இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்கும்
முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிசாம், சம்மாந்துறை வலயக்
கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்
பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாலை 3 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டத்தை அறிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டபோது பொலீசார் தடுத்ததால் கட்டிடத்தை சுற்றிவழைத்தனர்.
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டம் |
முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மக்களில் இன்னொரு தொகுதி |
சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் வெளியேற முடியாவண்ணம்
சுற்றி வழைத்து முற்றுகையிட்டனர். நிலைமயினைக் கட்டுப்படுத்த மேலதிக பொலீசார் வரவழைக்கப்பட்டபோதும் மக்கள் தமது முற்றுகையைத் தளர்த்தவில்லை.
ஆசிரியர் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய வேண்டும், வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும்
ஆகிய கோரிக்கைகளுக்கு உறுதியான முடிவு கிடைக்கும் வரை அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய மக்கள்
அதில் விடாப்பிடியாக நின்றனர்.
இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் மக்கள் முன்னிலையில் கொண்டுவரப்படுகையில் |
இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் எல்லோர் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்படுகையில் |
இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எழுதி கையொப்பமிட்ட கடிதம் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் மக்கள் முன்னிலையில் வாசிக்கப்படுகையில் |
இறுதியாக இரவு 9 மணியளவில் மாகாண கல்விப் பணிப்பாளர் தனக்குள்ள அதிகாரத்தின்படி ஆசிரிய இடமாற்றத்தினை
தற்காலிகமாக ரத்துச் செய்வதாக வெள்ளைத் தாளில் எழுதி ஒப்பமிட்டார். இந்த கடிதம் பொலிஸ் உயர் அதிகாரி (ஏ.எஸ்.பி என நினைக்கின்றேன்)
முன்னிலையில் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் கைய்யொப்பமிடப்பட்டு பின்னர் இது மக்கள் முன்னிலையில் சம்மாந்துறைப்
பொலிஸ் பொறுப்பதிகாரியினால் வாசித்துக்காட்டப்பட்டது.
ஓரளவு திருப்தியடைந்தாலும் தற்காலிகமாக என்பதை மாற்றி நிரந்தரமாக என்று உறுதியளிக்குமாறு மீண்டும் கோசமிட்டனர்.
மீண்டும் சிக்கல் நிலை தோன்றியது.இருந்தும் தனக்குள்ள அதிகாரத்தின்படி தற்காலிகமாகத்தான் இடை நிறுத்தமுடியும் என்று கூறிய
மாகாணப் பணிப்பாளர் இது தொடர்பில் விசேட கவனம் எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
முற்றுகை வெற்றிகரமாக முடிந்ததையிட்டு மகிழ்வுடன் திரும்பிச் செல்லும் ஊர் மக்கள் |
இதன் பின்னர் மக்கள் ஓரளவு அமைதியடைந்தனர்.அத்தோடு இரவு 10 மணியளவில் பொலீசாரின் விசேட பாதுகாப்போடு
மக்களின் கூக்குரலுக்கு மத்தியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கட்டடத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் 10.15 அளவில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் மன்சூர் அவர்கள் மக்களின் கூச்சலுடன் கூடிய உணர்ச்சி
அலைகளுக்கு மத்தியில் பொலீசாரின் தீவிர பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் செல்லும் போது வாடிய அச்சம் கலந்த
முகத்துடன் சென்றதைக் காண முடிந்தது. பலரது அபிமானம் வென்ற முன்னாள் உயிரியல் பாட ஆசிரியரான இந்நாள் சம்மாந்துறை
வலயக் கல்விப் பணிப்பாளரின் இன்றைய நிலையை நினைக்கையில் மனதுக்கு மிகவும் கவலை தந்தது.
சம்மாதுறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் பொலிஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்படுகையில் |
2 comments:
கொலைகார பசங்க...
என்ன தலைப்பு வக்கிரது’னு விவஸ்தையே இல்லையா???
@Mohamed Faaique
ஹா ஹா என்ன பாஸ் கடுப்பாகிட்டீங்க போல...?
இந்த தலைப்ப பாத்துட்டு முதல் ஆளா நீங்கதான் ஓடி வருவீங்கன்னு நினைச்சன்
கரெக்டா வந்துட்டேள்..
யூ ஆர் நோர்ட்டி.............
கருத்துரையிடுக