RSS

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாரா?-அமெரிக்காவின் மற்றுமொரு நாடகம்


சர்வதேச நாடுகளால் தீவிரவாதி என்ற சாயம் பூசப்பட்ட பின் லேடன்
ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் இஸ்லாத்தினை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மேற்கத்தேயர்களுக்கெதிராகவும் போராடியவர் என்ற வகையில் எனக்கு அவர் ஒரு மாவீரனே. எனக்கு மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரானவர்களுக்கும் அவர் ஒரு மாவீரனே...

பின்லேடன் உயிருடன் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நேற்று அமெரிக்கர்களால் அவர் கொல்லப்படவே இல்லை.
அமெரிக்கர்கள் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றோம் என்று காட்டுவதற்காக எப்படிப்பட்ட ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்றினார்களோ அதேபோன்றதொரு நாடகத்தைத்தான் இப்பொழுதும் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

ராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கைது செய்யப்படும் தருணம் முதல் தூக்கிலிட்டுக் கொல்லப் படும் வரையான அத்தனையயும் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர்களுக்கு, சதாம் ஹுசைனை விடவும் முக்கியமான அமெரிக்கா அதிகம் அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன் ஜனாசாவையாவது ஏன்  காட்டமுடியவில்லை?

அப்படியே பின்லேடன் அமெரிக்கர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று வைத்துக்கொண்டால் கூட சர்வதேச யுத்த விதிமுறைகளின் படி ஏன் அவரது உடல் அவரது உறவினர்களிடமோ அல்லது அவர் சார்ந்தவர்களிடமோ ஒப்படைக்கப்படவில்லைபின்லேடன் இறுதிக்கிரையைகள் இஸ்லாமிய முறையில் நடைபெற்றதாகக் கூறும் அமெரிக்கர்கள் ஏன் அதை ஆழ்கடலில் புதைக்க அல்லது கடலில் தூக்கி வீசவேண்டும்.  பின்லேடனின் ஜனாசவையாவது ஒளிப்பதிவில் காட்டியிருக்கலாமே..? புகைப்படத்தினை வெளியிட்டவர்கள் ஏன் ஒளிப்பதிவை வெளியிடவில்லை? ஒசாமா பின்லேடனின் ஜனாசாவை நல்லடக்கம் செய்த இடம் தெரிந்துவிட்டால் அது தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறிவிடுமாம். நகைப்பாயிருக்கிறது.

உண்மையில் அடுதான் காரணமா? இல்லை ஒசாமா பின்லேடன் என்று கூறி புதைத்த உடலை பிறகு தோண்டியெடுத்து அது ஒசாமா பின்லேடன் இல்லை என்று நிரூபித்துவிடுவார்கள் என்ற அச்சமா?


பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அவரது புகைப்படத்திலும் பாரிய சர்ச்சை நிலவுகிறது. அது எடிட் செய்யப்பட்ட ஒரு புகைப்படமாகவே இருக்கிறது.
ஒருவரது புகைப்படத்தை அவர் இன்னார்தான் என்பதை மறைப்பதற்காக பொதுவாக அவரது கண்களை கறுப்பு நிறத்தினால் மறைத்து வெளியிடுவார்கள். பொதுவாக  இணையங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் இதனை நாம் கண்டிருப்போம்.
முகம் தெளிவாகத் தெரிந்தால் கூட கண்கள் தெரியாவிட்டால் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.
உடல் கூட தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சமயம் எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் கூட அவரது இரு கண்களும்  முற்றாக சேதமுற்ற அமைப்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் என்னுள் பலத்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.
அந்தப் புகைப்படம் இதோ



ஒசாமா பின்லேடனை நேருக்கு நேரே நின்று கண்களை இலக்கு வைத்து சுட்டதைப் போன்று இருக்கின்றது இந்த புகைப்படம். அப்படி நேருக்கு நேரே ஒசாமா பின்லேடன் சிக்கியிருந்தால் கைது செய்திருக்கலாமே? கண்களை மாத்திரம் சேதமாகிய ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இவர்களை என்னென்று சொல்வது…?

எது எப்படியோ பின்லேடன் என்பவர் ஒரு தனிமனிதர் ஆனால் அவர் உருவாக்கியிருக்கும் இயக்கமானது பல நாடுகளுக்கும் பரந்து ஊடுருவி இருக்கும் ஒரு பாரிய வலைப்பின்னல். அதை அவ்வளவு எளிதில் அழித்துவிட அமெரிக்கர்களால் முடியாது. அதே நேரம் அல்குவைதா இயக்கத்தில் ஒசாம பின்லேடனினால் பயிறுவிக்கப்பட்ட ஒசாமாவின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்ட 2ம் நிலைத் தலைவர்கள் பலர் உள்ளனர் அவர்களை என்ன செய்யப்போகிறது அமெரிக்கா…?

நான் இப்படிச் சொல்வதால் அமெரிக்காவினால் பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தமல்ல.
ஒரு வாதத்திற்காக கூறுகிறேன்.
ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? இல்லை ஏற்கனவே மரணித்துவிட்டாரா என்பதே மர்மமாக உள்ள நிலையில் அமெரிக்கா தனக்கு அவசியம் தேவையான ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சந்திரனில் கால் பதித்தோம் என்று கூற நடத்திய நாடகத்தைப் போல..


இறுதியாக ஒன்று மட்டும் உண்மை. அமெரிக்காவும் மேற்குலகும் அல்குவைதா போராளிகளின் தாக்குதல்களை விரைவுபடுத்தியிருக்கிறார்கள்.

மேற்குலகும் அமெரிக்காவும் அல்குவைதாவின் தாக்குதல்களை மிக அண்மையில் எதிர்பார்க்கட்டும்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 comments:

Mohamed Faaique சொன்னது…

நல்ல ஆய்வு...

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique
நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

Jegan சொன்னது…

Dear Sohail. நான் ஒரு Photoshop Designer. நீங்கள் காட்டியுள்ள படங்களை பார்க்கும்போது எனக்கும் சந்தேஹம் வருகிறது. முதல் படத்தில் உள்ள அமைப்பு அப்படியே மூன்றாம் படத்துடன் ஒத்து போகிறது. இதில் ஏதோ டகால்ட்டி வேலை நடந்துள்ளது.

Deepak சொன்னது…

sirr..sethutan avan...neenga yen thidutikurenga.... religion karanamaa ???

Riyaz Ahmed சொன்னது…

very good post to support terrorist and terrorism

I am a muslim by Birth but still I see Osama Bin Laden and his al queda as terrorsism group. They killed my dad in a bomb attack

aiasuhail.blogspot.com சொன்னது…

@Jegan
உண்மைதான் சகோதரா...
இது தொடர்பில் வெளியாகியுள்ள இன்னும் சில புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. உங்கள் மின்னஞ்சல் தெரிந்தால் என்னால் அதை உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

நன்றி உங்கள் வருகைக்கு

aiasuhail.blogspot.com சொன்னது…

@Deepak

ஒசாமா பின்லேடன் இருக்கலாம் இறந்திருக்கலாம். நான் சொல்ல வந்தது அமெரிக்காவின் நேற்று முந்தின தாக்குதலில் அவர் கொள்ளப்படவில்லை.
இது அமெரிக்காவின் நாடகம் என்றே சொல்கின்றேன்.

நான் சார்ந்த மதம் என்பதற்காக அல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர் என்ற வகையில் அவரை நான் விரும்புகின்றேன். வீரனாகப் பாக்கின்றேன்.

பிடல் கஸ்ட்ரோ, ஹியூகீ சார்வேஸ், அஹமத் நஜாத் அவர்களையும் நான் மிகவும் விரும்புகின்றேன்.
அவர்களும் மாவீரர்கள்.

முதுகெலும்புள்ள தலைவர்கள்.

நன்றி உங்கள் வருகைக்கு.

aiasuhail.blogspot.com சொன்னது…

@Riyaz Ahmed

தீவிரவாத தாக்குதலில் உங்கள் தந்தை இறந்ததையிட்டு நான் மனம் வருந்துகின்றேன்.
நான் என்ன கூறினாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.

