RSS

சந்திமால் அடி தூள் - டில்சான் ப்ளீஸ் Cool.

இன்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி என்னமோ சாதாரண போட்டிதான்... ஆனால் அதில் தினேஸ் சந்திமால் என்னும் 21 வயது இளம் வீரர் கிரிக்கட்டின் தாயகமான லோர்ட்ஸில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் பெற்றதையும்... சந்திமால் சதமடிக்க ஏஞ்சலோ மெத்யூஸ் எடுத்துக்கொண்ட விசப்பரீட்சையையும் நினைக்கும் போது உடம்பு புல்லரிக்குது.


சந்திமால் 87 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இலங்கை அணிக்கு வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவை 7 ஓவர்களில். 25 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில் இருக்கும் போது சந்திமாலுக்கு சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை.மறுமுனையில் மெத்யூஸ்.  


தனது சக வீரர் 21 வயதேயுடைய சந்திமால் கிரிக்கட்டின் தாயகம் லோர்ட்ஸில் சதம்பெறவேண்டும் என்ற வரலாற்றுப் பதிவுக்காக  தலைவர் டில்சான் மற்றும் சக வீரர்களின் அதிர்ப்தியையும் தாண்டி மெத்யூஸ் சந்திமாலுக்கு சதமடிக வாய்ப்புக் கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதற்காக மெத்யூஸ் தான் எதிர்கொண்ட பந்துகளையெல்லாம் தட்டித் தட்டி ஓட்டமெடுக்காமல் மறுமுணையில் இருந்த சந்திமாலுக்கு புதிய ஓவரினை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பைப் வழங்கினார்.இதன் பிரதிபலன் மெத்யூஸ் தான் எதிர்கொண்ட 21 பந்துகளி பெற்ற ஓட்டம் 1 மாத்திரமே.

இதன் காரணமாக இலகுவாக வெல்லவேண்டிய போட்டி இறுக்கமாகிவிடுமோ என்ற அச்சம் அரங்கத்திருந்த வீரர்களின் முகத்தில் தெரிந்தது. தலைவர் டில்சான் ஆத்திரமடைந்து 12வது வீரர் மூலமாக செய்தியும் அனுப்பிப் பார்த்தார்.


ஒரு கட்டத்தில் சந்திமாலே தனக்கு சதம் தேவையில்லை அணியின் வெற்றியே முக்கியம் என்று முடிவெடுத்து ஓட்டம் பெற முனைந்தபோதும் மெத்யூஸ் வலுக்கட்டாயமாக சந்திமாலை திருப்பயனுப்பியதோட சந்திமாலுக்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சதமடிக்க உதவினார்.


அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவை சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சந்திமால் அற்புதமான ஆறு ஓட்டமொன்றை விளாசி தனது அபார சதத்தைப் பெற்றுக்கொண்டபோது. பார்வையாளர் அரங்கம் நிறைந்த கரகோசம். இலங்கை அணியினரும் எழுந்து நின்று கரகோசம் செய்தபோதும் டில்சானின் முகத்தில் கோபம் கலந்திருந்தது.  ஆனால் முன்னதாக உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இதே இங்கிலாந்து அணிக்கெதிராக காலிறுதிப் போட்டியில் உபுல் தரங்க சதமடிக்க டில்சான் வாய்ப்பு வழங்கியமையும் நினைவு கூரத்தக்கது. ஆனாலும் அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று மிகவும் இலகுவான வெற்றி, 10 ஓவர்களும் 10 விக்கட்டுக்களும் கைவசம் இருந்த நிலையில் டில்சான் தரங்கவுக்கு வாய்ய்ப்பு வழங்கினார். ஆனால் இன்று கொஞ்சம் இறுக்கமான நிலை. 3 ஓவர்கள் மாத்திரம் உள்ள நிலையில் நியம துடுப்பாட்ட வீரர்களின் கடைசி ஜோடி ஆடிக்கொண்டிருந்தமையால் சற்று இறுக்கமான நிலை. அதுதான் டில்சான் உட்பட ஏனைய வீரர்களுக்கு சற்று அதிருப்தியை உண்டாக்கியது.


எப்படியோ இளம் வீரர் சந்திமால் லோர்ட்சில் இன்று பெற்றுக்கொண்ட 105* (11x4, 2x6)உடன் மொத்தமாக தான் விழையாடிய 6 போட்டிகளின் 2 சதங்களை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரு சதங்களும் வெளி நாட்டு மண்ணில் இரு பெரிய அணிகளுக்கெதிராக பெறப்பட்டமை மற்றுமொரு விசேட அம்சம்.


