RSS

ஒரு குயிலின் பயணம்

ஒரு வானொலி அறிவிப்பாளனாக என் வாழ்வில் கடந்த வருடம் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை சரியாக ஒருவருடத்தின் பின்னர் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.


இலங்கை வானொலியின் குயில் ராஜேஸ்வரி சண்முகம் அம்மா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கியும், அவரது முக்கிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியும் ஒரு குயிலின் பயணம் என்ற டீ.வீ.டீ கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 24ம் திகதி கொழும்பு எல்ஃபின்ஸ்டன் மண்டபத்தில் வெகு சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது..


அந்த டீ.வீ.டியில் ராஜேஸ்வரி சண்முகம் அம்மா அவர்களின் புகைப்படத் தொகுப்பிற்கு பிண்ணனிக் குரல் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது.

அந்த டீ.வீ.டியினை அக்னி எஃப்.எம் வெளியிட்டுவைத்திருந்தது..
அப்போது நான் அக்னி எஃப்.எம் இல் அறிவிப்பாளராக இருந்தமையினால் இவ்வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது.

உண்மையில் ராஜேஸ்வரி சண்முகம் அம்மா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு என்பதால் பல்தரப்பட்டவர்கள் இதைப்பார்க்கக் கூடும். எனவே பல தரப்பினரையும் சென்றடையும் இதை சிறப்பாக செய்யவேண்டும் என்பதே எனக்கிருந்த சவால்.
வானொலி அறிவிப்பில் போதிய அனுபவம் இல்லாத காலகட்டத்தில் பிண்ணனிக் குரல்கொடுத்திருந்தேன்

எப்படியிருக்கிறது..?

நீங்களும் பாத்துட்டு சொல்லுங்களேன்…..



இந்த குரல் ஒலிப்பதிவு டிரோன் பெர்னாண்டோ அவர்களின் ஒலிப்பதிவு கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது..
உண்மையில் ஒரு அறிவிப்பாளராக எனது பேச்சு சற்று வேகமானது. ஆனாலும் இது பிண்ணனிக் குரல் என்பதாலும், வாழ்க்கைக் குறிப்பு சொல்லப்படுவதாலும் சற்று மெதுவாக, ஆறுதலாக குரல் கொடுக்குமாறு கேட்டிருந்தார்கள். முயற்சி செய்தேன்…. சரியாக வந்துவிட்டது..
பல இடங்களில் ஒரு டேக்தான் சில இடங்களில் மட்டும் 2 அல்லது 3 டேக் தேவைப்பட்டது.

ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட சிறிய காட்சி அதையும் கொஞ்சம் பாருங்களேன்.


இங்கே என்னை அறியாமலே ஒரு விடயம் நடக்கிறது. அதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் இந்த காட்சியைப் பார்த்து நானே சிரித்துவிட்டேன். ஆனால் நீங்க சிரிக்கப்படாது..
ஆறுதலாக அமைதியாக பேச முயற்சி செய்ததால் இப்படி ஆயிருக்குமோ..??



உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிடுங்களேன். ப்ளீஸ்


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS