RSS

அப்புக்குட்டி from அமெரிக்கா


நம்ம அப்புக்குட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஆ ஊ ந்னா எல்லாரும் அமெரிக்கா பத்திப் பேசுறாங்களேஅப்படி அமெரிக்காவுல என்னதான் இருக்குன்னு ஒரு முறையாவது போய்ப் பாத்துட்டு வந்துடனும்னு.

அதுக்கு என்ன பண்ணலாம்னு டீப்பா திங் பண்ணினப்போ அப்புக் குட்டி மனசுல ஒரு ஐடியா வந்துச்சு

இலங்கைக்கு உல்லாசப் பிரயாணியா வாற யாராவது ஒரு அமெரிக்கர பிடிச்சு அவர்  மூலமா அமெரிக்கா போறதுன்னு முடிவெடுத்த அப்புக்குட்டி அதுல வெற்றியும் பெற்றார்.
ஒரு மாதிரியா அப்புக்குட்டி அமெரிக்காவுக்கு வந்தாச்சு.


அமெரிக்கா வந்த அப்புக்குட்டி அமெரிக்காவ உல்லாசமா உற்சாகமா  கால் நடையாக  சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போ அப்புக்குட்டிக்கு ஒரு சிக்கல். கண்ல பட்டதையெல்லாம் வாங்கி வாங்கி குடிச்சதுல அவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய தேவை வர பொதுக்கழிப்பறையொன்றைத் தேடி அலைந்தார் அப்பு

அப்படியொன்றை எங்குமே காணமுடியல. நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறியதும் நம்ம அப்பு பாதையோரமாக ஒதுக்குப் புறமான இடத்தில் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்து ஓரமா ஒதுங்கினார்..

அப்போது அங்குவந்த அமெரிக்க பொலீஸ் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தி

பொலீஸ்:  இப்படிப் பொது இடங்களை அசுத்தப்படுத்துவது குற்றம் என உமக்குத் தெரியாதா?”

அப்புக்குட்டி : ஐய்யா நான் இலங்கைல இருந்து அமெரிக்காவ சுத்திப்பாக்க வந்திருக்கன். எனக்கு மிக அவசரமாக இருக்கிறது. ஒழுங்கான இடம் எதுவும் கிடைக்கவில்லை. ஆத்திரத்த அடக்கலாம் ஆனால் மூ………. முடியுமா? கொஞ்சம் கருணை பண்ணுங்கள் ஐய்யா..


பொலீஸ்: .. அப்படியா..? எனது பின்னால் வாரும். நான் உமக்கு அதற்குரிய இடமொன்றைக் காட்டுகின்றேன்.

அப்புக்குட்டியும் பொறுமையோடு அவர் பின்னால் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் ஓர் அழகான வளவுக்குள் நுழைந்தனர். அங்கு மிக நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட பசுமையான புற்றரையும் அழகான மலர்ச்செடிகளும் காணப்பட்டன.

பொலீஸ்: இங்கே உமது தேவையை நிரைவேற்றிக்கொள்ளலாம்

அப்புக்குட்டி : என்ன ஐய்யா சொல்றீங்க..? அங்க ரோட்டோரமா ஒதுங்கின என்னை இழுத்துட்டு வந்து.இந்த அழகான மலர்ச்செடிகளின் மீது போகச் சொல்றீங்களே? இது உங்களுக்கே ஓவரா இல்லியா..?


சரி இங்கே எனது தேவையை நான் நிறைவேற்றிக்கொள்ளலாமா..?

பொலீஸ் : ஆம் இங்கே நிறைவேற்றிக்கொள்ளும்.

அவசரமாக தனது தேவையை நிறைவேற்றிக்கொண்ட அப்புக் குட்டிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது
.
(”சபா…….. இப்பதான் ஃப்ரெஸ்ஸா இருக்குஅப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்ட அப்புக்குட்டி பொலீஸ்காரரைப் பார்த்து.)

அப்புக்குட்டி: எவ்வளவு பெரிய மனசு சார் உங்களுக்கு. அமெரிக்கர்களின் பெருந்தன்மை என்பது இதுதானா?  சிறுநீர் கழிக்க ஒதுங்குவதற்க்கு கூட அழகாக கத்தரிக்கப்பட்ட புற்றரையும்.மலர்ச்செடிகளும் நிறைந்த இடமா…?  அமெரிக்கா அமெரிக்காதான் சார்…….

பொலீஸ் : ஹி ஹி அப்படியெல்லாம் எதுவுமில்லை.இது உங்கள் இலங்கை தூதரக வளவு

( சொல்லிட்டு அமெரிக்க பொலீஸ் அதிகாரி தனது வழியில் சென்றுவிட்டார்.)

அப்புக்குட்டி : ?????????


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Mohamed Faaique சொன்னது…

இதுல உள் குத்து, சைட் குத்து எதுவுமே இல்லையென நம்புறேன்....

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique

நோ நோ... அப்படி எதுவுமில்ல...

ஸ்ட்ரைட் குத்துதான்..