நாங்களும் க்ரேஜுவட்டாக்கும் என்ற பகுதியினூடக நான் என் பல்கலைக் கழக வாழ்க்கையில நடத்த சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்வது வழக்கம் அந்த வகையில் இன்னைக்கும் ஒரு சம்பவத்த பார்க்கலாம்…….. நிகழ்ச்சிய ஆரம்பிக்க முன்னர் ஒரு சிறிய அறிமுகம்
(அச்சச்சோ ரேடியோல பேசுற மாதிரியே வருதே….. சாரி)
(அச்சச்சோ ரேடியோல பேசுற மாதிரியே வருதே….. சாரி)
சிங்களத்தில அடு (adu) என்றொரு சொல் இருக்கு அத தமிழ்ல்ல சொன்னா குறைவு, கொஞ்சம் அப்படின்னு பொருள்படும்.
அதே நேரம் இத இன்னுமொரு இடத்தில வித்தியாசமா பாவிப்பாங்க அதாவது ஒரு கடையில சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அது போதாம விட்டா ”அடு பத்” கொடுங்கன்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சோறு மேலதிகமாக கொடுப்பாங்க…….
இதான் அறிமுகம் இனி மேட்டருக்கு போகலாம்..
பத் அடுவென் ஃபுல் ரைஸ்
Hero "X" missing |
நான் இருந்த ரூம்ல மொத்தம் 4 பேர் சில நேரம் 5 பேராகவும் மாறும். இதுல ஒவ்வொருத்தருக்கும் பல பல சுவாரஸ்யமான கதைகளிருக்கு. இன்றைய கதைக்கு கதாநாயகன் “X" இருக்காரே இவரைச் சுற்றி பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கு. எங்கள் பலகலைக் கழகத்தின் பல சர்ச்சைகளின் நாயகன் இவர்.
ஒரு நாள் நாங்க நண்பர்கள் எல்லாரும் வழமையா சாப்பிடும் ஹொட்டல்கு இரவு சாப்பாடிற்கு போனோம். அந்த ஹொட்டல்ல ப்ரைட் ரைஸ் ரெண்டு விதமாக் கிடைக்கும். ஒன்று நோர்மல் ஃப்ரைட் ரைஸ் அடுத்தது ஃபுல் ஃபிரைட் ரைஸ்.. (அந்த ஹொட்டல்ல இந்த ஃபுல், நோர்மல் சிஸ்டத்தை அறிமுகம் செய்த பெருமை எங்களையே சேரும்) ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னா ஃபுல்னு சொன்னா ரைஸ் அதிகமா இருக்கும். ரெண்டுபேர் சாப்பிடலாம் ஒப்பீட்டளவில் விலையும் குறைவு. வழமையாக நாங்க 4 பேர் போனால். 2 ஃபுல்ரைஸ் போட்டு 4 ப்லேட்ல சமனா(?) பிரிச்சு சாப்பிடுவோம்…(சாப்பிட 10நிமிசம் போகுமெண்டால் அதை சமனா பிரிக்க 30 நிமிசம் போகும்.)
அண்டைக்கு சாப்பிட போனமா போய் நாலு பேரும் போய் உட்கார்ந்தாச்சு. நான் போய் ரைஸ் மாஸ்டர்கிட்ட ”2 ஃபுல் ரைஸ் ப்லேட் 4க்கு தாங்க..... ரைஸ் கொஞ்சம் கூட போடுங்க” (இத சிங்களத்தில எப்படி சொல்லனுமோ அப்படி) சொல்லிட்டு வந்துட்டன். அங்க அவர் ரைஸ் போடுறார்.. நாங்க உற்கார்ந்து எங்கட வழமையான கதைகள் கலாய்ப்புகள்ள ஈடுபட்டுட்டு இருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம ஹீரோ "X" திடீர்ன எழும்பி மச்சான் இண்டைக்கு எனக்கு சரியான பசி அவன்கிட்ட போய் ரைஸ்ஸ கூட போட்டு கேக்கனும் இரு நான் சொல்லிட்டு வாறன் எண்டு எழுந்து போனான்.
இங்க என்ன விசயம்னா நம்ம ஹீரோ "X” க்கு வளவா சிங்களம் பேசத் தெரியாது….. சரி நம்ம ஹீரோ என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு அவரையே பார்த்துட்டு இருந்தோம்…
ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
(அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
பயபுள்ள இப்படி சொல்லிச்சு…. எங்களுக்கு சிரிப்பு ஸ்டார்ட்..
ரைஸ் மாஸ்டர் : ஃபுல் ரைஸ் த நோர்மல் ரைஸ்த?
(ஃபுல் ரைஸ்ஸா நோர்மல் ரைஸ்ஸா?)
