அறிமுகம்
பல்கலைக் கழக வாழ்க்கை சிலருக்கு கனவு சிலருக்கு வெறுப்பு. ஆனாலும் அந்த வாழ்க்கை பல்கலைக் கழகம் சென்ற பலருக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். பலருக்கு வாழ்க்கைத் துணை கூட கொடுத்திருக்கும்.
எனக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தவேளை நான் பல்கலைக் கழகம் போவதில் ஆர்வம் காட்டவே இல்லை. என் இலக்கை அடைய நான் போதியளவு முயற்சிக்கவில்லை ஆனாலும் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளவும் நான் தயாரில்லை. எனவே பல்கலைக் கழகம் சென்று 3 அல்லது 4 வருடங்களைக் கடத்த எனக்கு விருப்பமில்லை. வேறு ஏதாவது பாடநெறிகளை முடித்துவிட்டு வேலைக்குப் போகனும் என்பதில் நான் குறியாய் இருந்தேன்.
ஆனாலும் எங்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்னை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார்கள் படிப்பித்த ஆசிரியர்கள் சொந்தங்கள் என்று யார் யாரெல்லாம் வந்து என்னை எப்படி எப்படி எல்லாம் மூளைச் சலவை(Brain wash) செய்தார்கள். நான் மசியவே இல்லை.
ஒரு நால் என் பெற்றோர் என்னை தனியாக கூப்பிட்டு அருகில் உற்கார வைத்து “ உன் முடிவுல மாற்றமிருக்கா” என்று கேட்டாங்க இல்லை என்றேன்.
”உன்னை வேற கோர்ஸ் செய்ய வேணாமுன்னு சொல்லல. அதையும் செய் ஆனா அதுக்கு முதல்ல கெம்பஸ்ஸ முடி. கெம்பஸ் முடிக்காம நீ எந்த கோர்ஸ் செய்தாலும் உனக்கு இருக்கப்போற Academic qualification வந்தும் AL பாஸ் மட்டும்தான். ஆனா நீ கெம்பஸ் முடிச்சால் ஒரு க்ரேஜுவட் எண்ட தகுதி இருக்கும். ப்ரொமோசன் கிடைக்கும் போது கை கொடுக்கும்” என்றெல்லாம் சொன்னாங்க. நான் அமைதியாகவே இருந்தேன்.

கடைசியாக சொன்னாங்க பாருங்க… அதாங்க என் முடிவ ஒரு கணத்தில மாத்திடுச்சு.
“சரி அதையெல்லாம் விடு. உன்னை இவளவு கஸ்ட்டப்பட்டு படிப்பிச்சத்துக்கு நீ எங்களுக்கு கொடுக்கப் போற சந்தோசம் இதுதானா..? எங்க பிள்ளையும் ஒரு பட்டதாரி என்று நாங்களும் பெருமையா சொல்ல, நாங்களும் சந்தோசப்பட உனக்கு விருப்பமில்லைத்தானே…
உனக்காக கஸ்ட்டப்பட்ட எங்களுக்கு இப்படி ஒரு சந்தோசத்த கொடுக்க உனக்கு இஸ்ட்டமில்லன்னா இதுக்கு மேலையும் நாங்க இதப்பத்தி கதைக்கல உன் இஸ்ட்டப்படி செய்”
அவ்வளவுதான் அடுத்த நாள் நான் கெம்பஸ்ல இருந்தன்.
உனக்காக கஸ்ட்டப்பட்ட எங்களுக்கு இப்படி ஒரு சந்தோசத்த கொடுக்க உனக்கு இஸ்ட்டமில்லன்னா இதுக்கு மேலையும் நாங்க இதப்பத்தி கதைக்கல உன் இஸ்ட்டப்படி செய்”
அவ்வளவுதான் அடுத்த நாள் நான் கெம்பஸ்ல இருந்தன்.
இப்படி பெற்றோருக்காகத்தான் நான் கெம்பஸ் போனன் என்றதாலோ என்னவோ…ஆரம்பத்துல இருந்தே எனக்கு கெம்பஸ் வாழ்க்கை பிடிக்கவே இல்லை. காலப்போக்கில் மனநிலையில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டாலும் அது எனக்கு ஒரு சுமையாகவே இருந்தது. எனக்கு நானே தனிமையை தேடிக் கொண்டேன்.
அடிக்கடி சோர்ந்து போவேன். அப்போதெல்லாம் நான் மனதில் எண்ணிக்கொள்வது “என் பெற்றோரின் சந்தோசத்திற்காக அவர்களின் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கன்” என்பதைத்தான். அந்த எண்ணம்தான் என் பல்கலைக் கழக வாழ்க்கையை தொடருவதற்கு எனக்கிருந்த ஒரே பலம்.
இன்று நான் என் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்ட பெருமிதத்தில் இருக்கின்றேன்.
