RSS

றோஸ் போல் - ஒரே காமெடியாப் போச்சுது..



நேற்று இலங்கை இங்கிலாந்து Test போட்டி நடக்கும் போது commentators அடிக்கடி சொன்ன விசயம்றோஸ் போல் Test.


றோஸ் போல் Test மெச்ல டில்ஸான் விளையாட மாட்டார், அவருக்கு பதிலா  யாரு விளையாடுவார்?
றோஸ் போல் Test மெச்ல இலங்கை அணிக்கு யாரு தலைமை தாங்குவார்…? றோஸ்போல் Test மெச்லஅண்டர்சன் வந்தா யாரு வெளிய போவார் அப்படின்னு  அடிக்கடி றோஸ் போல் றோஸ் போல்னே பேசிட்டு இருந்தாங்க.

  
சரி அடுத்த மெச்ல ரெட் போலுக்கு பதிலா றோஸ் போல் பயன்படுத்தி விளையாடப்போராங்க போல. ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை Test  போட்டிகளின் சுவாரஸ்யத்தக் கூட்டுறதுக்கு டெஸ்ட் போட்டிகள இரவு பகல் ஆட்டமா நடாத்தப்போறம் அதுல சிவப்பு பந்துக்குப் பதிலா றோஸ் பந்து பயன்படுத்தப்படும் அப்படின்னெல்லாம் அறிக்கை விட்டுட்டு இருந்திச்சாஒருவேள அப்படி ஒரு மெச்சாத்தான் இது இருக்குமோன்னு நினச்சு.

 இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வு சம்பந்தமான தகவல்கள சட்டுபுட்டுன்னு  திரட்டி நம்ம ப்லொக்ல ஒரு பதிவா போட்டுடலாமேன்னு கூகுள் அங்கிள்கிட்ட ஒரு சேர்ச்ச போட்டா...

அது றோஸ் போல் Rose Ball  இல்ல Rose Bowl அதாவது 3வது டெஸ்ட் நடக்கப்போற கிரவ்ன்டோட பெயராம் அது... அவ்வ்வ்வ்வ்


ஒரே காமெடியாப் போச்சுது…..

ஆனாலும் ஒன்னுங்க சல்லடை போட்டு தேடினதுல சில விசங்கள தெரிந்துகொள்ள முடிஞ்சதுங்கோ..

1.2001
ம் ஆண்டு முதல் பாவனையிலுள்ள இந்த மைதானத்துல முதலாவது ஒரு நாள் போட்டி 2003ம் ஆண்டுதானுங்க நடந்திருக்கு.

2.Rose Bowl  மைதானத்துல இதுவரை Test  போட்டிகள் நடந்ததே இல்லீங்க.

3.ஜூன் 16ம் திகதி இலங்கை -இங்கிலாந்து அணிகள் மோதும் Test  போட்டிதானுங்க இந்த மைதானத்துல நடக்கப்போற கன்னி Test  போட்டியாமுங்க...

நீங்களும் பாத்துக்கோங்க:
1. 
http://en.wikipedia.org/wiki/Rose_Bowl_(cricket_ground)


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

7 comments:

மதுரை சரவணன் சொன்னது…

ரசித்தேன்... வாழ்த்துக்கள்

aiasuhail.blogspot.com சொன்னது…

@மதுரை சரவணன்
நன்றி ஐய்யா.

Ashwin-WIN சொன்னது…

//சுவாரஸ்யத்தக் கூட்டுறதுக்கு டெஸ்ட் போட்டிகள இரவு பகல் ஆட்டமா நடாத்தப்போறம் அதுல சிவப்பு பந்துக்குப் பதிலா றோஸ் பந்து பயன்படுத்தப்படும் அப்படின்னெல்லாம் அறிக்கை விட்டுட்டு இருந்திச்சா…ஒருவேள அப்படி ஒரு மெச்சாத்தான் இது இருக்குமோன்னு நினச்சு.//
ஹ ஹா ... நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து ஜமாய்ங்க..

aiasuhail.blogspot.com சொன்னது…

@Ashwin-WIN
ரொம்ப ஏமாந்துட்டன்....
அவ்வ்வ்வ்


நன்றி சகோ.

ARV Loshan சொன்னது…

ரசித்தேன் :)
ரோஸ் போலிலாவது இலங்கைக்கு ராசி வருமா பார்ப்போம்

A.R.V.லோஷன்

ARV Loshan சொன்னது…

ரசித்தேன் :)
ரோஸ் போலிலாவது இலங்கைக்கு ராசி வருமா பார்ப்போம்

A.R.V.லோஷன்

aiasuhail.blogspot.com சொன்னது…

@LOSHAN
ஹா ஹா ராசி கிட்டும் என நான் நம்புகின்றேன்.

ஆனா ஒரு கவலை..
டில்சான் இல்லாம இலங்க அணி வெற்றிபெற்றால் ஒரு வேளை டில்ஸான் ராசி இல்லாத்த தலைவராக பச்சை குத்தப்படுவாரோ...?
பார்க்கலாம்.

நன்றி அண்ணா.