கிரிக்கட் தொடர்பான தகவல்களை ஆர்வத்துடன் தேடி பதிவிடும் எனக்கு குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையானது எனது வலைப்பூவில் இல்லாதது ஏதோ மாதிரி இருந்தது. எப்படியாவது சங்கக்காரவின் உரையை தமிழில் வெளியிடவேண்டும் என அவ்வுரையின் ஆங்கில உரையை தேடி எடுத்தால் அது மிக நீண்டதாகவும் தமிழ்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதாகவும் இருந்தது.
இதனால் அதனைக் கைவிட்டுவிட்டு தமிழில் எங்காவது கிடைக்குமா எனத் தேடிய போதுதான் வீரகேசரிப் பத்திரிகையில் அது வெளிவந்தது. அதுவும் கூட பத்திரிகையின் ஒரு முழுப்பக்கத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.
அத்தமிழாக்கம் கூட வரிக்கு வரி மொழிமாற்றம் செய்யப்படாமல் சங்காவின் உரையின் முக்கிய விடையங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்தது.
அதை தட்டச்சு செய்து பதிவிடலாம் என முயற்சித்த போதுகூட மிகவும் கடினமாக இருந்ததோடு அதிக நேரமும் தேவைப்பட்டது இதனால் சோம்பல் மிகையானதால் அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டு மாற்று வழியை யோசித்தபோதுதான் அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிடும் எண்ணம் தோன்றியது. அதன் பிரதிபலந்தான் இது.
இதனை ஒலிப்பதிவு செய்வதற்கு அமைதியான, தனியான சூழலை தேடியலைந்ததில் சில நாட்கள், ஒலிச்சேர்க்கை,ஒளிச் சேர்க்கை செய்ய சில நாட்கள் அதனை youtube இல் பதிவேற்ற சில நாட்கள் என பல நாட்களைக் கொள்ளையடித்த பின்னர்தான் இப்படி ஒரு பதிவை என்னால் இட முடிந்தது.
கொஞ்சம் காலம் கடந்த பதிவு என்றாலும் ஆர்வமாக இடும் பதிவு இது.
குறிப்பு :
இது வரிக்கு வரி மொழிமாற்றமல்ல, சங்காவின் உரையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தமிழாக்கமாகும்.
சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 1
சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 2
சங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 3
சங்காவின் உரையின் தமிழாக்கத்தினை MP3யாக கேட்க/பதிவிறக்க.
குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க MCC உரையின் தமிழாக்கம் எனது குரலில்
Post Comment
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 comments:
நண்பா உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்லதொரு முயற்சி. ஆனால் நீங்கள் இதைப் பார்க்கவில்லைப் போல.
அழகான தமிழ் மொழிபெயர்ப்புடன் மிகச் சிறப்பாக வெற்றியில் செய்திருந்தார்கள்.
இதையே பகிர்ந்திருக்கலாமே.
http://www.vettri.lk/index.php?mainmnu=FM&page=morenews&nid=cm9vdDIyOA==
http://loshan-loshan.blogspot.com/2011/07/vs.html
Mohamed Salman
நண்றி நண்பா......
உண்மையில் நான் இதை தயாரித்து திரட்டியில் இணைக்கும் போதுதான் அறிந்துகொண்டேன்.
வெற்றியில் லோசன் அண்ணாவின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை நானும் கேட்டேன்.
அது வரிக்கு வரி மொழிபெயர்ப்பாக இருந்தது. சிறப்பாகவும் இருந்தது.
என்றாலும் எனது முயற்சியில் உருவானதை என் நண்பர்களோட பகிர்ந்துகொள்ளவே இதனை பதிவிட்டேன்.
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
miga arumayaana muyatchi vaalthukkall ....
@கிருஷ்ணா
nandry krish,
nandry ungal vazhthukkum varukaikkum.
கருத்துரையிடுக