நம்ம அப்புக்குட்டிக்கு நீண்ட நாட்களா மலேசியா போகனும்னு ஆசை. அதுக்கு கைவசம் போதிய பணமில்ல, ஆனாலும் தீராத ஆசை. எப்படியாவது மலேசியா போய்த்தான் ஆகனும். என்ன பண்ணலாம் எண்டு மல்லாக்க படுத்து மணிக்கணக்கா யோசிச்சாரு நம்ம அப்பு. ஏதோ ஒரு ஐடியா உதிச்சுது.
அந்த ஊர்ல ஊர்காவி உலகநாதன் அப்படின்னு ஒருத்தன். அதென்ன ஊர் காவி உலகநாதன். ஆமாங்க அவன் படகு மூலமா வேறு ஊருக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சட்ட விரோதமா ஆட்கள காவிக்கொண்டுபோய் விடுவான். அதனாலதான் அவன் பெயரு ஊர்காவி உலகநாதன்.
அவன் ஞாபகம்தான் நம்ம அப்புக் குட்டிக்கு வந்துது. அவன போய் சந்திச்சுப் பேசினா குறைஞ்ச செலவுல மலேசியா போயிடலாம் எண்டு நம்பிக்கையில் உலகநாதன போய் சந்திச்சுது நம்ம அப்புக் குட்டி.
”சரி குறைஞ்ச செலவுல உன்னைக் கொண்டுபோய் விடுறன், ஆனா நீ இன்னும் 5 பேர சேர்த்துக்கிட்டு வரனும். இல்லன்னா ரொம்ப செலவாகும்.”.. என்று உலகநாதன் கராரா சொல்லிட்டான்.
அப்புக் குட்டியும் ஊரெல்லாம் சுற்றி 5 பேரை சேத்துக்கிட்டாரு. அவனுங்களும் வேலை வெட்டி இல்லாம வெளிநாடு போற கனவுல இருந்த பயபுள்ளைங்க. அப்புக்குட்டியும்.. "மலேசியால நல்ல வேலைகிடைக்கும் நல்ல சம்பளம் வாங்க போகலாம்" எண்டு மூழைச் சலவை செய்து கூட்டி வந்துட்டார்.
எல்லாரும் பேசின படி காசக் கொடுத்துட்டாங்க.
ஊர் உறவுகளுக்கு பிரியாவிடை சொல்லி கண்ணீர்மல்க பயணம் ஆரம்பம்.
ஊர்காவி உலகநாதன் எல்லாரையும் படகில் ஏற்றி ஆழ்கடல்ல சுத்துறான் சுத்துறான் எங்க போகுது எங்க வருது ஒன்னுமே புரியல இருக்குற 6 பேருக்கும். படகு கடல்ல போயிட்டே இருக்கு. இவங்களும் மலேசியாக் கனவோட அவங்க அவங்க திட்டங்கள பேசிட்டே போனாங்க.
எப்படியோ பல மணி நேர பயணத்தின் பின் படகு ஒரு மணல் மேட்டை அண்மித்தது. படகை நிறுத்திய ஊர்காவி உலகநாதன். “இங்கப் பாருங்க. அதோ தெரியுதே அதுதான் மலேசியா, போட்டுல அங்கால போகமுடியாது.. மலேசியா கடல் படை ,பொலீஸ் எல்லாம் நிக்கும்.நீங்க இந்த மணல் மேடு வழியா போனீங்கன்னா இலகுவாப் போயிடலாம். ” என்று சொல்லி எல்லாரையும் இறக்கிட்டு திரும்பிப் போயிட்டான்.
அப்புக் குட்டி தலைமையிலான குழு மலேசியா வந்து சேர்ந்த பெருமை + மகிழ்ச்சியோடு ஓட்டமும் நடையுமாக உட்சாகமாக மணல் திட்டு வழியா நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க.
அப்பதான் அப்புக் குட்டிட குழுவில் இருந்த ஒருத்தன் டேய் அங்கப்பாருடா என்று கத்தினான். எல்லாரும் அவன் காட்டின திசையில பார்த்தா…….
கொழும்பு - கற்பிட்டி இலங்கைப் போக்குவரத்து சபை பஸ் போகுது.
அடப்பாவி உலகநாதா…. மலேசியா எண்டு சொல்லி கற்பிட்டில கொண்டுவந்து விட்டுட்டியேடா பாவி… என்று எல்லோரும் ஒப்பாரி வைத்தார்கள். கூடவே அப்புக் குட்டிக்கு ஆத்திரம் அடங்குமட்டும் கும்மிட்டு போயிட்டாங்க.
ஆனால் அப்புக் குட்டிக்கு அடி எல்லாம் வலிக்கவே இல்ல. அத விட்டுட்டு அப்பு ஏதையோ ஆழமாய் யோசித்தார்.
இலங்கைப் போக்குவரத்து சபை (சி.டி.பி)பஸ் இங்க எங்க வந்துச்சு..? ஒருவேளை மலேசியாக்கு இலங்கைல இருந்து நேரடி பஸ் போட்டுட்டாய்ங்களோ..?
அடச்சே அநியாயமா இவ்வளவு காசு குடுத்து படகுல வந்தத இந்த பஸ்ல வந்திருக்கலாமே… செலவு மிச்சமாயிருக்குமே என்று பீல் பண்ணத் தொடங்கிட்டார்.
பிட்டு: பாவம் பயபுள்ள கற்பிட்டிய மலேசியான்னு நினச்சு அங்கதான் சுத்திக்கிட்டு திரியுது. யாராச்சும் கண்டா பயபுள்ளைய பிடிச்சு பஸ் ஏத்திவிடுங்க.
4 comments:
பயபுள்ளைய பிடிச்சு பஸ் ஏத்திவிடுங்க.
//
ஓகேன்ணே..
@பட்டாபட்டி....
இன்னாது அண்ணாவா...?
ஓகே ஓகே.. பஸ் ஏத்திவிடுங்க.
நாங்க வெய்டிங்...ஹி ஹி
அப்பு உனக்கு வச்சாண்டா ஆப்பு .....ஊர்காவி உலகநாதன், ஹி... ஹி... ஹி... ஹி...
@Mohamed Rizad M.B.
ஆமா பாஸ் நீங்க கட்டார் போனதும் ஊர்காவிட போட்டுலையாமே உண்மையா...?
கருத்துரையிடுக