ரைஸ் மாஸ்டர் : ஃபுல் ரைஸ் த நோர்மல் ரைஸ்த?
(ஃபுல் ரைஸ்ஸா நோர்மல் ரைஸ்ஸா?)
ஹீரோ "X": அய்யே ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட ரைஸ் அடுவென் தாண்ட….
(அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
(அண்ணா ஃபுல் ரைஸ் ரெண்டு; ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
ரைஸ் மாஸ்டர் : பத் அடுவென் தாலா ரைஸ் கன்னவானம் நோர்மல் ரைஸ் கண்டக்கோ
(சோறு குறைவா போட்டு ரைஸ் எடுக்குறதெண்டால் நோர்மல் ரைஸ் எடுங்களன் )
ஹீரோ "X": நே ஐய்யே ஃபுல் ரைஸ் தமை. பத் அடுவென் தாலா தெண்ட
(இல்ல அண்ணா ஃபுல் ரைஸ்தான் சோறு கொஞ்சமா போட்டு தாங்க)
எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியல…. ரைஸ் போடுறவன் ரைஸ் போடுறத அப்படியே நிறுத்திட்டான்…. இன்னும் கொஞ்சம் விட்டா அப்படியே ரைஸ் போடுற சட்டிய இவன் தலையிலையே கவுட்டுவிட்டுருவான்….
நான் அப்படியே சிரிச்சிக்கிட்டே..” டேய் மாப்பூ இங்க வாடா”ன்னு நம்ம ஹீரோ "X" ஐ கூப்பிட்டன்.
வந்தான்.
நான் :டேய் இப்போ உன் பிரச்சினை என்னடா?
நான் :டேய் இப்போ உன் பிரச்சினை என்னடா?
ஹீரோ "X": இல்லடா பசிக்குது சோற கூட போட்டு ரைஸ் போடுடான்னு சொன்னா அவன் நோர்மல் எடுக்க சொல்றாண்டா…
நான் : (சிரிச்சிக்கிட்டே..) அத நீ எப்படி சொன்ன?
ஹீரோ "X": ஃபுல் ரைஸ் தெகெய் ப்ளேட் ஹதரகட பத் அடுவென் தாண்ட….
( ஃபுல் ரைஸ் ரெண்டு ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
( ஃபுல் ரைஸ் ரெண்டு ப்ளேட் நாலுக்கு.. சோறு குறைவா போடுங்க)
நான் : டேய் சோறு அதிகமா வேணும்னு இங்க சொல்லிட்டு அங்க குறைவாப் போடுங்கன்னு சொல்லிருக்கியேடா… லூசா நீ…?
ஹீரோ "X": இல்லியேடா அடுதானே போட சொன்னன்……?
நான் : டேய் ராசா அடுவென் தாண்ட எண்டா கொஞ்சமா போடுங்கன்னுதான் அர்த்தம்
ஹீரோ "X": அப்போ நாம சாப்பிடும் போது சோறு போதாம விட்டா அடு பத் தெண்ட அப்படித்தானேடா கேக்குறது.. அப்படின்னா சோறு இன்னும் தாங்கன்னுதானேடா அர்த்தம்..அதத்தான் அவன்கிட்டையும் சொன்னன்.
நான் : (சபா இப்பவே கண்ணக் கட்டுதே..) டேய் அது… “பத் அடுய் தவ தென்ன” (சோறு போதாது இன்னும் தாங்க) எண்டதுட சோர்ட் ஃபோம்டா.
அதையும் இதையும் குழப்பிக்கிட்டு… போடாங்ங்ங்ங்….
ஹீரோ "X": அடப்பாவீ.... டேய் இது எனக்குத் தெரியாதேடா......
டேய் போடா போய் திரும்ப சரியா சொல்லிட்டு வாடா.. அவன் வேற.... சோற குறைச்சு போட்ருவான்... போடா போய் சொல்லுடா... ப்ளீஸ்...
(எங்களுக்கு ஒரே சிரிப்பு)
அவனுக்கு விளக்கம் குடுத்திட்டு திரும்ப போய் ரைஸ் ஓடர் பண்ணிட்டு வந்தன். அன்றைய நாள் வயிறு வலிக்க சிரித்ததிலே கழிந்தது.. அதுக்கு பிறகு நம்ம ஹீரோ "X" சாப்பாடு ஓடர் பண்றதே இல்ல.
அன்னைக்கு மட்டுமில அன்னாத்தைய இப்போ பார்த்தாலும் சொல்லி சொல்லி சிரிக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்னு.
………இன்னும் சொல்வேன்………………..
2 comments:
ஆஹா. ஒரே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது.
@NIZAMUDEEN
நன்றி... சகோ....
நீண்ட நாளைக்கு அப்புறமா இந்த பக்கம்
கருத்துரையிடுக