நம்ம அப்புகுட்டி காசு குடுத்து ரொம்ப கஸ்ட்டப்பட்டு பல்கலைக் கழகம் போனாருங்குறது… பழைய கத. அண்ணாத்த எப்படித்தான் எக்ஸாம் எழுதினாலும் பாஸ் ஆகவே முடியல. நம்ம பாஸ் என்கிர பாஸ்கரன் மாதிரித்தான் அப்புக் குட்டியும். பிட்டெல்லாம் பக்காவ எழுதிட்டுப் போனாலும் பாத்தெழுதவோ இல்ல அத வெச்சு பாஸ் பண்ணவோ நம்ம அப்புக் குட்டியால முடியல.
இப்போ Second Yearல இருக்கும் அப்புக்குட்டிக்கு First Year பாடங்கள் நிறைய அரியஸ் இருக்கு.
அத எழுத எக்ஸாம் ஹோள் வந்தா அப்புக்குட்டிய தவிர மத்த எல்லாருமே ஜூனியர் பசங்க.. அப்புக் குட்டிக்கு தர்ம சங்கடமான நில, வெக்கம் பசங்க மூஞ்சப் பாக்கவும் முடியல எக்ஸாம் எழுதவும் மண்டைக்க சரக்கு இல்ல. சீனியர் லெக்சரர் அப்புக் குட்டி பக்கத்துல நின்னு அவர் மேலையே கண்ண வெச்சிட்டிருந்ததால அப்புக்குட்டிக்கு கொண்டுவந்த பிட்டகூட பாத்தெழுத முடியல்ல..
இந்த நிலமைலதான் அப்புக் குட்டி மனசுல இந்த situation Song
போகுது..
(ராவணன் படம், உசுரே போகுதே பாடல் மெட்டு)
இந்த கெம்பஸுல எப்ப வந்து நானும் சேர்ந்தன்
இந்த எக்ஸாமுக்கு எதுக்கு நானும் வந்தன்...
அடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்
எக்ஸாம் பேப்பர் என்னமோ சிறிசுதான்
அடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்
எக்ஸாம் பேப்பர் என்னமோ... சிறிசுதான்
என் இதையம் ஓவரா துடிக்குதடி
கையெல்லாம் பயங்கரமா நடுங்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும்... பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க என்னால முடியலடி
Second Year ஆக நானிருந்தும்
First Year எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி
எனக்கும் எக்ஸாமுக்கும் தூரம் தூரம்
எழுத நெனக்குறன் முடியல
மனசு சொல்லும் குறுக்கு வழிய
செஞ்சு பாக்க என் மனசு கேக்கல
தவியா... தவிச்சு...
மனசு தடம் கெட்டு ஏதேதோ தோணுதடி
சீனியர்…. லெக்சரர்...
(என்ன) தள்ளி நின்னு பாத்து சிரிக்கிரார்டி
என் மண்டக் கிறுக்கு தீருமா...
என் நிலம இப்போதைக்கு மாறுமா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போடியம்மா...
சீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்
என் மானமும்... ரோசமும்... இப்போ காத்துல பறக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க என்னால முடியலடி
Second Year ஆக நானிருந்தும்
First Year எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி
இந்த கெம்பஸில இது ஒன்னும் புதிசில்ல
ஒன்னு ரெண்டு பிட்டடிக்கும் என்னப் போல
மனசு சொல்லி பிட்டெழுதிப்போட்டன் பொக்கட்டுல
அத எடுத்து பாக்க வழியுமில்ல
எட்ட இருக்கும் லெக்சரர பாத்து
என்னமோ தோணுது மனசுக்குள்ள
அங்கால அத்துன பேர் எக்சாம் எழுதினாலும்
அந்த மனுசன் என்ன விட்டுப் போகல
பிட்டடிக்கிரதா.. இல்லையா
முடிவுக்கு வர என்னால் முடியலையே
அந்தாள் (இங்க) நின்னா
என்னால் பயப்படாம பிட்டடிக்க முடியலையே
என் நெலம இவளவு கேவலமா
இந்தாள் அங்கால போகுமா
நான் தவிக்குறன்
இந்த மனுசன் சிரிக்கிறான்
சீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்
என் மானமும்... ரோசமும்.. இப்போ காத்துல பறக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே
எக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில
ஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்
பிட்டடிக்க என்னால முடியலடி
Second Year ஆக நானிருந்தும்
First Year எக்ஸாம் எழுதுறண்டி
பிட்டும் பேனாவும் முன்னாலிருந்தும்
ஒரு வரிகூட எழுத முடியலடி
5 comments:
சகோதரா மிகவும் ரசிக்கக் கூடிய பதிவுகளில் ஒன்று வாழ்த்துக்கள்....
பதிவுலகில் இன்னும் சிறக்க என் வாழ்த்துக்கள்...
நன்றி சகோதரா...
தொடர்ந்தும் என் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்...
கலக்கல்
நன்றி பட்டாபட்டி அண்ணாத்த...
நீண்ட நாட்களுக்குப் பிறகு கொமெண்ட் மூலமா வந்திருக்கீங்க நன்றி அண்ணாத்த
கருத்துரையிடுக