி சொல்லிட்டு ஃபோனை சடாருண்டு அடிச்சுட்டு போயிட்டாரு.//
போன் வேலை செய்யுதா..இல்லையா?...
கலக்கல்..
ஆமா பாஸ்...
பட்டாபட்டி.. சொன்னது…
//போன் வேலை செய்யுதா..இல்லையா?...//
ஹி ஹி ஃபோனெல்லாம் நல்லாதான் வேல செய்து, அண்ணாத்ததான் ஒரு சின்னப் பிள்ள நம்மளோட விளையாடுறாளே எண்டு செம கடுப்புல இருக்காராம்..
//கலக்கல்.
ஆமா பாஸ்...//
நன்றி அண்ணாத்த. உங்களவிடவா.. நாங்க கலக்கப்போறம்.????
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் நம்ம கடப் பக்கம் வருவீங்க என்று உங்க வருகைக்காக கதவ திறந்து வெச்சிருக்கம்.
எதையும் சுட்டுட்டு போயிடமாட்டீங்க எண்ட நம்பிக்கைலயும்தான்.
எதையும் சுட்டுட்டு போயிடமாட்டீங்க எண்ட நம்பிக்கைலயும்தான்.
//
நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்...
//நம்பிக்கைதானே வாழ்க்கை பாஸ்..//
ஆமா பாஸ். சரியா சொன்னீங்க.
நீங்க கூட ஏதோ ஒரு நம்பிக்கையிலதானே குந்திகினு எதையோ படிக்குறீக.
அதுல எனக்கொரு டவுட் பாஸ். உண்மையா அந்த பேப்பர்ல என்னதான் இருக்கு?
ஏதும் எழுத்துகளா? இல்ல நம்ம அழகிகளா?
ஹி ஹி ஹி
கருத்துரையிடுக