ஆனால் அல் குவைதா போராளிகளால் நடத்தப்பட்டதாக சர்வதேசத்தால் கூறப்பட்ட எல்லாமே அவர்களால் நிகழ்த்தப்பட்டைவையல்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதை நீங்களும் அறிவீர்கள்.

எது தீவிரவாதம்? தீவிரவாதிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் இந்த மேற்குலகம் செய்வது என்ன?

அந்த மேர்குலகின் ஏகாதிபத்தியற்திற்கு எதிராக குரல் கொடுக்கும், போராடும் அனைவரும் மாவீரர்களே.

நன்றி உங்கள் வருகைக்கு.

பெயரில்லா சொன்னது…

அப்படியா! வேறு எவை அவர்களால் நடத்தப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமோ? ரகசிய தொடர்பு எதாவது வைதிருகிரீர்களா அவர்களுடன். செத்து போனவன் ஒரு தீவிரவாதி, மற்றவர்கள் எல்லாம் அவனை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இஸ்லாமியர்கள் மட்டுமே மிகவும் வருந்திக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் 'நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. இஸ்லாம் ரொம்ப அமைதியான மதம்' என்று டயலாக்குகள் வேறு.

M. Jaya prakash
Kanyakumari

Unknown சொன்னது…

தவறு நண்பரே!

மேற்கத்திய நாடுகள் பிற நாடுகள் மேல் செய்யும் ராணுவரீதியான ஆக்கிரப்புகளில் தவறுகள் நிறைய உள்ளன அதற்காக பின்லேடனை ஒரு உத்தமன் போல் நீங்கள் சித்தரிப்பது நியாயமில்லை.

நினைத்து பாருங்கள், அன்றைய தினம் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ அந்த இரட்டை கோபுரத்தில் சிக்கியிருந்தால் ???????

சிந்தியுங்கள் நண்பரே!

Unknown சொன்னது…

அந்த புகைப்படம், பாகிஸ்தானிய மீடியாக்களில் வெளிவந்தது! வருத்தம் தெரிவிக்கப்பட்டு, மீடியாவால் திரும்பப் பெறப்பட்டுவிட்டது! புகைப்படம் அசல் அல்ல, என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது! டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் தெரிந்தவுடன், அதன் முடிவுகளும், சென்ஸார் செய்யப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்! (ந்ன்றி: என்.டி.டி.வி தளம்!)

aiasuhail.blogspot.com சொன்னது…

@பெயரில்லா
உங்களுக்கு இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற சாயம் பூசவேண்டுமென்ற பேரவா இருக்கின்றது. உங்கள் கருத்தில் அது தெளிவாக தெரிகின்றது.

அமெரிக்காவும் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளும் தாங்களே திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு பழியை அல்குவைதா மீது திணிப்பது உங்களுக்கு தெரியாதா?

அல்குவைதாவால் உத்தியோக பூர்வமாக உரிமை கோரப்பட்டவை தவிர்ந்த ஏனையவற்றுடன் அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றே சொல்கிறேன்.

எல்லா இஸ்லாமியர்களும் அவரை ஆதரிக்கவில்லை. அதேபோல் அவரின் தாக்குதல்களால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை கண்டிக்காமலுமில்லை.

இவ்வளவு நவீன வசதிகள் கொண்ட சட்டலைட்டுகள், விமானங்கள், புலனாய்வு அமைப்புகளை வைத்துக்கொண்டே அப்பாவிகள் மீதும் குடியிருப்புகள் மீதும் குண்டு மழை பொழியும் அமெரிக்க இஸ்ரேலியரகளை விட ஒசாமா பின்லேடன் எவ்வளவோ மேல்...

//இதற்கிடையில் 'நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. இஸ்லாம் ரொம்ப அமைதியான மதம்' என்று டயலாக்குகள் வேறு.//

இஸ்லாம ஒரு இனிய அமைதியான மார்க்கம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத விளங்கிக்கொள்ளும் மனநிலையில் நீங்களும் இல்லை. இருந்தால் சொல்லுங்கள் அதுபற்றிப் பேசலாம்...//

நான் சார்ந்த மதம் என்பதற்காக அல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர் என்ற வகையில் அவரை நான் விரும்புகின்றேன். வீரனாகப் பாக்கின்றேன்.

