RSS

என்னை மிகவும் பாதித்த குட்டிக் கதை



ஒரு மனிதன் தனது வேலை முடிந்து தாமதமாகவும் மிகுந்த களைப்பு,எரிச்சலுடன் வீடு வந்த போது தனது 5 வயது மகன் வாசலில் தனக்காக காத்திருப்பதைக் கண்டான். இருந்தும் அவன் அதைப் பொருற்படுத்தாமல் உள்ளே வந்து கதிரையில் அமர்ந்த போது.
 மகன் தந்தையைப் பார்த்து.

மகன் : அப்பா நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா..?

தந்தை : கேளு என்ன விசயம்..?
மகன் : அப்பா நீங்க ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு பணம் சம்பாதிப்பீங்க..?

தந்தை : இது உனக்கு தேவையில்லாத விசயம். ஏன் நீ இப்படியான கேள்விகள என்கிட்ட கேற்கிறாய்..?
(தந்தை ஆவேசமாகக் கேட்டார்)

மகன் : நான் தெரிஞ்சு கொள்ளனும்.  தயவு செய்து சொல்லுங்கப்பா.. ஒரு மணித்தியாலத்திற்கு நீங்க எவளவு காசு உழைப்பீங்க…?

தந்தை : நீ கட்டாயம் தெரிஞ்சுக்கனுமா..? சரி நான் ஒரு மணித்தியாலத்திற்கு 100/= சம்பாதிப்பன்

மகன் : ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..
(
என்று கவலையோடு தலையைக் குனிந்தான் அந்த சின்னப் பைய்யன்)
சிறிது மெளனத்தின் பின்னர்.
 அப்பா தயவுசெய்து எனக்கு ஒரு 50/= கடனாகத் தரமுடியுமா…?


தந்தைக்கு ஆத்திரம் அதிகரித்தது.
அப்போ நீ என்கிட்ட 50/= காசு வாங்கி வீணான விளையாட்டுப் பொருள் அல்லது தேவையில்லதா செலவு செய்யத்தான் இதெல்லாம் கேட்டிருக்காய் என்ன..? நீ எப்படி இப்படி சுயநலவாதியாய் மாறினாய்..? இந்த மாதிரி அற்ப விசயங்களுக்காகவா நான் இவளவு கஸ்ட்டப்பட்டு உழைக்கன்..?”

போ.. பேசாம உன் ரூமுக்குப் போய் தூங்கு போ..”
(
தந்தை ஆவேசாமாகக் கத்தினார்)

அந்தச் சின்னப் பைய்யனும் மிகுந்த கவலையோடு தலை குனிந்தபடியே தனது அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டான்.


 அவனுக்கு காசு வேண்டுமென்பதற்காகஅவன் எப்படி இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்கலாம்..?
மகனின் கேள்வியை நினைத்து தந்தைக்கு கோவம் உச்சத்தில்.


சில மணிநேரத்தின் பின் தந்தையின் கோவம் குறைந்தது. சிந்திக்கலானார்.
அவன் ஏன் காசு கேட்டான்..? அவன் அடிக்கடி என்னிடம் காசு கேட்டு கஸ்ட்டப்படுத்துவதில்லையே.. இப்போது காசு கேட்டிருகிறான் என்றால் நிச்சயமா அவனுக்கு ஏதோ முக்கியமான தேவை ஒன்றிருக்கு. அதனாலதான் அவன் 50/= கேட்டிருக்கிறான்.

இப்படி அமைதியாக யோசித்த தந்தை. நேரே தனது மகனின் அறைக்குச் சென்று மூடியிருந்த கதவைத் திறந்தார். கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்து

மகன்.. தூங்கிட்டீங்களா….?தந்தை கேட்டார்.


இல்லப்பாமுழிச்சிட்டுதான் இருக்கன்மகனின் பதில்.

நான் யோசிச்சு பாத்தன் மகன், நான் உங்ககிட்ட ரொம்பக் கோவமா நடந்துக்கிட்டன், ஒஃபீஸ்ல நிறைய வேலை, வீட்டுக்கு வருவதற்குக் கூட தாமதம், அந்தக் கோபத்த நான் உங்கமேல காட்டிட்டன். கவலப்படாதீங்க. இந்தாங்க நீங்க கேட்ட 50/=.

என்று அன்பொழுகப் பேசிய தந்தை தனது சட்டைப் பையிலிருந்து 50/= பணத்தை எடுத்து மகனிடம் கொடுத்தார்.

மகிழ்சியோடு தன் தந்தையைப் பார்த்த மகன் 
ஆஹ்ரொம்ப நன்றிப்பா” 

என்று குதூகலத்துடன் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டான்.

பின்னர் தனது தலையணைக்கு கீழே கைய்யைப் போட்டு கசங்கிய நிலையில் கிடந்த சில காசுத்தாள்களையும், நாணயக் குற்றிகளையும் எடுத்தான்.
ஏற்கனவே தன் மகனிடம் காசு இருப்பதைக் கண்ட தந்தைக்கு மீண்டும் கோவம் வந்தது.

ஆனால், அந்த சின்னப் பையனோ  தனது கைய்யிலுள்ள பணத்தை மெதுவாக எண்ணினான்.
எண்ணி முடிந்ததும் நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தான்.