இப்படிப்பட்ட பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் அனுபவிச்ச, சந்திச்ச சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
”நாங்களும் க்ரேஜுவேட்டாக்கும்” என்ற இந்தப் பதிவு மூலம் தொடர்ச்சியாக எனது பல்கலைக் கழக வாழ்க்கையின் சுவாரஸ்யமான விடையங்களை பகிர்ந்துகொள்வேன்.
பல்கலைக் கழக ராகிங்ல இருந்து ஆரம்பிப்போம்…
எனது பல்கலைக் கழகத்தில் ராகிங் சற்று வித்தியாசம்.சனி ஞாயிறு தவிர்ந்து மொத்தம் 23 நாட்கள் ராகிங் நடக்கும். ராகிங் பண்ணுவதெற்கென்று 8 பேர் கொண்ட ராகிங் குழுவினர் இருப்பாங்க.. அவங்க தவிர வேறு யாரும் ராகிங் பண்ணமாட்டாங்க.ராகிங்கின் கடைசி வாரத்தில்தான் மற்ற எல்லோரும் ராகிங் பண்ண வாய்ப்புக் கிடைக்கும். மற்ற நாட்களில் இந்த 8 பேரும் ராகிங் பண்ணும் போது அவங்கள பாதுகாக்கவும், ராகிங்கைப் பார்க்கவும் எல்லா சீனியரும் வந்து இருப்பாங்க. ராகிங் நடக்கும் ஆனால் ஒரு சீனியரின் விரல் நுனி கூட எங்கள் மேல் படாது.. அதுதான் அங்கே சிறப்பு.
பல்கலைக் கழக கெண்டீனில் புதியமாணவர்கள் எல்லோரையும் வைத்துதான் பொது ராகிங் (common ragging) தான் நடக்கும்.கெண்டீனில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் நாங்களிருப்போம் ராகிங்கும் நடக்கும்.
இப்படி எங்களுக்கு ராகிங் நடக்கும் முதல் வாரம். எல்லோருக்கும் ஒரு பெயர் வைப்பார்கள். அந்தப் பெயர் படு கன்றாவியா இருக்கும். அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுப்பதே பெண் சீனியர்கள்தான். அந்தப் பெயரை ”கார்ட்” என சொல்வார்கள்.
அன்று காலையில் முதல் 10 மாணவர்களுக்கு கார்ட் வைத்தார்கள். அன்று மாலை நாங்கள் எல்லோரும் கெண்டீனில் இருக்கிறோம் ஒரு சீனியர் வந்தான். ஒருத்தனை கை நீட்டி எழும்புடா என்றான். அவன் மரியாதையாக எழும்பி நின்னான்.
“உன் கார்ட் என்ன” சீனியர் கேட்டான். இவன் மறந்து போய் ஏதோ ஞாபகத்துல “கொமெர்சல் பேங் கார்ட் “ என்று சொன்னானே பார்க்கலாம். சீனியருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“உன் கார்ட் என்ன” சீனியர் கேட்டான். இவன் மறந்து போய் ஏதோ ஞாபகத்துல “கொமெர்சல் பேங் கார்ட் “ என்று சொன்னானே பார்க்கலாம். சீனியருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒரு மாதிரியாக சிரிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு. அவனை பச்சை பச்சையாகத் திட்டினான்.
அடுத்த சீனியர் வந்து. எங்க எல்லாரையும் எழும்ப சொன்னான். எழும்பினோம்.
உங்களுக்கு சிரிப்பு என்னடா…. எல்லாரும் முட்டி போட்டு நில்லுங்கடான்னு சொல்லி முட்டுக் கால்லா நிக்க வெச்சிட்டு போயிட்டான் அந்தப் படுபாவி.
கார்ட பிழைய சொன்னதுக்கு அந்த நண்பனுக்கு குடுத்த தண்டனை என்ன தெரியுமா தவழ்ந்து தவழ்ந்து ஒவ்வொருத்தர்கிட்டையும் போய்
“என்னுடைய உண்மையான கார்ட் இது…. நான் பிழையா கொமெர்சல் பேங் கார்ட சொல்லிட்டன்” என்று எங்க எல்லார்கிட்டையும் சொல்லனும். அவனும் சொன்னான்.
“என்னுடைய உண்மையான கார்ட் இது…. நான் பிழையா கொமெர்சல் பேங் கார்ட சொல்லிட்டன்” என்று எங்க எல்லார்கிட்டையும் சொல்லனும். அவனும் சொன்னான்.
இன்னும் சொல்வேன்
4 comments:
அந்த நன்பரோட பேரு Ahmed Suhail'ஆ???
(டவுட்டு)
உங்க கார்டு எந்த பேங்கு’னு சொல்லவே இல்ல...
@Mohamed Faaique
ஹா ஹா செலான் பேங்...
வை பாஸ் வை திஸ் கொலவெறி..?
why this கொலைவெறி ?
இன்று ..
பல்சுவை வலைதளம் விருது
@"என் ராஜபாட்டை"- ராஜா
haa haa
கருத்துரையிடுக