பிடல் கஸ்ட்ரோ, ஹியூகீ சார்வேஸ், அஹமத் நஜாத் அவர்களையும் நான் மிகவும் விரும்புகின்றேன்.
அவர்களும் மாவீரர்கள்.

முதுகெலும்புள்ள தலைவர்கள்.

நன்றி உங்கள் வருகைக்கு.

aiasuhail.blogspot.com சொன்னது…

@Karikal@ன் - கரிகாலன்




உண்மைதான் நண்பரே அப்பாவிகளின் உயிரிழப்பு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று மட்டுமல்ல கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட...

செம்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பாக பல சர்ச்சைகள் நிலவியது உங்களுக்கு தெரியும்...

இது அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்று பல அமெரிக்க நிபுணர்களே வெளிப்படையாக ஆதாரபூர்வமாக நிரூபித்ததும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்...

எது எது எப்படி இருந்த போதும்..... ஒசாமாவை நான் உத்தமர் என்று சொல்லவரவில்லை. உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் அரக்கர்களை ஆட்டம்காண வைத்த வீரன் என்றே சொல்கிறேன்.

நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.

aiasuhail.blogspot.com சொன்னது…

@ரம்மி

நன்றி உங்கள் தகவலுக்கு..

இந்தப் புகைப்படமல்ல இன்னும் சில புகைப்படங்களும் இதனை போலி என்ரு நிரூபிக்கும் வண்ணம் வந்துள்ளன....

செய்திகளில் அமெரிக்கர்கள் டீ.என்.ஏ மூலம் உறுதி செய்தார்கள் என்று முன்பு கூறப்பட்டிருந்ததே...

பெயரில்லா சொன்னது…

யப்பா...என்னே உங்க மத பாசம்...செத்தவன் தீவிரவாதிய இருந்தாலும் அவன் உங்க மதத்துகாரனதும் உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு ஒரு பதிவா...உங்களையெல்லாம் திருத்த்தவே முடியாது...but im not saying what america has been doing is right....but this guy deserve this death....supporting such a guy just because of his religion shows how extremist you are....grow up man...

Raja

aiasuhail.blogspot.com சொன்னது…

@பெயரில்லா

என்ன ராஜா சார் இவ்வளவெல்லாம் பேசுறீங்க... என் பதிவின் அடிப்படையை புரிஞ்சிக்கமாட்டேங்குறீங்களே....

ஒசாமாவின் கொலை என்று அமெரிக்கா இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பது ஒரு நாடகம் என்று சொல்லவே எனது இப்பட்திவு.

நான் என் முன்னைய கொமென்களில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்கிறேன்...

ஒசாமா என்றல்ல அமெரிக்கா போன்ற ஆதிக்க வெறிபிடித்தவர்களுக்கு எதிராகா போராடுபவர்களை நான் இப்படித்தான் வீரர்களாகப் பார்க்கின்றேன்.....


முதலில் இஸ்லாம் சம்பந்தமாக உங்களுக்குள்ள தப்பபிப்பிராயங்களை களைந்துவிட்டு நடு நிலையாகப் பேசுங்கள்.....

உங்கள் அளவுக்கு சமயத்தை இலக்குவைத்து பேசவோ, இலக்கு வைக்கவோ எனக்கு விருப்பமில்லை....

நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.

பெயரில்லா சொன்னது…

ஏக இறையின் அருள் என்றென்றும் நம் மீது நிலவட்டுமாக
முதலில் ஒரு இஸ்லாமியனாக இருந்து ஒசாமா பின் லேடனுக்கு ஏற்பட்ட இந்த முடிவை வரவேற்கிறேன். அவரால் அநியாயமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கண்ணீருக்கு ஓரளவு நீதி கிடைத்திருப்பதையும் நினைத்து திருப்தி அடைகிறேன். பெரிய ரவுடி தனக்கு காரியம் ஆக வேண்டி சிறிய ரவுடிகளை உருவாக்குகிறான். பின்னர் சிறிய ரவுடி தன் கைமீறி போகும் போது பெரிய ரவுடியால் சிறிய ரவுடி கொல்லப்பட்டிருக்கிறான்.