ஏற்கனவே உன்கிட்ட காசு இருக்கு. அப்படி இருக்கும் போது ஏன் என்கிட்ட மேலதிகமா காசு கேட்டாய்” 
தந்தை கோபத்தோடு கேட்டார்.

ஏன்னா என்கிட்ட முதல்ல இருந்த காசு போதாது. ஆனா இப்போ சரியா இருக்கு

என்று சொன்ன அந்தச் சின்னப்பயன் தன் தந்தையை நோக்கி வந்து அவர் முன்னே நின்று

அப்பாஇதோ என்னிடம் 100/= இருக்கு. இதை வாங்கிக்கிட்டு உங்க நேரத்துல 1 மணித்தியாலத்தை எனக்குத் தரமுடியுமா…?” 
என்று கேட்டான்.
சில கண அமைதிக்குப் பின்னர் பையன் தொடர்ந்தான்.

அப்பா தயவு செய்து நாளைக்கு வீட்டுக்கு நேரத்தோட வாங்கப்பாஉங்க கூட இரவுச் சாப்பாட்ட சாப்பிடனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசைப்பா..
என்று கெஞ்சும் குரலில் கூறிய அவன் தனது கையிலிருந்த 100/= ஐ தன் தந்தையிடம் நீட்டினான்.

மகனின் வார்த்தைகளைக்கேட்ட தந்தை உடைந்தே போனார். தன் சின்ன மகனை அப்படியே தனது இரு கரங்களாலும் அள்ளி எடுத்து முத்தமிட்டார். தனது பிழைக்காக மகனிடம் கெஞ்சி மன்னிப்புக்கேட்டார்.

தந்தையின் கண்ணீரால் மகனின் உடல் நனைந்தது.



***
இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் இது. தொழிலுக்காக,பணத்துக்காக எமது நேரத்தை செலவிடும் நாங்கள். எம்மீது பாசம் வைத்திருப்பவர்களோடு பழக,பேச நேரத்தை ஒதுக்க முயற்சிப்பதில்லை.

நாங்கள் எவ்வளவுதான் கஸ்ட்டப்பட்டு உழைத்தாலும் நாளைக்கு நாங்கள் இறந்தபின் நாம் வேலை செய்த நிறுவனம் நஸ்ட்டப்படுவதும் இல்லை இழுத்து மூடப்படுவதுமில்லை. நமது இடத்திற்கு வேறொருவரைப் பிரதியிட்டு அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்கும்.

ஆனால் நமது குடும்பமும் உறவுகளும் நமது இழப்பினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நமது இழப்பானது அவர்கள் மரணிக்கும் வரை ஒரு பேரிழப்பாகவே இருக்கும்.

வாழ்கைக்கு பணம் தேவைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல..







Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

15 comments:

Mohamed Rizad M.B. சொன்னது…

காத்திரமான பதிவு, சிந்திக்க வைப்பதும் படிப்பினையுமாக இருக்கிறது, அது மட்டுமல்ல நடப்பு கால வாழ்க்கைக்கு ஏற்ற சிறந்த பதிவும் கூட, மேலும் பதிவுக்கு ஏற்ற படங்கள் இன்னும் பதிவை மெருகூட்டுகிறது,,,,
Suhail வாழ்த்துக்கள் :)

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Rizad M.B.நன்றி ரிசார்ட் நாநா..
இதைப்படிக்கும் போது என்னுள் ஒரு வித பாதிப்பை நான் உணர்ந்தேன்...

உண்மையில் மனதைத் தொடும் ஒரு கதை.

நன்றி வருகைக்கும்
கருத்திற்கும்

Unknown சொன்னது…

Really amazing and sentimental story.. Although already we have known this story, When I read here I felt different feeling.. Each and every parent must read this and consider this in their life..

Unknown சொன்னது…

Really it's an amazing and sentimental story.. Although already we know this story, when I read here I felt a different feeling.. Each and every parent must read this and consider in their life..

aiasuhail.blogspot.com சொன்னது…

@Inshirah

Ya dfntly inshira... well said.

anyway 1st time u cmntd on my post.
thnx

and keep in touch

மன்னார் அமுதன் சொன்னது…

அருமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள்... நெஞ்சைத் தொடும் வகையிலும், இறுதி வரி படிக்கையில் ஒரு துளிக் கண்ணீர் எட்டிப் பார்க்கும் படியாகவும் உள்ளது... அருமை...

யாதும் ஊரே., யாவரும் கேளீர். சொன்னது…

Superbb suhail.
Thanks for sharing with us.

Mohamed Faaique சொன்னது…

superb.. touch ful

aiasuhail.blogspot.com சொன்னது…

@மன்னார் அமுதன்
நன்றி சகோதரா...

உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி.

முதல் முறையாக எனது வலைப்பூவிற்கு வந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

aiasuhail.blogspot.com சொன்னது…

@யாதும் ஊரே., யாவரும் கேளீர்.

நன்றி.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique
நன்றி ஃபாய்க் சகோ...

நன்றி.

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) சொன்னது…

அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி சகோ

aiasuhail.blogspot.com சொன்னது…

@JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்)

நன்றி சகோ

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஷர்புதீன் சொன்னது…

good story
( although we know this story 2 year back)

wishes!

aiasuhail.blogspot.com சொன்னது…

@ஷர்புதீன்
May be. i also got this mail 2 yrs b4

thnk ur wish nd also 4 ur visit