ஆண்டே புது ஆண்டே
பொதிசுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா..?
பரீட்சை இன்றி கல்வியை வெல்லும்
பாடத்திட்டம் தருவாயா?
புத்தாண்டே புத்தாண்டே
நோய்களெல்லாம் களைவாயா..?
அழுக்கில்லாத காற்றும் நீரும்
அகிலம் முழுதும் தருவாயா..?
பெற்றோலும் தீர்ந்துவிட்டால்
கார்காலம் தருவாயா..?
2010ம் ஆண்டைக் கடந்து 2011ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இத்தருணத்தில் 2010ம் ஆண்டு என் வாழ்வில் ஏற்படுத்திச்சென்ற சில அதிர்வுகளைத் திரும்பிப்பார்க்க ஆசைப்படுகின்றேன்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் பண்பலையில் ஒரு அறிவிப்பாளனாக எனது குரல் முதல் முறையாக ஒலித்த நாள்.
13/1/2010 புதன் கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரை தென்றலில் ஒலிபரப்பான “இதம் தரும் ரிதம்” நிகழ்ச்சியின் மூலமாகத்தான் எனது அறிமுகம் இடம்பெற்றது.
அன்று மாலை 3 - 6 மணிவரை இடம்பெற்ற இதம் தரும் ரிதம் நிகழ்ச்சிதான் என் முதலாவது நிகழ்ச்சி.
சிரேஸ்ட மூத்த அறிவிப்பாளரான கே.ஜெயகிருஷ்னா அண்ணா, சிரேஸ்ட அறிவிப்பாளர் ரஜினி அன்றூ அக்கா ஆகியோரோடு இணைந்து முதலாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிட்டியது.
தென்றலில் என் குரல் முதன் முதலில் ஒலித்த நேரம் : மாலை 3 மணி 41நிமிடம்
ரஜரட்டைப் பல்கலைக் கழகம் கால வரயறையின்றி மூடப்பட்டது. மாலை 4 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களும் வளாகத்தைவிட்டு வெளியேறவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது கறுப்பு சரித்திரம்,
முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலருக்கும் பிரதேசவாசிகள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. இதனால் கோபமுற்ற பிரதேச வாசிகள் பல்கலைக் கழகமாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். பிரச்சினையில் சம்பந்தப்படாத, ஏனைய பீட மாணவர்களும் பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இதனால் பிரச்சினை பூதகரமானது மட்டுமல்லாமல் பிரச்சினை மொத்த பல்கலைக் கழக மாணவர்களுக்கும் ஊரவர்களுக்கும் என்று மாற்றம் பெற்றது.
மாணவர்களை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பிரகாரம் மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழக பஸ் வண்டிகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு பொலீசார் மற்றும் இலங்கை இராணுவத்தின் கஜபா படையினரின்(மோட்டார் வண்டிப் படையணியினரின்) விசேட பாதுகாப்போடு ஊர்மக்களின் கூக்குரல் மற்றும் எதிர்ப்புகளையும் கடந்து அநுராதபுரம் பிரதான பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டனர்.(ஏறத்தாழ ஒன்றரை மாதத்தின் பின்னர் மீண்டும் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றலின் அன்றைய நாள் நிகழ்சிகளை ஆரம்பிக்கும் பொறுப்பு முதன் முதலாக எனக்கு வழங்கப்பட்டது.
அதிகாலை 5 மணிமுதல் 9 மணிவரை தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.
நாட்டின் அரச வானொலியின் அன்றைய நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தவன் என்ற மகிழ்ச்சி மிகுந்த உட்சாகத்தைத் தந்தது.
என் சகோதரர் Dr.A.I.Ahamed Ziyad
திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.
இத்திருமணம் எங்கள் இல்லத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
(இதன் மூலமாக என் ரூட்டும் கொஞ்சம் க்ளியராச்சு லிஸ்டுல்ல அடுத்தது நாமதான்)
இது தவிர எனது சொந்த உழைப்பில் எனக்கு ரொம்பப் பிடிச்ச Hand Phone மற்றும் Dongle என்பனவற்றை என்னால் வாங்க முடிந்தது.
இந்த ஆண்டில் எனக்கு மிகச்சிறந்த நற்புகள் ஃபேஸ்புக் மூலமாகக் கிடைத்தன. அதில் அற்புதமான நண்பி ஒருத்தர் இந்த ஆண்டில் ஃபேஸ்புக் மூலமாகக் கிடைத்தது எனக்கு மிகப்பெரும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஃபேஸ்புக் தந்த அழகிய நற்பு அது.
இவைதான் கடந்த ஆண்டில் என் வாழ்வில் இடம்பெற்ற நான் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடையங்கள்.
இவை தவிர க்டந்த வருடத்தில் சில குப்பைகளும் இருக்கின்றன.
என் நண்பனாக இருந்தவன் எனக்கு துரோகியாக மாறியதும், கூட இருந்து குழிபறித்ததும் இந்த ஆண்டில்தான்.
சம்பந்தமே இல்லாமல் இருவர் என்வாழ்வில் ஏககாலத்தில் வந்து என்னில் சீசோ ஆடியது இந்த ஆண்டில்தான். அவர்கள் சந்தோசத்திற்காக என் வாழ்க்கையில் விழையாடிய துரோகச் செயல் இடம்பெற்ற ஆண்டும் இதுதான். என் வாழ்வில் நான் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறு அவர்களிருவருக்கும் இடம் கொடுத்தது.
ஆனாலும் அந்த தவறு தொடர்ந்தும் நீடிக்கவில்லை. நான் விளங்கிக்கொண்டேன் விலகிக் கொண்டேன்.
இப்படி ஒரு சில குப்பைகளைத் தவிர்த்து 2010ம் ஆண்டு ஓரளவு மகிழ்வாகவே இருந்தது.
மலரும் 2011ம் வருடம் எப்படி அமையப் போகின்றது என்ற ஆர்வம் எதிர்பார்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
இந்த ஆண்டில் எனக்கு கிடைக்க இருக்கும் மிகப் பெரிய சந்தோசம் என் பல்கலைக் கழகப் படிப்பு நிறைவு பெறப்போகின்றது என்பதுதான். இது தவிர வேறென்ன மகிழ்ச்சிகள் எனக்குக் கிடைக்க இருக்கிறதோ? என்ற ஆவலில் காத்திருக்கின்றேன்.
போரே இல்லாத பொன்னுலகம்
நீ கொண்டுவா
சலிப்பாகாமல் மனம் பார்கின்ற
அந்த காதல் நீ கொண்டுவா
பூகம்பே இல்லாத பூமியை நீ கொண்டுவா
புத்தம் புது ஆண்டே
தேன் பூக்கும் புது ஆண்டே
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
போர்களம் உழுதுவிடு
அங்கே பூச்செடி நட்டுவிடு
அனுகுண்டு அத்தனையும்
பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும் வரை
மண்ணில் மனிதனை வாழவிடு
நிலவுக்கு போய் வரவே எங்கள்
எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
உணர்ச்சிக்கு வலிமை கொடு
வருக 2011 வருக 2011
வருக வருகவே
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Happy New Year