By Ibnu Halima

பெயரில்லா சொன்னது…

ஆனால் சிறிய ரவுடியை (ஒசாமாவை) விட மிக மோசமான பெரிய ரவுடி (அமெரிக்கா) எப்போது தண்டனை அனுபவிக்க போகிறான்? சிறிய ரவுடி கொன்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் என்றால் பெரிய ரவுடி அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மில்லியனில் வருகிறது. அவனுக்கு யார் தண்டனை வழங்க போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. பெரிய ரவுடி அமெரிக்காவை விட மோசமான கேட்டகிரி மனிதர்கள் பலரும் இவ்வுலகத்தில் உண்டு. இங்கே பின்னூட்டமிட்டவர்களிலும் உண்டு. அவர்கள் யாரெனில் அமெரிக்கா போடும் டாலர்களுக்காக எப்போதும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள். இந்த லிஸ்டில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆட்சியாளர்கள், ஊடகத்தினர்கள், அதிகார வர்க்கத்தினர்கள் மற்றும் மேட்டுக்குடி உயர் சாதி வர்க்கத்தை சேர்த்துக் கொள்ளலாம்

By Ibnu Halima

பெயரில்லா சொன்னது…

இவர்கள் ஒசாமாவை மட்டுமே குற்றம் சாட்டுபவர்கள். மறந்தும் அமெரிக்காவை கனவில் கூட எதிர்க்காதவர்கள். நாயைப் போன்று தன் அமெரிக்க எஜமானனுக்கு நன்றி விசுவாசம் காட்டுபவர்கள். நாய்களுக்கு தெரியாது தன் எஜமான் நல்லவனா கெட்டவனா என்று. ஆனால் இந்த மனித உருவில் இருக்கும் ஜந்துக்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல நடிப்பார்கள்.

By Ibnu Halima

பெயரில்லா சொன்னது…

இனிவரும் காலம் அமெரிக்காவிற்கு கடினமானது. ஏனெனில் அமெரிக்கா உருவாக்கிய பொம்மை ஆட்சியாளகள் பல நாடுகளில் பதவியை விட்டும் விரண்டோடுகிறார்கள். இனி அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடிப்பது கஷ்டமான விஷயம். மேலும் பொருளாதார நிலைமையும் அமெரிக்காவில் இன்னும் சகஜமான நிலைக்கு வரவில்லை. சரிந்த தன்னுடைய பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்காவால் அவ்வளவு சீக்கிரம் நிலை நிறுத்த முடியாது. தனக்கு டாலர் பிச்சை போடும் எஜமான் கஷ்டத்தில்ருக்கிறார் என்பதை விசுவாசமான ஜந்துக்களால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவும் மனம் இடம் கொடுக்காது.

By Ibnu Halima

பெயரில்லா சொன்னது…

ஆனாலும் அமெரிக்கா என்ற பெரிய ரவுடி தீவிரவாதத்த்ற்கு எதிரான போர் என்று தனது ஆயுத வியாபாரத்தை திறம்படவே செய்து கொண்டிருக்கும். இவ்வளவு காலம் ஒசாமாவை காட்டி பயமுறுத்திய அமெரிக்க மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் இனிமேல் அய்மான் அல் ஜவாஹிரி என்ற நபரை தீவிரவாத முகமாக மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இதற்காக தனது நாட்டின் குடிமக்களின் சில உயிர்களை கூட பலி கொடுக்க அமெரிக்க தயங்காது. ஒருவேளை அமெரிக்கர்கள் விழிப்படைந்து விட்டால் இருக்கவே இருக்கிறது இந்தியர்களின் உயிர்கள்.

By Ibnu Halima

edmand சொன்னது…

ஒசாமா கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவையும் பாகிஸ்தானையும் பழி தீர்ப்போம் என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களும் ஒசாமா கொல்லப்பட்டார் என்று பொய் சொல்கிறார்களோ

aiasuhail.blogspot.com சொன்னது…

@பெயரில்லா

@இப்னு ஹலிமா:

உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானவையும் நியாயமானவையுமாகும்...

உங்கள் கருத்துகளோடு நான் 100% உடன்படுகின்றேன்..

உங்கள் காத்திரமான கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள் கோடி.