சந்திமாலுக்கான பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. இன்றைய சதமானது அடுத்து வரும் தொடர்களுக்கும் சந்திமால் தெரிவு செய்யப்படக் காரணமாக இருக்குமென நம்பலாம்.


நீண்ட கால அடிப்படையில் மஹெல ஜயவர்த்தனவின் இடத்தினை ஈடு செய்யப்போகும் வீரராகவே சந்திமாலை நான் ஆரம்பம் முதல் அவதானித்து வருகிறேன். மஹெலவிடம் காணப்படும் அதிரடி கலந்த நிதான ஆட்டம் சந்திமாலிடமும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

எது எப்படியோ மெத்யூஸின் இன்றைய இந்த செயற்பாட்டை வர்ணனையாளர்களும் விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. அணியின் வெற்றிக்கு பாதகம் வரலாம் என்ற நிலையில் மெத்யூஸ் இப்படி ரிஸ்க் எடுத்தமை தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தனர். தனிப்பட்ட வீரரின் சதத்தை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் இளம் வீரர்களின் அனுபவமற்ற தன்மையின் வெளிப்பாடே இது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.என்றாலும் கூட இன்றை போட்டி இலங்கை அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான போட்டியாக முடிவுற்றமை திருப்தியே.


இன்றிரவு சந்திமால் மற்றும் மெத்யூசுக்கு சிரேஸ்ட்ட வீரர்களின் அறிவுரை கட்டாயம் கிடைக்கும் என நம்பலாம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

6 comments:

Bavan சொன்னது…

நேற்று சந்திமாலை விட மத்தியூசைப் பார்த்து வியந்தேன். டில்சான் முதல் பீட்டர்சன் வரை அனைவருமே குழம்பிக் கொண்டிருந்தார்கள், அவ்வளவு எதிர்ப்புக்களையும் தாண்டி சந்திமாலுக்கு வாய்ப்பு வழங்கியது சிறப்பு..:-))

அடுத்த இலங்கை அணியின் சிறந்த Cool அணித்தலைவர் யார் என்றும் நேற்று நாம் கண்டுகொண்டோம். #மத்தியூஸ்

Ahamed Suhail சொன்னது…

@Bavan
நிச்சயமாக சகோ...

ஒரு கட்டத்தில் சகவீரர்கள் அதிருப்தியடைவதைக் கண்ட சந்திமாலே சதம் வேண்டாம் ஓட்டத்தைப் பெற்று போட்டியை விரைவாக முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து மெத்யூசுக்காக ஓட்டம் பெற முயற்சித்தபோதும்... மெத்யூசின் செய்கை வியப்பாக இருந்தது.

இளம் வீரரகளின் இவ்வாறான துணிச்சல், ஒற்றுமை, திறமை எல்லாவற்றையும் பார்க்கும் போது இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கிறது.

(ஆனால் உபதலைவர் கண்டம்பி அணிக்குள் என்ன செய்கிறார் என்றுதான் புரியவே மாட்டேங்குது..)

நன்றி சகோ.

நிகழ்வுகள் சொன்னது…

///(ஆனால் உபதலைவர் கண்டம்பி அணிக்குள் என்ன செய்கிறார் என்றுதான் புரியவே மாட்டேங்குது..)// எனக்கும் அதே குழப்பம் தான் ..எதிர்காலத்தில் மகேல ,சங்காவின் இடத்தை நிரப்ப இன்னும் இரண்டு சந்டிமல்கள் தேவை , கண்டம்பி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர் ..)

Anuthinan S சொன்னது…

ஒரு வேலை மத்யூஸ் அடுத்த அணி தலைவராக வரும் பொது நெருக்கடிகளுக்கு எப்படி முகம் கொடுப்பது என்று பயற்சி எடுத்து இருப்பாரோ என்னவோ????

Ahamed Suhail சொன்னது…

@நிகழ்வுகள்
கண்டம்பியைப் பொறுத்தவரை அவருக்கு அணியில் வாய்ப்புக் கொடுத்து உபதலைவர் பதவியும் கொடுத்திருப்பதானது

குப்பையை பூசி மெழுகி கோபுரத்தில் வைத்தது போல் இருக்கிறது...

2 போட்டிகளிலும் கண்டம்பிக்கு வேலை இருக்கவில்லை என்பதால் தப்பித்துவிட்டார்...

இனியும் இப்படித் தப்பிக்க முடியாது.

நன்றி உங்கள் வருகைக்கு

Ahamed Suhail சொன்னது…

@Anuthinan S

அதற்கான முஸ்தீபுகள்தான் இதுவோ...?


நன்றி சகோ